தீபம் செயலாளர் துகின் காந்த பாண்டே தகவல் 2022 ஜனவரிக்குள் 6 பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயம்..!
புதுதில்லி, நவ. 19 – ‘ஏர் இந்தியா’, ‘பாரத் பெட்ரோலியம்’, ‘ஷிப்பிங் கார்ப்பரேசன் ஆப் இந்தியா’, ‘கன் டெய்னர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா’, ‘பவன் ஹான்ஸ்’, ‘பிஇஎம்எல்’, ‘நீலாச்சல் இஸ்பத் நிகாம்’ ஆகியவற்றின் பங்குகளை நடப்பாண்டே விற்றுவிட வேண்டும் என்று மோடி அரசு தீவிரமாக உள்ளது. இதன்மூலம் 2021-22 நிதியாண்டில் ரூ. 1 லட்சத்து 75 ஆயிரம் கோடி நிதியைத் திரட்ட வேண்டும் என்பது மோடி அரசின் இலக்கா கும். ‘ஏர் இந்தியா’வை டாடா குழுமத்திற்கு வெறும் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு கொடுத்து விட்ட நிலையில், ஏனைய பொதுத் துறை நிறுவனங்களையும் 2022 ஜன வரிக்குள் தனியாருக்கு விற்று முடிக்க அது தீர்மானித்துள்ளது. இந்நிலையில், இந்திய தொழில் கூட்ட மைப்பு (ஊஐஐ) ஏற்பாடு செய்திருந்த, உலக ளாவிய பொருளாதார உச்சி மாநாட்டில், இந்திய முதலீடு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை வாரியத்தின் (Department of Investment and Public Asset Management – DIPAM) செயலர் துகின் காந்த பாண்டே பங்கேற்றுப் பேசியுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேசன், பி.இ.எம்.எல்., ஷிப்பிங் கார்ப்பரேஷன்’ உள்ளிட்ட 6 பொதுத் துறை நிறுவனங்களை தனியார்மயமாக்க வரும் ஜனவரிக்குள் ஏலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்காக, தனியார் நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 19 ஆண்டு களுக்கு பின், நடப்பு ஒரே ஆண்டில் 5 முதல் 6 நிறுவனங்கள் தனியார்மயமாக்கப்பட உள்ளன.
பாரத் பெட்ரோலியம் (BPCL) உரிய கவனம் செலுத்தும் நிலையில் உள்ளது. பிஇஎம்எல் (BEML), ஷிப்பிங் கார்ப்பரேசன் (Shipping Corporation Of India), பவன் ஹான்ஸ் (Pawan Hans), சென்ட்ரல் எலக்ட்ரா னிக்ஸ் (Central Electronics)’ என்ஐஎன்எல் (NINL) ஆகிய நிறுவனங்களுக்கான ஏலம், டிசம்பர் – ஜனவரியில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். எனவே, இந்த ஆண்டி லேயே அதற்கான பணிகள் நிறைவு பெற்றுவிடும். எல்ஐசி நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீட்டை பொறுத்தவரை, கடினமாக உழைத்து வருகிறோம். அடுத்த ஆண்டின் முதல் காலாண்டில், பங்கு வெளியீடு நடை பெற்று விடும். இவ்வாறு துகின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.