2,400 பெண்கள் படுகொலை ஏமன் மீதான சவூதி தாக்குதலில் துயரம்
சனா, டிச.10- ஏமன் மீது சவூதி அரேபியா தலைமையிலான ராணுவத்தாக்குத லில் இதுவரையில் 2 ஆயிரத்து 400 பெண்கள் கொல்லப்பட்டுள்ளதாக உரிமைகள் அமைப்பு ஒன்றின் ஆய்வில் தெரிய வந்துள்ளது. ஏமனில் தனது ஆதரவு அரசைக் கவிழ்த்துவிட்டு, புதிய அரசு அமைக்கப்பட்டதால் அந்நாட்டின் மீது சவூதி அரேபியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஏழு ஆண்டு களாக நடைபெறும் இந்தத் தாக்கு தல்களில் ஏராளமாக அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி சொந்த நாட்டிலேயே அகதிகளைப் போன்று முகாம்களில் வாழ்கிறார்கள். ஏமன் தலைநகர் சனாவில் இயங்கி வரும் என்டெசப் என்ற மனித உரிமை கள் அமைப்பு, சவூதி அரேபியா வின் தாக்குதல்களால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தது. இந்த அமைப்பு, பெண்கள் மற்றும் குழந்தைகளின் உரிமை களுக்காகக் குரல் கொடுக்கும் அமைப்பு என்பதால் அவர்களைப் பற்றிய ஆய்வை நடத்தியது. கடந்த ஏழு ஆண்டுகளாக நடத்தப் பட்டு வரும் இந்தத் தாக்குதல்களில் இதுவரையில் 2 ஆயிரத்து 412 பெண் கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். அதோடு, 2 ஆயிரத்து 825 பெண்கள் காயமடைந்துள்ளனர்.
சவூதி அரேபியாவின் போர் விமா னங்கள் அப்பாவி மக்கள் குடி யிருக்கும் பகுதிகளைக் குறிவைத்தும் குண்டுகளை வீசி வருகிறது. அதோடு, ஏமன் மீது சட்டவிரோதமாக பொரு ளாதார மற்றும் வணிக ரீதியான தடை களையும் சவூதி அரேபியா விதித்துள் ளது. அந்தத் தடைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கடுமை யாகப் பாதித்திருக்கிறது. அதிலும், சவூதி அரேபியாவின் கட்டுப்பாட்டுக் குள் இருக்கும் சில ஏமன் பகுதி களில் வாழும் பெண்களின் நிலைமை படுமோசமாக உள்ளது. சவூதியின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் பகுதிகளில் பெண்கள் மீதான வன்முறையும் அதிகரித்துள் ளது. கட்டாயக் கருக்கலைப்பு, குறைப் பிரசவம், போதிய மருத்துவ வசதி யின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்ச னைகளால் பெரும் நெருக்கடியில் பெண்கள் சிக்கியிருக்கிறார்கள் என்று என்டெசப் மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை கூறுகிறது.