இ-பேப்பர்

NOV 14 – NOV 20

NOV 14 – NOV 20 Page 1

NOV 14 – NOV 20 Page 1
வெள்ளம் பாதித்த குமரி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு சிபிஎம் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக வி. காசிநாததுரை தேர்வு

வெள்ளம் பாதித்த குமரி மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன மழை யினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்களன்று (நவ.15) நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்கள் வழங்கினார். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வாரங்களாகவே மழை பெய்து வந்தது.  நவம்பர் 12-ந் தேதி முதல் மிக கனத்த மழை கொட்டியது. அன்று முதல் தொடர்ந்து பெய்த மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டது. சுமார் 50 ஆயிரம் வீடுகளில் மழை நீர் புகுந்தது.

மேலும் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் கால்வாய் எது? சாலை எது? என்று தெரியாத அள வுக்கு வெள்ளம் ஓடியது. குழித்துறை, தோவாளை, தேரேகால் புதூர், தக்கலை, குமாரபுரம், நித்திரவிளை, கோதையாறு, குற்றியாறு, மோதிரமலை பகுதிகளில் பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்தன. இதுபோல, பல பாசன குளங்கள் உடைப் பெடுத்தன. அந்த தண்ணீரும் அருகில் உள்ள விளைநிலங்களில் புகுந்து பயிர் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளத்தில் தத்தளிப்பதை அறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக அங்கு மீட்பு பணிகளை விரைவு படுத்த உத்தரவிட்டார். மேலும் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், பெரிய கருப்பன் ஆகியோரை குமரி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார்.

சிபிஎம் இராமநாதபுரம் மாவட்டச் செயலாளராக வி. காசிநாததுரை தேர்வு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட 23-வது மாநாடு இராமேஸ்வரத்தில் தோழர்கள் குணசேகரன், சண்முகவேல் நினைவு அரங்கத்தில் நவம்பர் 13,14 ஆகிய நாட்களில் நடைபெற்றது. மாநாட்டைத் துவக்கி வைத்து மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.லாசர் உரையாற்றினார். நிறைவு நாளன்று கட்சியின் மாவட்டச் செயலாளர் வி. காசிநாததுரை தொகுப்புரை வழங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் கே.பால பாரதி மாநாட்டை நிறைவு செய்து உரையாற்றினார்.  வரவேற்புக்குழுத் தலைவர் பவுல்ராஜ் நன்றி கூறினார். மாநாட்டில் கட்சியின் இராமநாத புரம் மாவட்டச் செயலாளராக வி. காசிநாததுரை தேர்வு செய்யப்பட்டார் . மாவட்ட செயற்குழு உறுப்பினர்களாக என்.கலையரசன்,  ஆர்.குருவேல்,  எம்.சிவாஜி. எம். முத்து ராமு, ராஜ்குமார், வி.மயில்வாகனன், இ.கண்ணகி, கே.கருணாகரன்  உட்பட 30 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.

 மாவட்டத்திலுள்ள குறவர், மணிக்குறவர் உள்ளிட்ட பழங்குடி இன மக்களுக்கு மலைவாழ் மக்கள் சாதி  சான்றிதழ் வழங்கிட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இராமேஸ்வரம் யாத்திரை தொழி லாளர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் வழங்க தமிழக  அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கமுதியில் அரசு பாலிடெக்னிக், ஐடிஐ  அமைத்திட வேண்டும்.

NOV 14 – NOV 20 Page 2

NOV 14 – NOV 20 Page 2
கத்தலூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவருக்கு நிகழ்ந்த

கத்தலூர் ஊராட்சிமன்ற துணைத் தலைவருக்கு நிகழ்ந்த

 புதுக்கோட்டை மாவட்டம் விராலி மலையை அடுத்த கத்தலூர் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மீது  அடுக்கடுக்காக தீண்டாமை வன்கொ டுமைகள் நிகழ்த்தப்படுவதாக உண்மை அறியும் குழு மூலம் தெரிய  வந்துள்ளது.  விராலிமலை ஒன்றியம் கத்தலூர்  ஊராட்சி மன்ற துணைத் தலைவர்  மு.பொன்னர். இவர் தனது மனைவி யுடன் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில பொதுச் செயலாளர் கே.சாமுவேலுவை கடந்த  22.10.2021 அன்று சந்தித்து மனு ஒன்றை அளித்தார். நேர்மையான நிர்வாகத்தை கொடுக்க வலியுறுத்து வதால், பல்வேறு வன்கொடுமை களை ஊராட்சி மன்றத் தலைவர் நிகழ்த்துவதாக அந்த மனுவில் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருச்சி மாவட்டச் செயலாளர் விநோத்மணி, புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் அன்புமணவாளன், வழக்கறிஞர் ஜேம்ஸ்ராஜா, சிஐடியு புதுக் கோட்டை மாவட்டத் தலைவர் முகம தலிஜின்னா ஆகியோர் அடங்கிய உண்மை அறியும் குழு கத்தலூர் ஊராட்சியில் கள ஆய்வு மேற்கொண் டது.  ஆய்வு முடிவுகளை சிபிஎம் புதுக் கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், தீ.ஒ.முன்னணி மாவட்டத் தலைவர் சி.அன்புமண வாளன், செயலளார் சி.ஜீவானந்தம் ஆகியோர் அடங்கிய குழு புதுக் கோட்டை மாவட்ட ஆடசியர் கவிதா  ராமுவிடம் கடந்த 11.11.2021 அன்று  வழங்கியது. அதில் தெரிவித்திருப்ப தாவது: “சுமார் 3,500 பேர் மக்கள்தொகை  கொண்ட கத்தலூர் ஊராட்சியில் கள்ளர், முத்தரையர், கவுண்டர், நாயக்கர், பள்ளர் உள்ளிட்ட பல் வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், கடந்த 2019-ல் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட 4-வது வார்டில் பழ னியம்மாளும், 6-வது வார்டில் பொன்னரும் போட்டியிட்டு தேர்வு செய்யப்பட்டனர். கணவன், மனைவி  ஆகிய இருவரும் கடந்த 20 ஆண்டு களுக்கும் மேலாக அப்பகுதி மக்க ளின் அப்படிடைத் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டு வருவதால் இது சாத்தியமாகியுள்ளது. அதற்கு முந்தைய தேர்தலிலும் பொன்னர் வார்டு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

NOV 14 – NOV 20 Page 3

NOV 14 – NOV 20 Page 3
தலைநகரில் தொடரும் துயரம் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்க!

தலைநகரில் தொடரும் துயரம்

சென்னையில் தொடர் மழையால்  இன்னும் நூற்றுக்கணக்கான தெருக்களில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல இடங்களில் மழை நீரும் சாக்கடை நீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. தண்ணீர் வடிந்த இடங்களில் சேறும் சகதியுமாகக் காட்சி யளிக்கிறது. அரசியல் கட்சிகளும் பல்வேறு அமைப்புகளும்  தன்னார்வலர்களும்  உணவு,  தண்ணீர் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதால்  பாதி க்கப்பட்ட மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

சென்னை நகரம் மழைக்கு உகந்த நகரமல்ல என்று சிலர் இப்போது பேசத்தொடங்கியுள்ளனர். அது தவறு. இந்தநகரம்  மிகப் பெரிய அளவில் வெள்ளத் தடுப்புக்கான ஏற்பாடுகளைக் கொண்டி ருந்த நகரமாகும். சென்னையில் மூன்று பெரிய ஆறுகள் இருக்கின்றன. வடக்கே கொசஸ்தலை ஆறு எவ்வளவு வெள்ளம் வந்தாலும் அதை எண்ணூர் அருகே கடலில் கொண்டுசேர்த்துவிடும். மத்திய சென்னையில் கூவம் ஆறு, தென் சென்னையில் அடையாறு ஆகியவையும் மழை நீரைக் கடலில் சேர்ப்பதற்கான கட்டமைப்பைக் கொண்டிருக்கின்றன.

சென்னை முழுக்க 16 கால்வாய்கள் இருக்கின் றன. இவை தவிர, பக்கிங்ஹாம் கால்வாய்  இருக் கிறது. இத்தனையையும் வைத்துக்கொண்டும் கூட மழை பெய்தால் தத்தளித்துக்கொண்டிருக் கிறோம். ஏனென்றால், இந்தக் கட்டமைப்புகளைக் கடந்த காலத்தில் பாதுகாக்கத் தவறியதுதான்.

