பிரதமர் மோடிக்கு சஞ்சய் ராவத் கேள்வி ராணுவம் நவீனமயமாக்கப்பட்டது எனில், விபத்து நேர்ந்தது எப்படி?
மும்பை, டிச. 10 – முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளிட்ட 13 பேர் பலியான சம்பவத் தில், மக்களுக்கு ஏற்பட்டுள்ள சந்தேக த்தை ஒன்றிய அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று சிவசேனா மூத்த தலை வரும், அக்கட்சியின் எம்.பி.யுமான சஞ்சய் ராவத் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது: “அண்மைக் காலங்களில் சீனா மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக நாட்டின் ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியதில் பிபின் ராவத் முக்கிய பங்காற்றியிருக்கிறார். புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தானுக்கு எதிரான விமானப் படை தாக்குதல்களை நடத்தியதிலும் முக்கியப் பங்கு பிபின் ராவத்துக்கு இருந்தது. எனவே, இப்படி ஒரு விபத்து நடந்திருப்பது,
மக்களிடையே பல்வேறு சந்தேகத்தை கிளப்பி யிருக்கிறது. ஜெனரல் பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் மிகவும் நவீன ரகமானது. அதில் இரட்டை இஞ்சின்கள் பொருத்தப்பட்டிருந்ததை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். பாதுகாப்புப் படைகளை நவீனப்படுத்தியுள்ளதாக (பிரதமர் மோடி) பிரகடனம் செய்து கொண்டி ருக்கும் நிலையில் இந்த விபத்து எப்படி சாத்தியம்? இந்த விபத்தால் முழு நாடும், தலைமையும் குழப்பமடைந்திருக்க லாம். எனவே, பாதுகாப்பு அமைச்சரோ அல்லது பிரதமரோ அனைத்து சந்தேகங்களையும் நீக்க வேண்டும். இவ்வாறு சஞ்சய் ராவத் கூறி யுள்ளார்.