இந்தியா

அவசரச் சட்டம் கொண்டுவந்ததன் நோக்கம் தெளிவானது

புதுதில்லி, நவ.18- சிபிஐ, அமலாக்கப் பிரிவு தலைவர்களின் பதவிக் காலத்தை ஐந்து ஆண்டுகள் வரை நீட்டிக்கும் வகையில், ஒன்றிய பாஜக அரசு கடந்த வாரம் அவசரச் சட்டம் கொண்டு வந்தது. குடியரசுத் தலைவரும் இதற்கு ஒப்புதல் அளித்தார். ஆனால், ஒன்றிய பாஜக அரசின் இந்த அவசரச் சட் டத்திற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. 15 நாட்களில் நாடா ளுமன்றம் கூடவிருக்கும் நிலை யில், ஏன் இவ்வளவு அவசர மாக பதவி நீட்டிப்புக்குச் சட்டம் கொண்டுவர வேண்டும்? என்ற கேள்விகள் எழுந்தன. இதற்கு பின்னால் உள்நோக்கம் இருப் பதாகவும் சந்தேகங்கள் கிளம் பின.

சிபிஐ, அமலாக்கப் பிரிவு தலைவர்களின் பதவிக் காலத்தை ஒரே தவணையாக 5 ஆண்டுகள் என நியமிப்பதற்கு அரசுக்கு உரிமை உள்ளது. மாறாக, ஒரு சில மாதங்கள் அல்லது ஒரு வருடத்திற்கு துண்டு துண்டாக பதவி நீட் டிப்புகளை வழங்குவது சரி யாக இருக்காது. ஆட்சியாளர் களை அனுசரித்துப் போனால் நீங்கள் பதவி நீட்டிப்புச் சலு கையைப் பெறலாம் என்ற எண் ணத்தையே இது அதிகாரி களுக்கு ஏற்படுத்தும். அது அவர்கள் நேர்மையாக செயல் படுவதற்கு தடையாக அமை யும் என்று எதிர்க்கட்சிகள் கூறின. முன்பு 1990-களில் ஜெயின் சகோதரர்கள் மீதான ஹவாலா வழக்கு விசாரணையின் போதே, நீதிமன்றம் இதனை தெளிவுபடுத்தி இருந்தது. சிபிஐ, அமலாக்கப் பிரிவு இரு அமைப்புகளையும் எந்தத் தவ றான செயல்கள் செய்யவும் அரசு தூண்டக்கூடாது என்று கண்டித்திருந்தது. அமலாக்கப் பிரிவின் தற் போதைய தலைவர் சஞ்சீவ் குமார் மிஸ்ரா-வுக்கு இரண்டா வது முறையாக பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டதை எதிர்த்து கடந்தாண்டு தொடரப்பட்ட வழக் கிலும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை உறுதிப்படுத்தி இருந்தது.

அமலாக்கப் பிரிவு இயக்கு நராக முதல் முறையாக 2018, நவம்பா் 19-ஆம் தேதி இரண்டு ஆண்டுகளுக்கு சஞ்சய் குமார் மிஸ்ரா நியமிக்கப்பட்டார். 2020- இல் அவரது முந்தைய இரண்டு ஆண்டுகள் பணி நியமன உத்த ரவு மூன்று ஆண்டுகளாக நீட் டிக்கப்பட்டது. இதனைக் கண் டித்த உச்சநீதிமன்றம், இதற்கு மேலும் சஞ்சய் குமார் மிஸ்ரா வுக்கு பணி நீட்டிப்பு வழங்கக் கூடாது என்று கூறியிருந்தது. சஞ்சய் குமார் மிஸ்ராவின் பத விக்காலம் 2021 நவம்பர் 17-ஆம் தேதியோடு முடிவடைவதால், உச்சநீதிமன்ற உத்தரவின்படி அவருக்கு பணிநீட்டிப்பு வழங் கப்படாது என்று கருதப்பட்டது. ஆனால், மிஸ்ரா பதவிக் காலம் முடிவதற்கு ஒரு வாரத் திற்கு முன்னதாக திடீரென, 2 ஆண்டுகளாக உள்ள சிபிஐ, அமலாக்க பிரிவு இயக்குநர் களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளாக ஒன்றிய அரசு உயர்த்தியது. அதற்கு குடிய ரசுத் தலைவரின் ஒப்புதலை யும் பெற்றது.

அப்போது, இந்தச் சட்டம் மிஸ்ராவுக்காகத்தான் கொண்டு வரப்பட்டதா? அல்லது இனி புதிதாக நியமிக்கப்படும் சிபிஐ, அமலாக்கப் பிரிவு தலைவர் களுக்காக கொண்டுவரப்பட் டதா? என்று பலரும் கேள்வி எழுப்பினர். உச்ச நீதிமன்றத் தின் கண்டனத்தையும் மீறி மிஸ்ராவுக்காகவே இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது என்றால், அது சரியாக இருக் காது. 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை, உச்சநீதிமன்றத் தலை மை நீதிபதி, பிரதமர், எதிர்க் கட்சித் தலைவர் ஆகியோர் கூடி சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களை தேர்ந்தெ டுக்க வேண்டிய நிலையில், ஒன் றிய அரசு தன்னிச்சையாக பதவி நீட்டிப்பு வழங்குவது ஜனநாய கத்திற்கு விரோதமானது என்று விமர்சிக்கப்பட்டது. ஆனால், ஒன்றிய பாஜக அரசானது, சஞ்சய் குமார் மிஸ் ராவிற்கு மேலும் ஓராண்டுக்கு பதவி நீட்டிப்பு வழங்கி, அவ ருக்காகவே அவசரச் சட் டத்தை கொண்டுவந்தோம் என் பதை தற்போது உறுதிப்படுத்தி இருக்கிறது. மிஸ்ராவின் பதவிக் காலம் நவம்பர் 17-ஆம் தேதியுடன் முடி வடைந்த நிலையில், தற்போது அவரது பதவிக்காலத்தை 2022 நவம்பா் 11-ஆம் தேதி வரை நீட் டித்து ஒன்றிய அரசு உத்தர விட்டுள்ளது. ஒன்றிய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்திற்கு எதி ராக ஏற்கெனவே உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட் டுள்ள நிலையில், மிஸ்ராவுக் கான பதவி நீட்டிப்பு ஒன்றிய அரசுக்கு மேலும் சிக்கலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படு கிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button