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்க!

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள  வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி சின்மயா வித்யாலயா பள்ளியில் கடந்த ஆறுமாதம் முன்பு வரை படித்து வந்துள்ளார். அங்கிருந்த ஆசிரி யர் ஒருவரின் பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் சொன்ன பிறகும் மாணவியை சமாதானப்படுத்தியதைத் தவிர சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கையோ, குற்ற வியல் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்ற பிறகும் தொடர்ந்த பாலியல் தொல்லையால் நவம்பர் 11  அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் இரண்டு தனியார் பள்ளிகளில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடந்ததையொட்டி அரசு நிர்வாகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் தீவிர மான விவாதங்கள் நடந்த பின்னணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த குற்றச் செயல்கள் நடந்த பிறகு அரசும், பொது மக்களும் நடவடிக்கை எடுப்பதும், கோபப்படுவதும் சட்டங்கள் மற்றும் பள்ளி நடைமுறைகள் குறித்து விவாதிப்பதும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாமல் போவதும் வாடிக்கையாகி வருகிறது. குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நபர்கள் இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவது தொடரும்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எண்ணற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

NOV 14 – NOV 20 Page 4

NOV 14 – NOV 20 Page 4
டாஸ்மாக் ஊழியர்கள் மீது தொடரும் தாக்குதல் அரசின் அலட்சியத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம் பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்க!

டாஸ்மாக் ஊழியர்கள் மீது தொடரும் தாக்குதல் அரசின் அலட்சியத்திற்கு டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் கண்டனம்

தமிழ்நாடு டாஸ்மாக் ஊழியர்  மாநில சம்மேளனத்தின்(சிஐடியு) பொதுச்செய லாளர்  கே.திருச்செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கடந்த ஒன்றரை மாத காலத்தில் டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீதான தாக்கு தல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு விற்பனையாளர் துளசிதாஸ்  கொல்லப்பட்டார்.  இந்த சம்பவத்திற்கு பிறகு முதலமைச்சர் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துவோர் மீது காவல்துறை கடும் நட வடிக்கை மேற்கொள்ளும் என்று அ றிவித்தார். அதன் பிறகும் சமூகவிரோதிகளின் தாக்குதலுக்கு ஊழியர்கள் ஆளாகி வருவது கண்டனத்திற்குரியது.

மாநிலம் முழுவதும் உள்ள 5400-க்கும்  மேற்பட்ட டாஸ்மாக் கடைகளில் ஆயிரத்திற்கும்  மேற்பட்ட கடைகள் இடுகாடு,  சுடுகாடு, வயல்வெளி, காட்டுப்பகுதி என ஆள்நடமாட்டம் இல்லாத பகுதிகளில் உள்ளது சமூக விரோதிகளுக்கு சாதகமான நிலையை உருவாக்கியுள்ளது.  இது குறித்து அரசுக்கும், டாஸ்மாக் நிர்வாகத்திற்கும் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில்  டாஸ்மாக் கடை எண். 1621-ல் விற்பனையாளராக பணி புரியும்  சிதம்பரம்  என்பவர் பணி முடித்து வீட்டிற்கு திரும்பும் வழியில் சமூக விரோதிகளால் கொடூர ஆயுதங்கள் மூலம் தாக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை யில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார், இந்த கொடூர சம்பவம் நடந்து 12 மணி நேரத்திற்கு மேலாகியும் காவல்துறை வழக்கு பதிவு செய்யாமல் அலட்சியமாக இருந்து வருவது கண்டனத்திற்குரியது.

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கை மேற்கொள்க!

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் தொந்தரவுகளை தடுத்து நிறுத்த தொடர் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள  வேண்டும் என்று  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கோவையைச் சேர்ந்த 17 வயது மாணவி சின்மயா வித்யாலயா பள்ளியில் கடந்த ஆறுமாதம் முன்பு வரை படித்து வந்துள்ளார். அங்கிருந்த ஆசிரி யர் ஒருவரின் பாலியல் தொல்லை குறித்து பள்ளி முதல்வரிடம் சொன்ன பிறகும் மாணவியை சமாதானப்படுத்தியதைத் தவிர சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான நடவடிக்கையோ, குற்ற வியல் நடவடிக்கையோ எடுக்கப்படவில்லை. இந்த நிலையில்தான் வேறு பள்ளிக்கு மாற்றலாகி சென்ற பிறகும் தொடர்ந்த பாலியல் தொல்லையால் நவம்பர் 11  அன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சென்னையில் இரண்டு தனியார் பள்ளிகளில் இதுபோன்ற குற்றச் செயல்கள் நடந்ததையொட்டி அரசு நிர்வாகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் தீவிர மான விவாதங்கள் நடந்த பின்னணியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு முறையும் இந்த குற்றச் செயல்கள் நடந்த பிறகு அரசும், பொது மக்களும் நடவடிக்கை எடுப்பதும், கோபப்படுவதும் சட்டங்கள் மற்றும் பள்ளி நடைமுறைகள் குறித்து விவாதிப்பதும், அதன் பிறகு அதன் தொடர்ச்சியான நடவடிக்கைகள் இல்லாமல் போவதும் வாடிக்கையாகி வருகிறது. குழந்தைகளை காப்பாற்ற வேண்டிய நபர்கள் இக்கொடுஞ்செயலில் ஈடுபடுவது தொடரும்போது பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எண்ணற்ற குழப்பத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

NOV 14 – NOV 20 Page 5

NOV 14 – NOV 20 Page 5
கிரிக்கெட் ஒரு விளையாட்டுதான்! யுத்தம் அல்ல! - ப.சிதம்பரம் கோயில்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூடாரமா? கொரோனா கட்டுப்பாடுகள் நவ. 30 வரை நீட்டிப்பு

கிரிக்கெட் ஒரு விளையாட்டுதான்! யுத்தம் அல்ல! - ப.சிதம்பரம்

 டி-20 கிரிக்கெட் உலக கோப்பை இறுதிப் போட்டி. கோப்பையை வெல்லப் போவது இந்தியா அல்ல! இந்தியா விளையாடிய முதல் இரு ஆட்டங்களில் பாகிஸ்தானும் நியூசி லாந்தும் கடும் தோல்வியை இந்தியாவுக்கு தந்து விட்டன. முதலில் பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தி லும் பின்னர் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியா சத்திலும் இந்தியாவை தோற்கடித்தன.

ஏனைய கிரிக்கெட் அணிகளை போலவே பாகிஸ்தானும் சிறந்த தகுதி வாய்ந்த எதிர் அணிதான்! ஆனால் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான்  விளை யாடும் பொழுது அது வெறும் விளையாட்டாக அல்ல; நீண்ட கால மோசமான எதிரிகளிடையே நடக்கும் யுத்தம் போல தோற்றம் உருவாகிவிடுகிறது. ஒரு விளையாட்டு போட்டியை காண ஆயிரக்கணக்கான இந்திய மற்றும் பாகிஸ்தான் ரசிகர்களை தூண்டுவது வெறும் கிரிக்கெட் மோகம் மட்டுமல்ல என நான் சந்தேகிக்கிறேன். ஒரு விதமான குரோத முரண்பாடு உணர்வுகளும் உருவாகிவிடுகின்றன.

கிரிக்கெட் மாறிவிட்டது

ஒரு காலத்தில் கிரிக்கெட் என்பது நகர்ப்புறத்தில் மத்தியதர வர்க்கத்தினர் அதிகமாக விளையாடும் விளையாட்டாக இருந்தது. கிரிக்கெட் வீரர்கள் போற்றப்பட்டனர்; ஆனால் அவதார புருஷர்களாக  பார்க்கப்படவில்லை.

கோயில்கள் பாஜக, ஆர்.எஸ்.எஸ். கூடாரமா?

