தொற்று நோய்களை அறிவியல்பூர்வமாக அணுகுவோம்!
பெய்ஜிங்/வாஷிங்டன், நவ.17- எந்தவொரு தொற்று நோய் பரவலையும் அறிவியல் பூர்வமாகவே எதிர்கொள்ள வேண்டும் என்றும், இதில் அரசியல் ஆதாயம் தேட முயல்வது மனிதகுலத்திற்கு தீமையையே விளைவிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதி பதி ஜோ பைடனிடம், சீன மக்கள் குடியரசின் ஜனாதிபதி ஜீ ஜின்பிங் கூறினார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் இடையேயான முதல் உச்சி மாநாடு, இணைய வழியில் மூன்றரை மணி நேரத்திற்கும் மேலாக திங்க ளன்று இரவு நடைபெற்றது. வாஷிங்டனின் வெள்ளை மாளிகையின் ரூஸ்வெல்ட் அறை யிலிருந்து பைடனும், பெய்ஜிங்கின் மக்கள் மகா மன்றத்தின் கிழக்கு அலுவலகத்திலி ருந்து ஜின்பிங்கும் மெய்நிகர் வழியில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை, எதி ரெதிர் துருவத்தில் நிற்கும் உலகின் இரண்டு பெரிய அரசியல் சக்திகளுக்கிடையே நடை பெற்ற நிகழ்வு என்பதால் சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. எனினும், இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் தகவல்களையும், வாழ்த்துக்களையும் மட்டுமே பரிமாறிக் கொண்டனர்; இரு நாடுக ளுக்கிடையே வரலாற்று ரீதியாக நிலவும் எந்த பிரச்சனைக்கும் முடிவு காணப்பட வில்லை.
ஆசியாவை சுற்றி வளைப்பது என்ற பெயரில் சீனாவை குறிவைத்து ஒபாமா நிர்வா கம் ராணுவ ரீதியான பல சூழ்ச்சிகரமான நகர்வுகளை மேற்கொண்டது; அவரை தொடர்ந்து வந்த டிரம்ப் நிர்வாகம் சீனா வுடனான மிக தீவிரமான வர்த்தகப் போரில் ஈடுபட்டது; அவரை தொடர்ந்து கடந்த ஆண்டு நவம்பரில் ஆட்சிக்கு வந்த ஜோ பைடன், இந்த மோதல்களுக்கு முடிவு கட்டக் கூடும் என்று பேசப்பட்டது; ஆனால் அவர் சீனாவுடனான மோதலை மேலும் கூர்மைப்படுத்தவே செய்தி ருக்கிறார். இடைவிடாத சீன எதிர்ப்பு பிரச்சா ரத்தில் பைடன் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்தப் பின்னணியில் சீனாவுடன் சில அம்சங்களில் பேசுவதை தவிர, அமெரிக்கா வுக்கு தற்போதைய புவி அரசியல் சூழலில் வேறுவழியில்லை. அந்த அடிப்படையில், ஜின்பிங் உடனான இந்த சந்திப்பை பைடன் நடத்தியுள்ளார்.
பைடனுடன் காணொலி வாயிலாக உரை யாடிய ஜின்பிங், “எந்தவொரு பெருந் தொற்று பரவலையும் அவசியம் அறிவியல் துணைகொண்டே எதிர்கொள்ள வேண்டும். இதில் அரசியல் ஆதாயம் பார்க்க முனைவது தீமையையே விளைவிக்கும். அமெரிக்க அரசுடன் பல்வேறு பிரச்சனை களில் ஒத்துழைப்புடன் செயல்பட தயா ராக உள்ளோம். இரு நாடுகளிடையே நல்லு றவை உருவாக்கிட நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக உள்ளோம்” என்று கூறினார். ஜின்பிங், ஒத்துழைப்பு என்று முன் வைத்த போது, பைடன், போட்டி… மோதல் இல்லாத போட்டி என்று பேசினார். இவை இரண்டும் நேர்முரணானவை என்று சர்வ தேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரி வித்துள்ளனர். இரு தரப்பினரிடையே நடந்த பேச்சு வார்த்தை குறித்தோ, பொதுவான அம்சங்கள் மீதான கூட்டு முடிவு எட்டப்பட்டதாகவோ அறிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை. இதுவொரு முக்கிய சந்திப்பு; ஆனால் எந்த பலனையும் ஏற்படுத்தாத சந்திப்பு ஆகும்.