மரணப்பிடியில் லட்சக்கணக்கான மக்கள்
காபூல், ஜன.6- அமெரிக்கா விதித்துள்ள தடைகள், கடும் குளிர் மற்றும் பட்டினி ஆகியவற்றால் ஆப் கானிஸ்தானில் லட்சக்கணக்கான மக்கள் இறக்கும் தருவாயில் இருக்கிறார்கள் என்று சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆப்கா னிஸ்தான் பிரிவின் தலைவர் எலோய் பில்லியன் கூறியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் செய்தியில், “இன்று காபூலில் கடும் குளிர் வீசுகிறது. மைனஸ் 9 டிகிரி கடும் பாதிப்பை ஏற்படுத்தி யுள்ளது. தங்களைக் குளிரிலிருந்து காப்பாற்றிக் கொள்வதற்காக மக்கள் தங்களிடம் உள்ள மரச் மான்களை எரித்துக் கொண்டிருக் கிறார்கள். தங்கள் காலணிகள் மற்றும் வாகனங்களின் டயர்களை யும் எரிக்கிறார்கள்” என்று கூறி யுள்ளார். ஆப்கனில் நிலவும் நெருக்கடி குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர், “ஆப்கனில் பொருளாதாரம் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. சவால்கள் அதிகரித்து வருகின் றன. அவற்றை எதிர்கொள்ள முடி யாமல் ஆயிரக்கணக்கான மக்கள் நெருக்கடியில் சிக்கியிருக்கிறார் கள்” என்று தனது கவலையை வெளியிட்டிருக்கிறார். சர்வதேச அளவிலான உதவிகள் அவசரத் தேவை என்றும் அவர் கோரியிருக் கிறார்.
கடும் பட்டினி
ஆப்கானிஸ்தான் மக்களில் 2 கோடியே 30 லட்சம் பேர், அதாவது 55 விழுக்காட்டினர், கடும் பட்டினி யால் வாடிக் கொண்டிருக்கிறார் கள். கடும் குளிரால் இவர்களின் துயரம் அதிகரித்திருக்கிறது. ஆப் கானிஸ்தானில் உள்ள மாகா ணங்களில் பெரும்பாலானவற்றில் கடும் குளிர் இருக்கிறது. பெரும் மனிதாபிமான ரீதியான நெருக்க டியை ஆப்கானிஸ்தானில் உள்ள மக்கள் சந்தித்துக் கொண்டிருக்கி றார்கள். ஆப்கானிஸ்தானுக்கு சொந்தமான சொத்துக்களை அமெ ரிக்கா மற்றும் அதன் கூட்டாளி நாடுகள் முடக்கி விட்டதால் பொருளாதார நெருக்கடி அதிக ரித்துள்ளது. குளிர்காலத்தில் உணவுப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் அமைப்புகள் ஏற்கனவே எச்சரித்திருந்தன. சுமார் 10 லட்சம் குழந்தைகள் பட்டினியால் துயரத்தில் சிக்குவார்கள் என்றும், போதிய நடவடிக்கைகள் எடுக் கப்படாவிட்டால் அவர்கள் இறக்கும் அவலமும் ஏற்படலாம் என்று எச்சரித்தது குறிப்பிடத் தக்கதாகும்.