ஆதி சங்கரர் மடத்தின் பூiஜை விழாவில் பங்கேற்ற பிரதமரின் உரையை ஸ்ரீரங்கம், மதுரைக் கோயில்களில் எல்.இ.டி. திரையமைத்து பா.ஜ.க.வினர் கேட்டுள்ளனர். இந்த சட்ட விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள்மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி வலியுறு்த்தியுள்ளார். இதுகுறித்து அவர்  விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இந்துக் கோயில்கள் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ்., சங்பரிவார்களின் கட்சி அலுவல கங்களாக மாறி விட்டன என்பது அப்பட்ட மாகவே தெரிகிறது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஸ்ரீரங்கம் கோயிலிலும், மதுரை மீனாட்சி அம்மன் கோயிலிலும் பிரதமரின் உரையைக் கேட்க எல்.இ.டி. திரை, டி.வி, ஒலிபெருக்கி வைத்து பா.ஜ.க.வினர் அமர்ந்து கேட்டிருக்கிறார்கள். இன்னும் பல இடங்க ளிலும் செய்யப்பட்டதாகச் சொல்லப் ்படுகிறது.

சான்றுக்கு அண்ணாமலை, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் டுவிட்டுகள் உள்ளன. கோயில்களைக் கைப்பற்றி, தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்பது ஆர்.எஸ்.எஸ்.சின் நெடுநாளைய குறிக்கோள். அதனை மறைமுகமாக பல இடங்களில் நிறைவேற்றி வருகிறார்கள். இந்நிலையில் கோயில் மண்டபம் அல்லது வளாகத்திற்குள் (பிரதமரின் உரை என்று சாக்கிட்டு) இப்படி திரையிட்டு குறிப்பிட்ட கட்சியினர் பார்க்க அனுமதி உண்டா? அளித்தது யார்? என்பது குறித்து கவனிப்பது முக்கியம்.

கொரோனா கட்டுப்பாடுகள் நவ. 30 வரை நீட்டிப்பு

தமிழகத்தில் கொரோனா காரணமாக பிறப்பிக்கப்பட்ட தளர்வுகளுடன் கூடியகட்டுப்பாடுகள் நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப் ்பட்டுள்ளதாக முதலமைச்சர் ்மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப் ்படுத்தும் வகையில், நாளை காலை 6 மணி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்த தேவையான கட்டுப்பாடுகளை வருகிற 30-ந்தேதி வரை தொடர்ந்து அமல்படுத்த மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 28.10.2021 அன்று அறிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், மழை, வெள்ள காலங்களில் டெங்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளதை கருத்தில் கொண்டும், பொது மக்கள் நலன் கரு தியும் நடைமுறையில் உள்ள ஊரட ங்கு கட்டுப்பாடுகள் வருகிற 30-ந்தேதி (நவம்பர்) வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொதுமக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட முக்கிய நிலையான வழிகாட்டு நடை முறைகளை பின்பற்ற வேண்டும். கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகை யில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாய மாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும். கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முக கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

NOV 14 – NOV 20 Page 6

NOV 14 – NOV 20 Page 6
நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள் - சு.பொ.அகத்தியலிங்கம் பள்ளி தலைமை ஆசிரியை போக்சோவில் கைது

நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள் - சு.பொ.அகத்தியலிங்கம்

“வெளியே இருந்து வந்த வெள்ளையனை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று துரத்த லாம். நமக்குள்ளிருந்து, நம் நடு விலேயே பிறக்கும் ஹிட்லர்களை விரட்டுவது எப்படி?” இப்படி கேள்வி கேட்கிறாள் கதையின் நாயகி ஹ்யானா. நேமிசந்த்ரா எழுதிய கன்னட புதினம் ‘யாத் வஷேம்’ கே.நல்ல தம்பியின் தமிழாக்கத்தில் வந்துள் ளது இப்புதினம். வெறுப்பு அரசியலின் கோர நர்த்தனமும் அதன் சமூக உளவிய லும் வரலாற்று வன்மும் கதைப் போக்கில் நெஞ்சில் இரத்தத்தாலும் கண்ணீராலும் இப்புதினம் நெடுக வரையப்படுகிறது

பெங்களூர் கோரிப்பாளையம் யூதக் கல்லறை முதல் இஸ்ரேலி லுள்ள யாத் வஷேம் நினைவுக் கல் லறை வரை விரிந்து பரந்த புதினம் இது. ஹிட்லராலும் அவர் கூட்டாளி களாலும் கொல்லப்பட்ட லட்சக்க ணக்கான யூதர்களின் நினைவுக் கல்லறைதான் யாத்வஷேம். கதை மிக எளிதானது. ஹிட்ல ரின் அடக்குமுறையால் நாட்டை விட்டு ஓடிய ஓர் விஞ்ஞானி .ஓடும் போதே ஹ்யானா என்கிற பத்து வயது மகளைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிரிகிறார். அவர்கள் தப்பித்தார்களா, பிழைத் தார்களா என்பதுகூட அவருக்கு தெரிய முடியவில்லை. தப்பிய அவ ரும் அவர் மகளும் பெங்களூரில் சாம்ராஜ்பேட்டையில் குடியேறு கின்றனர்.

பள்ளி தலைமை ஆசிரியை போக்சோவில் கைது

கோவையில் பாலியல் தொல்லை யால் 12 ஆம் வகுப்பு மாணவி தற் கொலை செய்து கொண்ட விவகா ரத்தில் தலைமறைவாக இருந்த தனி யார் பள்ளி தலைமை ஆசிரியரை தனிப் படை காவல் துறையினர் பெங்களூ ரில் கைது செய்தனர். கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த மாணவி ஆர்.எஸ்.புரம் பகுதி யில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில மாதங் களுக்கு முன்பு பள்ளியை மாற்றிய மாணவி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தனது வீட்டில் வாக்குமூலம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக சின்மயா வித்யாலயா பள்ளியில் இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை மேற்கு மகளிர் காவல் நிலைய போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனிடையே ஆசிரியருக்கு உடந்தையாக இருந்ததாக பள்ளி முதல்வர் மீரா ஜாக்சன் மீது குற்றம் சாட்டிய மாணவியின் பெற்றோர், உடலை வாங்க மறுத்தடன், தங்களது மகளின் தற்கொலைக்கு நீதிகேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

NOV 14 – NOV 20 Page 7

NOV 14 – NOV 20 Page 7
நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள் - சு.பொ.அகத்தியலிங்கம் ‘முதல்வரின் முகவரி’ புதிய துறை உருவாக்கம்-சிறப்பு அலுவலர் நியமனம் அதிமுக ஊழல்களை கண்டறிய விரைவில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்

நமக்குள் பிறந்துவிடக்கூடிய ஹிட்லர்கள் - சு.பொ.அகத்தியலிங்கம்

“வெளியே இருந்து வந்த வெள்ளையனை ‘இந்தியாவை விட்டு வெளியேறு’ என்று துரத்த லாம். நமக்குள்ளிருந்து, நம் நடு விலேயே பிறக்கும் ஹிட்லர்களை விரட்டுவது எப்படி?” இப்படி கேள்வி கேட்கிறாள் கதையின் நாயகி ஹ்யானா. நேமிசந்த்ரா எழுதிய கன்னட புதினம் ‘யாத் வஷேம்’ கே.நல்ல தம்பியின் தமிழாக்கத்தில் வந்துள் ளது இப்புதினம். வெறுப்பு அரசியலின் கோர நர்த்தனமும் அதன் சமூக உளவிய லும் வரலாற்று வன்மும் கதைப் போக்கில் நெஞ்சில் இரத்தத்தாலும் கண்ணீராலும் இப்புதினம் நெடுக வரையப்படுகிறது

பெங்களூர் கோரிப்பாளையம் யூதக் கல்லறை முதல் இஸ்ரேலி லுள்ள யாத் வஷேம் நினைவுக் கல் லறை வரை விரிந்து பரந்த புதினம் இது. ஹிட்லராலும் அவர் கூட்டாளி களாலும் கொல்லப்பட்ட லட்சக்க ணக்கான யூதர்களின் நினைவுக் கல்லறைதான் யாத்வஷேம். கதை மிக எளிதானது. ஹிட்ல ரின் அடக்குமுறையால் நாட்டை விட்டு ஓடிய ஓர் விஞ்ஞானி .ஓடும் போதே ஹ்யானா என்கிற பத்து வயது மகளைத் தவிர குடும்பத்தில் உள்ள அனைவரையும் பிரிகிறார். அவர்கள் தப்பித்தார்களா, பிழைத் தார்களா என்பதுகூட அவருக்கு தெரிய முடியவில்லை. தப்பிய அவ ரும் அவர் மகளும் பெங்களூரில் சாம்ராஜ்பேட்டையில் குடியேறு கின்றனர். பக்கத்துவீட்டில் உள்ள ஒக்காலிகர் குடும்பத்தோடு ஹ்யானா பழகுகிறாள். தந்தையும் இறந்துவிட அக்குடும்பமே இப்பெண்ணையும் அரவணைக்கிறது ஹ்யானா வாழ்க்கைச் சூழலில் அனிதாவா கிறாள். அவள் நெஞ்சுக்குள் ஹிட்ல ரால் விரட்டப்பட்ட கொடிய நினை வும்.

