தமிழகம்

ஊதிய நிலுவைத் தொகை, கொரானா ஊக்கத் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும் – தமிழக அரசுக்கு டாக்டர் ஏ.ஆர்.சாந்தி வேண்டுகோள்

ஊதிய நிலுவைத் தொகை, கொரானா ஊக்கத் தொகை உடனடியாக வழங்கிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு ஆரம்பசுகாதார நிலைய R.C.H ஒப்பந்த சுகாதார துப்புரவுபணியாளர்கள் நலச்சங்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர்ஏ.ஆர்.சாந்தி தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 2005 ஆம் ஆண்டு முதல் R.C.H. திட்டத்தின் கீழ், தற்காலிக அடிப்படையில் 3140 க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பத்து, பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு மாதம்தோறும் ரூபாய் 1500 என்ற மிக மிக குறைவான தொகுப் பூதியமே வழங்கப்படுகிறது.அவர்கள் நாள் தோறும் தொடர்ந்து பனிரெண்டு மணிநேரம், வாரவிடுமுறை மற்றும் அரசு விடுமுறை கூட இல்லாமல் பணிசெய்ய வைக்கப்படுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் , பட்டியலின சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்பதும், பெண்கள் என்பதும், பொருளாதார ரீதியில் வறுமைக் கோட்டிற்கும் கீழ் உள்ளவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. #

இவர்களுக்குப் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு, 8 மணி நேர வேலை, வாரவிடுமுறை, அரசு விடுமுறை இலவச சீருடை, இலவசப் பேருந்து பயண அடையாள அட்டை வழங்கிட வேண்டும். வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்க வேண்டும். அவர்களின் கௌரவமும் , சுயமரியாதையும் காக்கப்பட வேண்டும் போன்ற நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து போராடி வருகின்றனர்..

# இந்நிலையில் இவர்களில் பலருக்கு பல மாதங்களாக இக்குறைந்த ஊதியமும் வழங்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன வேதனையில், பொருளாதார சிக்கலில் உள்ளனர். எனவே ஊதிய பாக்கியை உடனடியாக வழங்கிட வேண்டும்.

# கொரோனாப் பணிக்கான சிறப்பு ஊக்கத் தொகை சில மாவட்டங்களில் , சில மருத்துவ மனைகளில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. கொரோனாப் பணிக்கான சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படாதவர்களுக்கு , உடனடியாக வழங்கிட வேண்டும்.

.# எனவே, பல்வேறு மக்கள் நலன் சார்ந்த மருத்துவத் திட்டங்களை சிறப்பாக நடைமுறைப் படுத்தி வரும் தமிழ்நாடு அரசு, இந்தத் தூய்மைப் பணியாளர்களின் பணிநிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளையும் உடனடியாக ஏற்க வேண்டுமென தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதாரநிலைய R.C.H ஒப்பந்த சுகாதார துப்புரவுபணியாளர்கள் நலச்சங்கம் கேட்டுக் கொள்கிறது.

டாக்டர் ஏ.ஆர்.சாந்தி,

பொதுச்செயலாளர், தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதாரநிலைய R.C.H ஒப்பந்தசுகாதார துப்புரவு பணியாளர்கள் நலச் சங்கம்.

தொடர்புக்கு : 9444181955 9443285844 9940664343

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button