கர்நாடக மாநில இந்துக் கோயில்கள் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிப்பு?
பெங்களூரு, டிச.30- கர்நாடக மாநில பாஜக அரசு, நாளுக்கு நாள் ‘இந்துத்துவா’ நாசகரப் பாதையில் தீவிர நடைப்போட்டு வரு கிறது. கடந்தவாரம் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை (Protection of Right to Freedom of Religion Bill, 2021) சட்டப்பேரவையில் நிறைவேற்றிய, பசவராஜ் பொம்மை தலைமையிலான மாநில பாஜக அரசு, அதனை நடை முறைக்கு கொண்டுவர உள்ளதாக வும் அறிவித்துள்ளது. இதற்கு கர்நாட கத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனிடையே, இந்துக் கோவில களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் வகையில் மற் றொரு புதிய சட்டத்தையும் விரைவில் கொண்டுவர உள்ளதாக முதல்வர் பசவ ராஜ் பொம்மை அடுத்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளார். ஹூப்ளியில் நடைபெற்ற பாஜக செயற்குழு கூட்டத் தில் பேசும்போது இதனை அவர் தெரி வித்துள்ளார்.
“தற்போது, கர்நாடக மாநிலத்தில் உள்ள இந்துக் கோவில்கள் பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் மற்றும் விதிகளின் கீழ் உள்ளன. அதிகாரத்தின் கட்டுப்பாட்டில் தவித்து வரும் கோவில் களை இனி அரசு சுதந்திரமாக செயல் பட வைக்கப்போகிறது. இதன்படி, கோவில் நிர்வாகங்களே இனி கோவில் மேம்பாட்டுப் பணிகளை கவனித்துக் கொள்ளும் உரிமையை புதிய சட்டம் மூலம் கர்நாடக அரசு வழங்கப் போகி றது. கோவில்களை மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கும் வகையிலான சட்ட மசோதா அடுத்த சட்டமன்ற கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்படும். இந்த வரலாற்று சிறப்பு மிக்க நடவடிக்கை மூத்த தலைவர் களின் ஆலோசனைக்கு பின்னர் மேற் கொள்ளப்படும். பட்ஜெட் கூட்டத்தொட ருக்கு முன்பாகவே இந்த சட்டமசோதா தாக்கல் செய்யப்படும். இதன் மூலம் எவ்வித கட்டுப்பாடுகளுக்கும் ஆளாகா மல் கோவில்கள் சுதந்திரமாக இயங் கும்” என்று பொம்மை கூறியுள்ளார்.