குருத்வாராக்களை வழங்கிய சீக்கியர்கள் முஸ்லிம்களின் தொழுகைக்கு சொந்த இடத்தை தந்த அக்சய் ராய்
குர்கான், நவ. 19 – தில்லிக்கு அருகிலுள்ள தொழில்நகரம் குர்கான். இங்கு வட மாநிலங்களைச் சேர்ந்த முஸ்லிம் தொழிலாளர்கள் பெருமளவில் பணியாற்றி வருகின்றனர். ஆனால், இங்கு மூன்று மசூதிகள் மட்டுமே இருப்பதால், வெள்ளிக்கிழமையன்று சிறப்பு தொழுகை நாட்களில், பொது இடங்களிலேயே தங்களின் கூட்டுத் தொழுகையை அவர்கள் நடத்தி வந்தனர். குர்கான் மாநகராட்சியும் பொதுவெளி தொழுகைக்காக 106 இடங்களை ஒதுக்கிக் கொடுத்திருந்தது. ஆனால், பொதுவெளித் தொழுகைக்கு 22 இந்துத்துவா இயக்கங்களின் கூட்டமைப்பான ‘சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதி’ தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதனால், ஒருகட்டத்தில் தொழுகை நடத்தும் இடங்கள் 29 ஆக சுருங்கியது. ஆனால், இதற்கும் எதிர்ப்பு தெரிவித்த இந்துத்துவா கும்பல், கடந்த வாரம் தொழுகைக் கூட்டத்திற்குள் புகுந்து கலவர முயற்சியில் இறங்கியது. இதையடுத்து, குர்கான் மாநகராட்சி 8 இடங்களில் பொதுவெளி தொழுகைக்கு தடை விதித்தது. முஸ்லிம்களும் அதனை ஏற்றுக் கொண்டனர்.
ஆனால், முஸ்லிம்கள் தொழுகை நடத்தக் கூடாது என்று கூறிவிட்டு, அந்த இடங்களில் ‘சன்யுக்த் இந்து சங்கர்ஷ் சமிதி’ அமைப்பினர் கோவர்த்தன் பூஜை யை நடத்தினர். தில்லி மதக்கல வரப் பேர்வழியும், பாஜக பிரமுக ருமான கபில் மிஸ்ரா இந்த பூஜையில் கலந்து கொண்டார். இதனிடையே, குர்கானில் முஸ்லிம்கள் தொழுகை நடத்து வதற்கு, சாதாரண இந்துக்களும் சீக்கியர்களும் தங்களின் சொந்த இடத்தை வழங்குவதற்கு முன்வந்துள்ளனர். செக்டர் 12 பகுதியிலுள்ள தனது சொந்த இடத்தில், 25 பேர் தொழுகை நடத்த முடியும் என்றும், அதை முஸ்லிம் சகோதரர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் இந்து மதத்தை சேர்ந்தவரான அக்ஷய் ராய் அறிவித்துள்ளார். அதேபோல, சீக்கியர்களின் அமைப்பான குருத்வாரா குரு சிங் சபாவின் தலைவர் ஷெர்தில் சிங் சந்து-வும் தங்கள் இடத்தை அனைத்து மதத்தினரும் வழிபாட்டு க்கு பயன்படுத்திக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளார்.
இஸ்லாம் சமூகம் இடப்பற் றாக்குறையால் பிரச்சனைகளை எதிர்கொள்கிறது, எனவே அவர்கள் எங்கள் ஐந்து குருத்வாராக் களின் வளாகத்தை வெள்ளிக் கிழமை தொழுகைக்கு பயன்படு த்தலாம். எல்லா மதங்களும் ஒன்றுதான், மனிதநேயம் மற்றும் மனித விழுமியங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். குருத்வாராவுக்கு சொந்தமான இந்த இடங்களில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம் முதல் 2 ஆயிரத்து 500 பேர் வரை இருக்கலாம் என்பதால், இது இஸ்லாமியர்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.