5 மாநிலத் தேர்தல்களில் பாஜக தோற்கும்: டி.ராஜா
சென்னை, ஜன. 6 – 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தல்களில் பாஜக தோற்கும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி.ராஜா கூறினார். இதுதொடர்பாக வியாழனன்று (ஜன.6) சென்னையில் செய்தியாளர்க ளிடம் அவர் கூறியதாவது: ஒன்றிய பாஜக அரசு அரசியல மைப்புச் சட்டம், ஜனநாயக நெறிமுறைகள், கூட்டாட்சித் தத்துவத்தை தகர்த்து வருகிறது. மாநில உரிமைகளை பறிக்கிறது. மாநில மக்களின் உணர்வுகளுக்கு மாறாக செயல்படுகிறது. கல்வியை வணிகமயமாக்குவது, தனியார்மயமாக் குவது என்பதோடு, மாநில உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கையை திணிக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயாக்குவது தேசவிரோத செயலாகும். தனியார்மயமாக்கும் போது மாநில அரசுகளை கலந்து பேசாதது எதேச்சதிகரமானது. சட்ட மன்றம் நிறைவேற்றிய தீர்மானங்களை குடியரசு தலைவருக்கு அனுப்பாமல், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளுக்கு எதிராக ஆளுநர்கள் கருத்து தெரி விக்கின்றனர். எனவே, அரசியலமைப்புச் சட்டத் தையும் அதன் மாண்புகளையும் பாது காக்க மோடி அரசு அகற்ற வேண்டும். அதற்கு, ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும். பாஜகவிற்கு எதிராக மக்கள் கிளர்ந்தெழ தொடங்கி விட்டனர். உ.பி., பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் மாநில சட்ட மன்றத் தேர்தல்களில் பாஜக தோற்கும். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு அக்டோபர் மாதம் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் நடை பெற உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.