‘முதல்வரின் முகவரி’ புதிய துறை உருவாக்கம்-சிறப்பு அலுவலர் நியமனம்

உங்கள் தொகுதியில் முதலமைச் சர், முதலமைச்சர் உதவி மையம், குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு ஒருங்கிணைப்பு ஆகிய துறைகள் ஒன் றிணைந்து ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை ஏற்படுத்தப்பட்டுள் ளது. இதற்கான அரசாணை வெளி யிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செய லாளா் இறையன்பு வெளியிட்டுள்ள அரசாணையில், முதலமைச்சரின் தனிப்பிரிவு, முதலமைச்சரின் உதவி மையம் மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட குறைதீர்ப்பு மேலாண்மை அமைப்பு (ஐஐபிஜிசிஎம்எஸ்), உங்கள் தொகுதி யில் முதலமைச்சர் துறை ஆகியவை ஒருங்கிணைக்கப்பட்டு, ‘முதல்வரின் முகவரி’ என்ற புதிய துறை உரு வாக்கப்படுகிறது. முதலமைச்சர் முகவரி துறையின் மனுக்களுக்குத் தீா்வு காண முதல்வ ரின் உதவி மையம் மற்றும் ஒருங்கி ணைக்கப்பட்ட குறைதீா்ப்பு மேலா ண்மை அமைப்பின் உதவி எண் மாநி லம் முழுவதும் ஒற்றை இணையதள முகப்பாகப் பயன்படுத்தப்படும். இது முதல்வரின் முகவரி துறையின் கட்டுப் பாட்டில் இருக்கும். உங்கள் தொகுதி யில் முதலமைச்சர் துறையின் சிறப்பு அலுவலா் ஷில்பா பிரபாகா் சதிஷ், முதல்வரின் முகவரி துறையின் சிறப்பு அலுவலராக நியமிக்கப்படுகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஊழல்களை கண்டறிய விரைவில் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்

அதிமுக ஆட்சியில் நடைபெற்ற  ஊழல் முறைகேடு களை கண்டறிய விரைவில் விசாரணை ஆணையம் அமைக் கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார். வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் சென்னையில் கடந்த 6ஆம் தேதி முதல் பலத்த மழை பெய்தது. இதில் சென்னை நகரமே வெள்ளக்காடானது. ஒரு வாரம் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக குடியிருப்பு பகுதி களுக்குள் தண்ணீர் புகுந்தது. சென்னையில் மழை நீர் வடி கால் சரிவர தூர்வாரப்படாததே வெள்ளநீர் வடியாததற்கு முக்கிய காரணம்  என்று கூறப்பட்டது. இதுபற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில் அதிமுக ஆட்சியில் மழைநீர் வடிகால் சரி வர தூர்வாரப்படவில்லை என்றும், ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணி களில் பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது என்றும் குற்றம் சாட்டினார். இந்த குற்றச்சாட்டை முன்னாள் முதல மைச்சரான தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி மறுத்தார். “தி.மு.க. அரசு மழை நீரை அகற்ற முடி யாத நிலையில் எங்கள் மீது பழிபோட்டு தப்பிக்க பார்க்கி றார்கள்’` என்று அவர் கூறியிருந்தார்.

NOV 14 – NOV 20 Page 8

NOV 14 – NOV 20 Page 8
அன்பிற் சிறந்த தவமில்லை - -ப.முருகன் தஞ்சை ராமமூர்த்தி மறைவுக்கு டி.கே.ரங்கராஜன் இரங்கல்

அன்பிற் சிறந்த தவமில்லை - -ப.முருகன்

அன்பிற் சிறந்த தவமில்லை, (கவிதைகள், கதைகள்), தொகுப்பாசிரியர்: ஸ்ரீ ரசா, வெளியீடு: காலம் வெளியீடு, 25, மருதுபாண்டியர் 4ஆவது தெரு, கருமாரியம்மன் கோவில் எதிர் வீதி, (சுல்தான் நகர்), மதுரை - 625002. செல்பேசி : 94430-78339.

மனித வாழ்வில் பிறப்பு முதல் இறப்பு வரை ஏராளமான விழாக்களும் நிகழ்வுகளும் நடைபெறுகின்றன. அவற்றில் பலவும் பழமைவாதச் சிந்தனையின் வெளிப்பாடாகவே உள்ளன. சடங்குகளும் சம்பிரதாயங்களும் நிறைய ஆக்கிரமித்துக்கொண்டுள்ளன. ஒரு சில விழாக்களில் முற்போக்கான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.  அண்மைக்காலங்களில் திருமண விழாக்களில் தாம்பூலப் பைகளுக்குப் பதிலாக புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்தகைய வழக்கத்தை முதலில் துவக்கியவர்களுக்கு தமிழ்ச் சமூகம் நன்றிக்கடன்பட்டுள்ளது.  அண்மையில் நடைபெற்ற ரமேஷ் இனியன் - பாலசூர்யா திருமண விழாவில், ‘அன்பிற் சிறந்த தவமில்லை எனும் சிறுநூல் வழங்கப்பட்டது. இந்த நூல் 64 பக்கம் கொண்டதாயினும் அற்புதமான கவிதைகளுடனும் அருமையான கதைகளுடனும் அழகோவியங்களுடனும் சிறப்பாக அமைந்துள்ளது.

தஞ்சை ராமமூர்த்தி மறைவுக்கு டி.கே.ரங்கராஜன் இரங்கல்

வழக்கறிஞர் தஞ்சை ராமமூர்த்தி மறைவுக்கு மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தஞ்சை ராம மூர்த்தி என்னுடைய நெடுநாள் நண்பர். சிறந்த தேசியவாதி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு வழக்குகளை நடத்தியவர். இடதுசாரிகள் மீது பெரும் மதிப்பு கொண்ட வர். தஞ்சை தியாகி என்.வெங்கடாசலத்தின் நெருங்கிய தோழர் ஆவார். அவருடைய மறைவால் துயருற்றுள்ள குடும்பத்தினருக்கு என்னுடைய ஆறுதலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

NOV 14 – NOV 20 Page 9

NOV 14 – NOV 20 Page 9
வெள்ளத்தில் தவிக்கும் குமரி மாவட்டம் டெல்டா மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தி வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்

வெள்ளத்தில் தவிக்கும் குமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடரும் கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காட்டாறுகளில் வெள்ளப்பெருக்கு காரணமாக மலைப்பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற முடியாமல் கடந்த ஒருவார காலமாக தவித்து வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழையைத் தொடர்ந்து தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரகாலமாக கன மழையால் ஆறுகளுக்கும் அணைகளுக்கும் மிக அதிக அளவில் நீர் வந்து கொண்டிருக்கிறது.  கடந்த நான்கு நாட்களில் பெய்த கனமழை குறிப்பாக வெள்ளியன்று (நவ.13) மாலையில் தொடங்கி சனியன்றும் தொடர்ந்த மழையால் மாவட்டமே வெள்ளக்காடாக மாறியது. ஏராளமான சாலைகள் துண்டிக்கப்பட்டு ஒரு சில பகுதிகள் தவிர சனியன்று போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மலைப்பகுதிகள் தவிர இதர சில பகுதிகளுக்கான போக்குவரத்து ஞாயிறன்று சீரடைந்தது.  நூற்றுக்கும் மேற்பட்ட குளங்களில் உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஞாயிறன்றும் வெள்ளம் வடியாததால் நெல், வாழை, மரவள்ளி, அன்னாசி உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரப்பர் தோட்டங்களுக்குள் தேங்கியிருக்கும் வெள்ளம் வடியாததால் ரப்பர் விவசாயிகளும், பால்வெட்டும் தொழிலாளர்களும் கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறார்கள்.

