லெனின் வகுத்த கட்சி வாழ்க்கை நியதிகளை, கோட்பாடுகளை உறுதிபடப் பற்றி நிற்போம்! – தோழர் கே.சுப்பராயன்
பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் இரத்தத்தாலும், வியர்வையாலும் கட்டப்பட்டது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி !
இது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் இந்தியப் படைப்பிரிவு!
பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப்பிடிக்கிற கட்சி இது!
உலகெங்குமுள்ள தேசிய இனங்களின் மொழியை, பண்பாட்டை, அதன் மூலங்களைக் காப்பாற்றி வளர்ப்பதில் முன்வரிசையில் நின்று முனைப்போடு போராடும் கட்சி இது!
இதன் வரலாறு வீரமும், சோகமும், விவேகமும் நிறைந்ததாகும்! இந்தியத் தொழிலாளி வர்க்கத்திற்கும், வேளாண் குடிமக்களுக்கும், இதர ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பரிபூரண விடுதலை அளிக்கும், விஞ்ஞான சோசலிச சமூக அமைப்பைக் கட்டி அமைக்க, தன்னை அர்ப்பணித்துக் கொண்ட புரட்சிகரக் கட்சி இது!
மிருகங்களால் கூடத் தாங்கமுடியாத சித்திரவதைகளை, அடக்குமுறைகளைத் தாங்கி வளர்ந்த, தியாகத் திருவிளக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!
இரத்த சாட்சிகளே, உங்கள் பெயரால் சங்கற்பம் ஏற்கிறோம்! இந்தியாவில் விஞ்ஞான சோசலிச சமுதாயத்தைப் படைக்க, உங்கள் வழியில் தொடர்ந்து போராடுவோம்!
லெனின் வகுத்த கட்சி வாழ்க்கை நியதிகளை, கோட்பாடுகளை உறுதிபடப் பற்றி நிற்போம்!
தோழர்கே.சுப்பராயன் MP அவர்களின் முகநூல் பதிவிலிருந்து…