15 காலியிடங்களுக்கு 11 ஆயிரம் பட்டதாரிகள் போட்டி!
பாஜக ஆளும் ம.பி. மாநில அவலம்
போபால், டிச.30- மத்தியப் பிரதேச மாநிலத்தில், சிவ ராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு அண்மையில் அறிவிக்கப்பட்ட 15 காலிப்பணியிடங்களுக்கு 11 ஆயி ரம் பட்டதாரிகள் விண்ணப்பித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வளவுக்கும் பியூன், ஓட்டுநர், வாட்ச்மேன் உள்ளிட்ட வேலைகளுக் குத்தான் இந்த காலிப் பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி இருந்தது. கல்வித் தகுதியாகவும் வெறும் 10-ஆம் வகுப்பே நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. ஆனால், இந்த 15 காலியிடங்க ளுக்கு 11 ஆயிரம் பட்டதாரிகள் விண் ணப்பித்துள்ளனர். இவர்களில் பி.இ., எம்.பி.ஏ. படித்த பட்டதாரிகள் மட்டு மன்றி, சட்டம் படித்தவர்களும் கூட இடம்பெற்றிருப்பது, ம.பி. மாநில வேலையில்லாத் திண்டாட்டத்தின் அவலத்தை காட்டுவதாக அமைந் துள்ளது.
இதுகுறித்து, அஜய் பாகேல் என்ற விண்ணப்பதாரர் அளித்துள்ள பேட்டி யில், “நான் அறிவியல் பட்டதாரி. பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள் ளேன். இந்த வேலைக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் கூட போட்டி போட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார். அதேபோல, சட்டம் பயின்றவரான ஜிதேந்திர மவுரியா என்பவர், “நான் ஓட்டுநர் பணிக்கு விண்ணப்பித்துள் ளேன். நீதிபதிகள் தேர்வுக்கு தயாரா கிக் கொண்டிருக்கிறேன். இந்த வேலை கிடைத்தால், அதன்மூலம் வரும் வரு மானம், நான் புத்தகம் வாங்குவதற்கா வது பயன்படும் என்பதால் இந்த வேலைக்கு விண்ணப்பித்துள்ளேன்” என்று கூறியுள்ளார். இந்த வேலைக்காக மத்தியப் பிர தேச மாநிலத்திற்குள் மட்டுமன்றி, பாஜக ஆட்சி நடக்கும் மற்றொரு மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்தும் இளைஞர்கள் விண்ணப் பித்திருப்பதாக கூறப்படுகிறது. அவ்வாறு வந்துள்ள அல்தாப் என்ப வர், தான் உத்தரப் பிரதேசத்தில் இருந்து வந்துள்ளதாகவும் பியூன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளதாக வும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் ம.பி. முதல்வர் சிவ ராஜ் சிங் சவுகான் பேசுகையில், “ம.பி. மாநிலத்தில் நாங்கள் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலை வாய்ப்பை உரு வாக்குவோம். காலிப்பணியிடங் களை நிரப்புவதில் சிறு சுணக்கம் கூட இல்லாமல் பார்த்துக் கொள்வோம். எல்லோரும் அரசு வேலை பெறவே விரும்புகின்றனர். அதற்கேற்ப ஒவ் வொரு மாணவருக்குமே அரசு வேலை கிடைக்கும் என உறுதியளிக்கிறேன்” என்று ஜம்பம் அடித்திருந்தார். ஆனால், மத்தியப் பிரதேசத்தில் வேலையில்லாதோர் எண்ணிக்கை 32 லட்சத்து 57 ஆயிரத்து 136 என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியப் பொருளாதார கண்கா ணிப்பு மையம் (CMIE) என்ற அமைப் பின் ஆய்வின்படி மத்தியப் பிர தேசத்தில் வேலைவாய்ப்பின்மை 1.7 சதவிகிதம்தான் என்றாலும், தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட அறிக்கையானது, ம.பி. மாநிலத்தில் கடந்த ஆண்டு மட்டும் வேலையின்மை காரணமாக 95 பேர் தற்கொலை செய்து கொண்டு இறந்திருப்பதாக தெரிவிக்கிறது. அண்மையில் சாலையோர வியா பாரிகளுக்கான அரசுத் திட்டத்தில் பயன்பெற 15 லட்சம் பேர் விண் ணப்பித்தனர். இவர்களில் 99 ஆயிரம் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களி லும் 90 சதவிகிதம் பேர் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.