டெல்டா மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தி வெள்ளப்பாதிப்பிற்கு நிரந்தரத் தீர்வு காணப்படும்

மன்னார்குடி நவம்பர் 14  தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் முன்னாள் இணைச் செயலாளர்  திருப்புகழ்  தலைமையில் அமைக்கப்பட்டுள்ள  மேலாண்மைக்குழுவால்  அளிக்கப்படும்  ஆலோசனைகளின்படி சென்னை பெருநகரம் மழை நீரால் பாதிக்கப்படாதபடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் டெல்டா மாவட்டங்களுக்கு தனிக் கவனம் செலுத்தி வெள்ள பாதிப்பில் இருந்து அம்மாவட்டங்களை மீட்பதற்கு நிரந்தர தீர்வு காணப்படும் என்றும் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்  தெரிவித்துள்ளார்.  மன்னார்குடியில் சனிக்கிழமையன்று முதலமைச்சரின்  பத்திரிக்கையாளர்  சந்திப்பு நடைபெற்றது.  திமுக மாநில பொருளாளர் டிஆர. பாலு . அமைச்சர்கள் அர. சக்கரபாணி, ஐ.பெரியசாமி, கே.என். நேரு மாவட்ட ஆட்சியர் ப. காயத்ரி கிருஷ்ணன், திமுக மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன்  ஆகியோர் உடனிருந்தனர்.

முதலமைச்சர் ஸ்டாலின் மேலும் கூறியதாவது-

கடலூர் நாகப்பட்டினம் திருவாரூர் மயிலாடுதுறை தஞ்சை ஆகிய மாவட்டங்களில் பல்வேறு  பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்த்தோம். விவசாயிகளின் கருத்துக்களை கோரிக்கைகளை உணர்வுகளை  நேரிடையாக கேட்டு தெரிந்து கொண்டோம். எனது உத்தரவின் பேரில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அவர்கள் தலைமையில் அமைச்சர்கள் குழு ஒன்று அமைக்கப்பட்டு   குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகளை நேரிடையாக சந்தித்து  அரசிற்கு ஒரு ஆய்வறிக்கையை தருமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

NOV 14 – NOV 20 Page 10

NOV 14 – NOV 20 Page 10
தோழருக்கு குடை பிடித்த எம்எல்ஏ தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம் கனமழையால் பாதித்த பயிர்களை பெ.சண்முகம் பார்வையிட்டார்

தோழருக்கு குடை பிடித்த எம்எல்ஏ

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை நகர 9-ஆவது மாநாடு புதுக்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.  மாநாட்டை முன்னிட்டு மாலை யில் புதுக்கோட்டை சின்னப்பா பூங்கா அருகில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினரும் கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பின ருமான எம்.சின்னத்துரை சிறப்புரை யாற்றினார். இறுதியில் நன்றியுரை நிகழ்த்த வந்தார் கட்சித் தோழர் ஜெகன். ஆனால் சிறப்புரையாற்றிய சின்னத்துரை எம்எல்ஏ பேசி முடிக்கும் போது மழையும் வந்துவிட்டது. கூட்டமும் களையத் தொடங்கியது.  நன்றி சொல்லும் வாய்ப்புக் கிடைத்தும் மழையால் பறிபோய் விட்டதே என வருந்தக்கூடாது என்பதற்காக ஜெகனை ஒலி பெருக்கி முன்னால் வரும்படி சின்னத்துரை அழைத்தார். அருகில் இருந்தவரிடம் குடையை வாங்கி நன்றி யுரைக்காக அவர் எழுதி வைத்திரு ந்ததை முழுமையாக வாசிக்கும் வரை மழைவிழாமல் பிடித்துக் கொண்டு இருந்தார். இந்த செயல் பார்வையாளர்களாக இருந்தவர் களிடம் ஒருவித உணர்ச்சிப் பெருக்கை அங்கு இருந்த கட்சி அல்லாத ஒருவர் இப்படியும் ஒரு எம்எல்ஏவா  என ஆச்சர்யத்துடன் இக்காட்சியை போட்டோ எடுத்து சமூக ஊடகங் களில் பதிவிட்டதால் அது வைரலாகி  வருகிறது. மற்றபடி கம்யூனிட்டு களுக்கு இதுவெல்லாம் ஒரு வழக்கமான நிகழ்வுதான்.

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்தீஸ் மணிமண்டபம்

தூத்துக்குடி மாநகர மக்களின் தந்தை குரூஸ் பர்னாந்தீஸ் நினை வினைப் போற்றிடும் வகையிலும், அன்னாரின் புகழுக்கு பெருமைச் சேர்க்கின்ற வகையில், தூத்துக்குடியில் மணிமண்டபம் அமைக்கப்படும் என்று தமிழ்நாடு அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகர மக்களின் நலன் காத்திட தன்னையே அர்ப் பணித்துக் கொண்டவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ். ஏறத்தாழ 30 ஆண்டு காலம்  நகரமன்ற உறுப்பினராகவும், 5 முறை நகரமன்றத் தலைவராகவும் இருந்த காலத்தில், ஜாதி-மத பேத மின்றி அடித்தள மக்களின் அடிப்படைக்  கல்வி மேம்பாடு, குடிசை வீடுகள் மேம்பாடு, தீண்டாமை எதிர்ப்பு, கூட்டு றவு வங்கிக் கடனுதவி, சுகாதார மையங்கள், சனிக்கிழமைச் சந்தை, அங்காடிகள், பொதுவான கல்லறைத் தோட்டம் என நல்ல பல திட்டங்களைச் செயல்படுத்தி சாதனை படைத்தவர்.

குறிப்பாக, 1927 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமை யான குடிநீர் பஞ்சத்தில் சிக்கித்  தவித்தபோது, மிகுந்த தொலை நோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினைத் திறம்பட செயல்படுத்தி வெற்றி கண்ட அத்திட்டம் மாநகர மக்களுக்குப் பெரிதும் பயன்பட்டு வருகிறது.

கனமழையால் பாதித்த பயிர்களை பெ.சண்முகம் பார்வையிட்டார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழை யால் பாதிக்கப்பட்ட கீழ மருதாந்தநல்லூர், அருவாப்பாடி, நீடூர் உக்கடை, அருண்மொழிதேவன் பாண்டூர், பொன்னூர் உள்ளிட்ட பகுதிகளை தமிழ்நாடு விவசாய சங்க மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம், மாவட்ட செயலாளர் எஸ்.துரைராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனி வாசன், இயற்கை விவசாயி மாப்படுகை ராமலிங்கம், டெல்டா விவசாய சங்க பொதுச்செயலாளர் அன்பழகன், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் ராஜேஷ் உள்ளிட்டோர்  பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினர்.

NOV 14 – NOV 20 Page 11

NOV 14 – NOV 20 Page 11
சிபிஐ மூத்த தலைவர் டாக்டர் வே.துரைமாணிக்கம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல் கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்க கூடுதலாக 20 ஆண்டுகள் கேட்ட பிரதமர் மோடி

சிபிஐ மூத்த தலைவர் டாக்டர் வே.துரைமாணிக்கம் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கை வருமாறு:  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளருமான  டாக்டர் வே.துரைமாணிக்கம் அவர் கள் நவம்பர் 2 அன்று மதியம் கால மானார். அவருக்கு வயது 76. அவரது மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. தமிழக விவசாயிகளை அணி திரட்டு வதில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் என்ற முறையில் சிறப்பாக செயல்பட்டவர். தமிழக விவ சாயிகளை பாதிக்கும் பல்வேறு பிரச்ச னைகளில் அனைத்து விவசாய சங்கங் களை இணைத்து கூட்டுப்போராட்டங் களை நடத்துவதில் முனைப்புடன் செயல்பட்டவர். இடதுசாரி இயக்கங்கள் வலுப்பெற வேண்டும் என்பதில் அக்க றையுடன் பாடுபட்டவர் தோழர் வே. துரைமாணிக்கம் அவர்கள். அவருடைய மறைவு விவசாயிகள் இயக்கத்திற்கும், இடதுசாரி இயக்கத் திற்கும் பேரிழப்பாகும். அவரது மறை வால் துயருற்றிருக்கும் அவருடைய துணைவியார், மகள்கள் மற்றும் குடும் பத்தாருக்கும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற் குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை யும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள் கிறது. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

