ஆர்ஜேடி விழாவில் லாலு பிரசாத் உற்சாகம் ஒன்றிய அரசின் ஆணவத்தை விவசாயிகள் நொறுக்கிவிட்டனர்!
பாட்னா, நவ. 26 – “வேளாண் சட்டங்களை திரும் பப் பெறுவதாக பிரதமர் மோடி அறி வித்திருப்பது அவரது அரசின் தோல்வி, மறுபுறத்தில் அது விவ சாயிகளுக்கு கிடைத்த வெற்றி!” என்று ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD) தலைவர் லாலு பிரசாத் தெரி வித்துள்ளார். ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சி- யின் 25-ஆவது ஆண்டு விழாவில் லாலு மேலும்கூறியிருப்பதாவது: உலகின் நீண்ட கால அமைதியான மற்றும் ஜனநாயக வழி அறப்போராட்டத்தை நடத் திய விவசாயிகளுக்கு வாழ்த்துக்கள். முத லாளித்துவ அரசும் அதன் அமைச்சர் களும் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே நம்பிக்கையின்மையை வளர்த்தனர். சத்தி யாகிரக வழியில் போராடும் விவசாயிகளைப் பார்த்து பயங்கரவாதிகள், காலிஸ்தானி யர்கள், தேச விரோதிகள் என்றெல்லாம் வர்ணித்தனர். இன்று விவசாயிகள் வென்றுள்ளனர். ஒன்றிய அரசு தோல்வியைத் தழுவியுள்ளது. ஒன்றிய அரசின் ஆணவம், திமிர் அடித்து நொறுக்கப் பட்டுள்ளது. நீண்ட நாட்களாக போராடி நன்மைக்காக உயிர்த் தியாகம் செய்த விவ சாயிகளை நான் ஆராதிக் கிறேன். நாடு எப்போதும் கட்டுப்பாடு, கண்ணியம், சகிப்புத்தன்மையில் நடக்கிறது. நியாயமான – அனைவரையும் உள்ளடக்கிய ஜனநாயக முடிவுகளால்தான் நாட்டை நடத்த முடியும். மல்யுத்தம் செய்வ தால் அல்ல. இன்று நரேந்திர மோடியின் ஆணவம் தோற்கடிக்கப்பட்டு இருக்கிறது. ஆனாலும், குறைந்தபட்ச ஆதரவு விலைக்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். இவ்வாறு லாலு பிரசாத் கூறியுள்ளார்.