அமேசான் காடுகள் வளம் 15 ஆண்டுகளில் இல்லாத அழிவு
பிரேசிலியா, நவ.21- பிரேசிலில் உள்ள அமேசான் காட்டுப் பகுதிகள் அழிவது கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருக்கிறது. பிரேசிலில் வலதுசாரியான போல்சனா ரோ ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு காட்டு வளம் அழிவது அதிகரித்து வரு கிறது. திட்டமிட்டே காட்டுப்பகுதிகளில் தீ வைப்பு உள்ளிட்ட நிகழ்வுகள் நடக்கின் றன. இது குறித்த ஆய்வுகள் அதிர்ச்சிகர மான தகவல்களை நமக்குத் தருகின்றன. புரோடெஸ் என்ற தேசிய கண்கா ணிப்பு மையம் தனது ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. காட்டு வளம் பற்றிய தங்கள் ஆய்வுக்கு ஆகஸ்டு 2020 முதல் ஜூலை 2021 வரையிலான காலகட்ட த்தை எடுத்துக் கொண்டது. இந்தக் கால கட்டத்தில் 22 சதவிகித அழிவு அதிகமாக ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வந்தது. இது 2006 ஆம் ஆண்டுக்குப்பிறகு, அதாவது 15 ஆண்டுகளில், ஏற்பட்டுள்ள பெரும் அழிவு என்று தெரிகிறது. கடுமையான நெருக்கடிக்கு உள்ளான தால், சுற்றுச்சூழல் குறித்த இலக்கு களைத் தான் நிறைவேற்றி விடுவேன் என்று அமெரிக்காவிடம் பிரேசில் கெஞ்சிக் கொண்டிருக்கிறது. அண்மையில் அக்டோ பர் 27 ஆம் தேதி முதல் சுற்றுச்சூழல் மாநாடு கிளாஸ்கோவில் நடந்தது.
அந்த மாநாட்டி லும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனைத் திருப்திப்படுத்து வகையில் பேசுவதில் போல்சனாரோ குறியாக இருந்தார். ஆனால், இந்த ஆய்வு என்பது கிளாஸ்கோ மாநாட்டிற்கு முன்பாக எடுக்கப்பட்ட ஆய்வாகும். பிரேசில் அமேசானில் உள்ள மழைக்காடுகளில் 13 ஆயிரத்து 235 சதுர கி.மீட்டரை பூமி இழந்திருக்கிறது. கடந்த பல ஆண்டுகளில் ஒரு ஆண்டுக்கு பத்தாயிரம் ச.கி.மீக்கு மேல் இந்த அழிவு ஏற்பட்டதில்லை. மோசமாகும் நிலைமை 2021-2022 ஆண்டுக்கான காட்டு வளம் அழிவது பற்றி மேற்கொள்ளப்பட்ட சில முதற்கட்ட ஆய்வுகள் நிலைமை படுமோச மாகியிருப்பதைக் காட்டுகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் அழிக்கப்பட்ட காட்டு வளத்தின் சராசரி பெரும் அளவில் அதி கரித்திருக்கிறது. இது முதற்கட்ட ஆய்வுத் தகவல்கள் என்றாலும், இறுதிக்கட்ட ஆய்வறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில்தான் அமையும் என்று பிரேசில் சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.