கார்பன் உமிழ்வை பூஜ்யமாக்க கூடுதலாக 20 ஆண்டுகள் கேட்ட பிரதமர் மோடி

பருவநிலை மாற்றம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் 26-வது உச்சி மாநாடு ஸ்காட்லாந்தில் உள்ள கிளாஸ்கோ நகரில்  நடைபெற்று வரு கிறது. நவம்பர் 12 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மோடி  அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் உள்ளிட்ட 200 நாடுகளின் பிரதிநிதிகள் பங் கேற்றுள்ளனர். மாநாட்டில் ஐ.நா. பொதுச் செய லாளர் அன்டோனியோ குட்டெர்ஸ் பேசுகையில், புகைவடிவ எரி பொருட்களுக்கு அடிமையாகி இருப்பதன் மூலம் நமது சவக்குழி யை நாமே தேடிக் கொண்டு இருக்கி றோம்.  நிலத்தை தோண்டி எரிபொருள் எடுப்பதை நிறுத்தாவிட்டால் அது நம்மை நிறுத்திவிடும். எரிபொரு ளுக்காக ஆழமாக நாம் பூமியை தோண்டிக் கொண்டே இருந்தால் நமது சவக்குழியை நாமே தோண்டு கிறோம் என்று பொருள் என்று தெரி வித்தார்.    மாநாடு நடைபெறும் அரங்கிற்கு இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் ஆற்றிய உரை யில், அதிகாரம் பெற்ற அரசியல் பாதிகள் நமது எதிர்காலத்தை சீரி யஸாக எடுத்துக் கொள்வது போல் பாசாங்கு செய்கிறார்கள். காலநிலை நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் நிகழ்காலத்தை தீவிரமாக எடுத்துக் கொள்வது போல் நடிக்கி றார்கள். மாற்றம் உள்ளே இருந்து வர போவதில்லை என்று ஆவேசமாக கூறினார்.

NOV 14 – NOV 20 Page 12

NOV 14 – NOV 20 Page 12
நூறு நாள் வேலை திட்டத்தை முடக்காதீர்!

நூறு நாள் வேலை திட்டத்தை முடக்காதீர்!

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை மாநகரம் வெள்ளக்காடாக மாறியது. சென்னையின் பெரும்பாலான பகுதிகள் மழை நீரில் சிக்கியுள்ளன. இதற்கு அரசாங்கம்தான் காரணம் என்று ஒரு தரப்பும், பொது மக்கள்தான் என்று மற்றொரு தரப்பினரும் சூடான விவாதங் களில் மோதிக் கொண்டுள்ளனர்.

களநிலவரம் என்ன?

தமிழ்நாட்டின் தலைநகராக விளங்கி கொண்டிருக்கும் சென்னை மாநகராட்சியில் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு, பக்கிங்காம் போன்ற பிரதான  ஆறுகளுடன்  52 கிளை நீர்வழி கால்வாய்கள் இயற்கையாகவே இணைந்துள்ளன. இதில், 30 கால்வாய்களை மாநகராட்சியும், இதர கால்வாய்களை சென்னை பொதுப்பணித் துறையும் பராமரித்து வரு கின்றன.  சென்னையின் தற்போதைய நிலை, கால்வாய்கள் பெரும்பாலும் ஆக்கிரமிப்பில் உள்ளன. மழைநீர் வடிகால்வாய் போதுமான கட்டமைப்பில் இல்லை. பேரிடரை தங்கக் கூடிய சூழ்நிலை கிடையாது. சுமார் 10 சென்டி மீட்டர் மழையை மட்டுமே தாங்கக்கூடிய அளவில் உள்ளன. அதுவும் நீர் வடிந்து கொள்ளும் அளவுக்கு கிடையாது. தண்ணீர் செல்ல முடியாத அளவுக்கு அடைப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களாக நிறுத்தப்பட் டுள்ள தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கான ஊதிய நிலுவை யை உடனடியாக வழங்க வேண்டும்.  திட்ட நிதி ஒதுக்கீட்டை உடனடியாக அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  நவம்பர் 2 செவ்வாயன்று பிரதமர் மோடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கடிதம் எழுதியுள் ளார். பிரதமருக்கு அவர் அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:

இடதுசாரி கட்சிகளின் கோரிக்கை யின் விளைவாக கடந்த ஐக்கிய முற் போக்கு கூட்டணி அரசாங்கத்தில் கிரா மப்புற ஏழைகளின் வேலைவாய்ப்பிற் காகவும், இந்தியாவின் ஊரகப் பகுதி களில் வறுமை ஒழிப்பிற்கான முயற்சி களில் ஒன்றாகவும் உருவாக்கப்பட்ட மகாத்மா தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் என்பது தற்போது படிப்படி யாக பலவீனப்படுத்தப்பட்டு வருவ தோடு, இத்திட்டத்திற்கான நிதி ஒதுக் கீடும் வெகுவாக குறைக்கப்பட்டு வரு கிறது. இத்திட்டத்தை பலவீனப்படுத்து கிற ஒன்றிய அரசாங்கத்திண் அணுகு முறையென்பது கிராமப்புற ஏழை உழைப்பாளிகள் மீது நேரடியாக தொடுக்கப்படுகிற ஒரு பொருளாதார யுத்தமே ஆகும் என்பதோடு, கிரா மப்புற வறுமை ஒழிப்பு எனும் இலக்கை யும் முற்றிலுமாக நீர்த்துப் போகச் செய்துவிடும்.

NOV 14 – NOV 20 Page 13

NOV 14 – NOV 20 Page 13
நகர்ப்புற வேலை வாய்ப்பு : 7 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி விரைவு செய்திகள்

நகர்ப்புற வேலை வாய்ப்பு : 7 ஆண்டு கால போராட்டத்தின் வெற்றி

தமிழ் நாட்டில் நகர்ப்புற ஏழை மக்கள் ஏற்கனவே வேலையில்லா திண்டாட் டத்தால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள னர். இந்த நிலையில் கொரோனா பெரும் தொற்று மேலும் அவர்களை வறுமையில் தள்ளியது. ஊராட்சிகளில் ஊரக வேலை வசதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இதனால் அதிகமான ஏழை மக்கள் பயன் பெற்று வருகின்றனர். இது போன்று நகர் புறத்திலும் இளைஞர்கள், பெண்கள், மற்றும் வேலையற்றவர்களுக்கும் வேலை வழங்கும் வகையில் நகர்புற வேலை வாய்ப்பு திட்டத்தை உருவாக்கிட ஒன்றிய மாநில அரசுகள் நட வடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தோம். பேரூராட்சிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை கேட்டு மனு கொடுத்து வந்த னர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம் நடத்தி வந்தோம். கடந்த ஆட்சி காலத்தில் சென்னை யில் கோட்டை நோக்கி பேரணி நடத்தியுள் ளோம். எனினும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசு அமைந்த பின்னர் முதல்வரையும் அமைச்சர்களையும் சங்கத் தின் சார்பில் சங்க நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கை மனுக்கள் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் நமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட முதல்வர் தில்லி சென்று பிரத மரை சந்தித்து இக்கோரிக்கையை நிறை வேற்ற வலியுறுத்தியுள்ளார்.  தமிழ் நாடு சட்டப்பேரவையில் 24.08.2021 அன்று இக்கோரிக்கையை எற்று அறிவிப்பு செய்யப்பட்டது.

