6 மாதத்திற்குப் பிறகு வங்கிக் கணக்கில் பணம் ஒருவழியாக சமையல் சிலிண்டருக்கு மானியத்தை வழங்கியது மோடி அரசு!
புதுதில்லி, நவ. 26 – சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 1000-ஐ தொடும் நிலை யில், நீண்ட காலத்திற்குப் பிறகு மோடி அரசாங்கம் மக்கள் மீது இரக்கம் காட்டியுள்ளது. மீண்டும் வங்கிக் கணக்கில் சிலிண்டருக் கான மானியத்தை வழங்க ஆரம்பித்துள்ளது. வீட்டுப் பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் களுக்கு அரசாங்கம் மானியம் வழங்கி வருகிறது. அதிகபட்சமாக ஆண்டு ஒன்றுக்கு 12 சிலிண்டர் களுக்கு இந்த எரிவாயு மானியம் கிடைக்கும். இது நேரடியாகவே பயனாளிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். 2019 ஏப்ரலில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 722 ஆக இருந்த போது, மானியமாக 238 ரூபாய் 27 காசுகள் வழங்கப்பட்டது. இது படிப்படியாகக் குறைந்து, 2021 பிப்ரவரி 15 அன்று எரிவாயு சிலிண்டர் விலை ரூ. 785 ஆக இருந்த போது, மானியம் வெறும் 24 ரூபாய் 95 காசுகள் மட்டுமே கிடைத்தது.
மே மாதத்திலிருந்து இதுவும் கிடைக்க வில்லை. எரிவாயு சிலிண்டர் மானி யத்தை நிறுத்துவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளி யாகாவிட்டாலும் வங்கிக்கணக்கி ற்கு மானியத் தொகை வரவில்லை. இந்நிலையில், சிலிண்டர் விலை தற்போது 1000 ரூபாயைத் தொட்டிருப்பது, மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ள தால், மானியத் தொகையை ஒன்றிய அரசு மீண்டும் வழங்க ஆரம்பித்துள் ளது. முன்பு சிலிண்டர் வாங்கும் போது வழங்கப்பட்டு வந்த மானியம் ரூ. 20 முதல் ரூ. 30 ஆக குறைக்கப் பட்டு இருந்தது. இது தற்போது 300 ரூபாய் வரை உயர்த்தப் பட்டுள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் எரிவாயு சிலிண்டர்பெறுபவர் கள், இதற்கு முன்பு 174 ரூபாய் 86 காசுகளை மானியமாக பெற்று வந்த நிலையில், தற்போது 312 ரூபாய் 48 காசுகள் அளவிற்கு வழங்கப் பட உள்ளது. இதேபோல முன்பு 153 ரூபாய் 86 காசுகளை மானியமாக பெற்றவர்கள் தற்போது 291 ரூபாய் 48 காசுகளை மானியமாக பெறு வார்கள் என்று கூறப்படுகிறது.