 

விரைவு செய்திகள்

வேளாண்மைப் பல்கலை.  தரவரிசைப் பட்டியல் ஒத்திவைப்பு

கோவை, நவ.2- தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இள மறிவியல் பட்டப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் இளமறிவியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் நவ.02 ஆம் தேதியன்று வெளியிடப்படுவதாக அறி விக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நிர்வாகக் காரணங் களினால் தரவரிசைப் பட்டியல் வெளியீடு தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தரவரிசைப் பட்டியல் வெளி யீட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று முதன்மையர் (வேளாண்மை) மற்றும் தலைவர் (மாணவர் சேர்க்கை) முனை வர் மா. கல்யாணசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தேயிலை தோட்டத்தில்  இறந்து கிடந்த சிறுத்தை

உதகை, நவ.2- நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஸ்ரீமதுரை ஊராட்சி பகுதியில் உள்ள தனியார் தேயிலை தோட்டத்தில் சிறுத்தை ஒன்று இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வனத்துறையினர் பார்வையிட்டனர். அப் போது, சுமார் ஒன்றரை வயதுடைய பெண் சிறுத்தை தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்ததை கண்டு விசாரணை நடத்தி னர். ஆனால், சிறுத்தையின் இறப்பிற்கான காரணம் தெரிய வில்லை.  சிறுத்தையின் உடலை உடற்கூறாய்வு நடத்திய பின் னர் இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

 உதகை: தொடர் மழையால் விற்பனை பாதிப்பு

உதகை, நவ.2- உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வடக்கிழக்கு பருவ மழை கடுமையாக பெய்து வருகிறது. மேலும், காலை நேரத் தில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் நகர்  பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. தீபாவளி  பண்டிகை  நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வியாபாரம், விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் நினைத்திருந்த சூழலில் காலநிலை மாற்றத்தால் ஏமாற்றம் அடைந்துள்ள னர். மேலும், சாலையோர வியாபாரிகள் கடைகளை போட முடியாமல் கடைவீதிகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது.  கடும் குளிரினால் பொதுமக்கள் அதிகளவில் கடைவீதிக்கு வராததால்,  உதகையில் தீபாவளி விற்பனை மந்தமாகவே  காணப்படுகிறது.

உதகை கட்டிடக் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா

உதகை, நவ.2- மெக்கன்ஸ் உதகை  கட்டிடக் கலைக் கல்லூரியின்  2015- 2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கான 8 ஆவது  பட்ட மளிப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப் புக் கல்லூரியும், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்ச் சரின் அங்கீகாரமும் பெற்ற உதகை மெக் கன்ஸ் கட்டிடக் கலைக்கல்லூரியில் பயின்ற 88 மாணவர்களுக்கு உதகை  எச்ஏடிபி வளா கத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் கல்வித் தலைவர் செல்வகுமார் வரவேற்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் திராவிடக் கழகத்தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழகத்தின் வேந்தரு மான முனைவர் கி.வீரமணி, பூந்தமல்லி  சட்ட மன்ற உறுப்பினர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக, கல்லூரியின்  தலைவர் முர ளிக்குமரன் நிகழ்ச்சியைத் துவக்கி வைக்க, முதல்வர் சரவணன்  கடந்தக் கல்வியாண்டின் அறிக்கையை வெளியிட்டார்.

NOV 14 – NOV 20 Page 14

NOV 14 – NOV 20 Page 14
கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் 5ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை உதகை: தொடர் மழையால் விற்பனை பாதிப்பு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளிகள் திறப்பு

குமரி மாவட்டத்தில் செவ்வா யன்று (நவ.2) அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. தக்கலை கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருவிதாங் கோடு அரசு நடுநிலைப்பள்ளி மற்றும் திருவட்டார் கல்வி மாவட்டத் திற்குட்பட்ட மாத்தார் அரசு நடு நிலைப்பள்ளி மாணவ மாணவிய ருக்கு தமிழ்நாடு தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ் மலர் மற்றும் இனிப்புகள் வழங்கி வரவேற்றார். மாணவ, மாணவியர்களின் பெற்றோருடன் கலந்துரையாடி பேசுகையில்: கொரோனா நோய்த்தொற்று  முதல் மற்றும் இரண்டாம் அலையின் காரணமாக சுமார் 20 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படவில்லை. அதன் காரணமாக குழந்தைகள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பள்ளிக ளுக்கு நேரில் சென்று, பாடம் கற்க முடி யாத சூழ்நிலை இருந்தது. மு.க.ஸ்டா லின் முதலமைச்சராக பதவியேற்ற போது கொரோனா நோய்த்தொற்று இரண்டாவது அலை உச்சநிலையில் இருந்தது. இதனை உணர்ந்து, பல்வேறு கொரோனா தடுப்பு நடவ டிக்கைகளை மேற்கொண்டதன் அடிப்படையில், தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. படிப்படியாக கல்லூரிகள் மற்றும் 9-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ, மாணவியர்களுக்காக பள்ளிகள் ஒரு சில மாதங்களுக்கு முன் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடைபெற்று வருகின்றன.

நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை மீனவர்கள் 5ஆவது நாளாக கடலுக்கு செல்லவில்லை

வட கிழக்கு பருவ மழை தொடங்கிய நாள் முதல் நெல்லை, தென்காசி,  மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. பிரதான அணையான பாபநாசம் முழு கொள்ளளவான 143 அடியை எட்டுவ தற்கு இன்னும் 8 அடியே தேவை. சேர்வலாறு அணை நீர்மட்டம் 137.60 அடியாக உள்ளது. இதற்கிடையே பிசான சாகுபடிக் காக திங்கள் முதல் அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பரவலாக மழை பெய்து வருவதால் பாபநாசம் அணையில் இருந்து வினாடிக்கு 1,034 கன அடி நீர் ஆற்றில் திறந்து விடப்படுகிறது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு சற்று  தணிந்துள்ளது. ஆனாலும் பொது மக்கள் குளிக்க தடை நீடிக்கிறது. 2 நாட்களாக மாவட்டத்தில் பாளை, நெல்லை, சேர்வலாறு, பாபநாசம், மணிமுத்தாறு, சேரன்மகாதேவி, களக்காடு, மூலக்கரைப்பட்டி, தென்காசி, செங்கோட்டை, ஆய்குடி, அம்பை, ராதாபுரம், நாங்குநேரி உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. 

நெல்லை, தென்காசி, மாவட்டங்களில் கனமழை

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரிப்பு

தென்காசி மாவட்டத்தில் விடிய விடிய சாரல் மழை பெய்துகொண்டே இருந்தது. இதனால் மாவட்டம் முழு வதும் பெரும்பாலான குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்துவரும் கனமழை காரணமாக குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மெயின் அருவியில் ஆர்ச்சை தொட்டபடி தண்ணீர் விழுகிறது. ஐந்த ருவி, பழைய குற்றாலம் அருவிக ளிலும் தண்ணீர் வரத்து அதிகரித் துள்ளது. இதன் மூலம் பாசனம் பெறும் குளங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட குளங்கள் நிரம்பி வழி கின்றன. பாவூர்சத்திரம், நாகல்குளம், சுரண்டை ரெட்டைகுளம், மாறாந்தை குளம் உள்ளிட்ட பல்வேறு குளங்க ளில் தண்ணீர் நிரம்பி மறுகால் பாய்கிறது.  ஆலங்குளம், பாவூர்சத்திரம், கடையம், சங்கரன்கோவில், செங் கோட்டை, சிவகிரி உள்ளிட்ட இடங்க ளிலும் விடியவிடிய பலத்தமழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில இடங்களில் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக மின்தடை ஏற்பட்டது. கடனா அணையில் 83 அடி நீர் இருப்பு உள்ளது. 132 அடி கொள்ள ளவு கொண்ட அடவிநயினார் அணை யில் 128 அடி நீர் இருப்பு உள்ளது. குண்டாறு அணை தொடர்ந்து நிரம்பி வழிகிறது.

உதகை: தொடர் மழையால் விற்பனை பாதிப்பு

உதகை, நவ.2- உதகை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வடக்கிழக்கு பருவ மழை கடுமையாக பெய்து வருகிறது. மேலும், காலை நேரத் தில் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதனால் நகர்  பகுதியில் கடும் குளிர் நிலவுகிறது. தீபாவளி  பண்டிகை  நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில், வியாபாரம், விற்பனை அதிகரிக்கும் என வியாபாரிகள் நினைத்திருந்த சூழலில் காலநிலை மாற்றத்தால் ஏமாற்றம் அடைந்துள்ள னர். மேலும், சாலையோர வியாபாரிகள் கடைகளை போட முடியாமல் கடைவீதிகளில் கூட்டம் குறைவாகவே உள்ளது.  கடும் குளிரினால் பொதுமக்கள் அதிகளவில் கடைவீதிக்கு வராததால்,  உதகையில் தீபாவளி விற்பனை மந்தமாகவே  காணப்படுகிறது.

உதகை கட்டிடக் கலைக்கல்லூரி பட்டமளிப்பு விழா

உதகை, நவ.2- மெக்கன்ஸ் உதகை  கட்டிடக் கலைக் கல்லூரியின்  2015- 2020 ஆம் கல்வி ஆண்டில் பயின்ற மாணவர்களுக்கான 8 ஆவது  பட்ட மளிப்பு விழா செவ்வாயன்று நடைபெற்றது. அண்ணா பல்கலைக்கழகத்தின் இணைப் புக் கல்லூரியும், கவுன்சில் ஆப் ஆர்க்கிடெக்ச் சரின் அங்கீகாரமும் பெற்ற உதகை மெக் கன்ஸ் கட்டிடக் கலைக்கல்லூரியில் பயின்ற 88 மாணவர்களுக்கு உதகை  எச்ஏடிபி வளா கத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

NOV 14 – NOV 20 Page 15

NOV 14 – NOV 20 Page 15
நூறு நாள் வேலையில் கூலி பாக்கியை வழங்காமல் தொழிலாளர்களை பட்டினி போடும் மோடி அரசு

நூறு நாள் வேலையில் கூலி பாக்கியை வழங்காமல் தொழிலாளர்களை பட்டினி போடும் மோடி அரசு

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி யளிப்பு திட்டத்தில், சட்டத்தின்படி வழங்க வேண்டிய கூலிப் பாக்கியை நாடு முழுவதும் வேலை செய்த தொழிலாளர்களுக்கு 5 மாதங்களாக‌ வழங்காமல், அவர்களை பட்டினி யில் தள்ளும் மோடி அரசுக்கு அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் அகில இந்திய தலைவர் ஏ.விஜயராகவன் , பொதுச் செய லாளர் பி.வெங்கட் ஆகியோர்  வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:         இந்தியாவின் 52 சதவீத ஏழை மக்களின் ஒரே வாழ்வாதாரமான ஊரக வேலை திட்டத்தை முழுவதுமாக அழிப்பதையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் ஒன்றிய  தேசிய ஜன நாயக கூட்டணி  அரசை,  அகில இந்திய விவசா யத் தொழிலாளர்கள்  சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.   கடந்த இரண்டு ஆண்டுகளில் கொரோனா  நோய் பெருந் தொற்றும்,  ஊரடங்கு காலமும்  பாதிப்புகளை  ஏற்படுத்திய போது,  நாட்டின் வேலைவாய்ப்பு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் முக்கிய பங்களிப்பை செய்தது  நூறு நாள் வேலைத் திட்டமே ஆகும்.  சட்டத்தின் படி நிதியை ஒன்றிய அரசு வழங்கத் தவறியதாலும், சரியான நேரத்தில் தொழிலாளர்களின் வங்கிக் கணக்கில் கூலிப் பணத்தை செலுத்தாததாலும்,   வேலை யில்லாக்  காலத்திற்கு நிவாரணம் வழங்காத தாலும்  இக் கோரிக்கைகளை தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும்  ஒன்றிய பாஜக அரசு  புறக்கணித்து வருகிறது.  ஆனால் இப்போது  சட்டத்தால் வரையறுக்கப்பட்ட   நிதியை வழங்கக்கூட அரசாங்கத்திடம்  பணம் இல்லை யென்று  சொல்வது அபாயகரமானது.  அரசாங் கத்தின் நிதிநிலை அறிக்கையின்படியே 8,686 கோடி ரூபாய் அரையாண்டு முடிவதற்கு முன்பே  நிலுவையில் இருப்பது அதிர்ச்சி யளிக்கிறது.

NOV 14 – NOV 20 Page 16

NOV 14 – NOV 20 Page 16
15 கோடி மக்களின் பசி தீர்த்திடும் திட்டத்தை பலவீனமாக்குவதா? பட்டு கைவிட்டதா? கைத்தறி கை கொடுத்ததா? டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

15 கோடி மக்களின் பசி தீர்த்திடும் திட்டத்தை பலவீனமாக்குவதா?

மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டமான நூறுநாள் வேலைத்திட்டம் நிதியின்றி தவிக்கி றது. இத்திட்டத்திற்கான நிலுவைத்தொகையை ஒன்றிய அரசு உடனே வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து ஒன்றிய கிராமப்புற மேம்பாடு-வளர்ச்சித்துறை  அமைச்சர்  கிரிராஜ்சிங்கிற்கு சு.வெங்கடேசன் எம்.பி. அனுப்பியுள்ள கடிதம் வருமாறு:  மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் நாடு முழுக்க நிதியின்றித் தவிக்கிறது. 21 மாநிலங்க ளில் ஒன்றிய அரசு அனுப்பிய நிதி தீர்ந்து விட்டது.  15 கோடி மக்களுக்கு பசி தீர்க்கும் திட்டம் இது. கோவிட் காலத்தில் வாழ வழியின்றி சொந்த கிராமங்களுக்கு திரும்பிய மாநகர உழைப்பாளிகள் இன்னும் திரும்பி வர வில்லை. இதனால் ஊரக வேலைத் திட்டத் தையே அவர்கள் சார்ந்து இருக்க வேண்டி யுள்ளது. ஏற்கெனவே இத் திட்டத்திற்கு ஒதுக்கு கிற பட்ஜெட் தொகை போதுமான அளவில் இல்லை. கடந்த ஆண்டு 1.11 லட்சம் கோடி ரூபாய் செலவான நிலையில் இவ்வாண்டு பட்ஜெட்டில்  73 ஆயிரம் கோடி மட்டுமே  ஒதுக்கப்பட்டது. அப்போதே இடதுசாரிக்   கட்சிகள் சுட்டிக் காட்டியும் அரசு செவி சாய்க்க வில்லை. அதன் விளைவே தற்போதைய நிதி நெருக்கடி. நாடு முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்த பின்புலத்தில் கூடுதல் நிதி ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன.  

பட்டு கைவிட்டதா? கைத்தறி கை கொடுத்ததா?

அரியலூர் மாவட்டம் எல்லையூரைச் சேர்ந்தவர் கே.அம்சவள்ளி. நெசவாளர். பாரம்பரியமான நெசவாளர் குடும்பம். தலைமுறை தலைமுறையாக நெசவு தான் இவர்க ளது ஜீவாதாரம். எல்லையூரில் அவரது வீட்டில் ஒற்றை பல்பு ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அவரது வீடு கைத்த றியின் சத்தத்தால் நிரம்பியிருந்தது. அம்சவள்ளியின் கைகள் மாயாஜாலம் போன்று வித்தைகள் புரிந்தன. அவரது கைவிரல்கள்  மிக நேர்த்தியாக  நெய்யப் பட்ட தங்கக் கரைகளுடன் கூடிய ஆறு-மீட்டர் புடவை களுக்குத் நூலை மாற்றிக்கொண்டிருந்தன.  கடந்த இரண்டு ஆண்டுகளாக, அம்சவல்லி உள்ளிட்ட பல்வேறு நெசவாளர்களுக்கு  போதுமான வேலை கிடைக்கவிலலை. கொரோனா பரவலும் இதற்கு ஒரு காரணம்.உற்பத்தி செய்யப்பட்ட சேலை களை கொண்டு சேர்ப்பதிலும் சிக்கல் இருந்தது. போதுமான வருவாய் கிடைக்காததால் அம்ச வள்ளி தனது இரண்டு மகன்களையும் தனியார்  பள்ளியில் இருந்து அரசுப் பள்ளிக்கு மாற்றி விட்டார். ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட சில பொருட்கள் இவருக்கு உதவியது.

அரியலூர் நெசவாளர்கள் ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு புடவைகளை மொத்தமாக விற்பனை செய்து வந்துள்ளனர். காட்டன் புடவை  விலை ரூ.750 முதல் ரூ.1,500 வரையிலும், பட்டுப் புடவை ரூ.3,000 முதல் ரூ.25,000 வரையிலும் விற்கிறது. ஆனால் தொற்றுப்பரவலை அடுத்து  ரூ. 50 தள்ளுபடியுடன் புடவைகளை தமிழகத்திலேயே விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தில் தொழில் இன்றி தவித்த நெசவாளர்களுக்கு தமிழக பிற்படுத் தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர்,  கைத்தறி புடவைகளின் விற்பனையை அதிகரிக்க வும், நெசவாளர்கள் மொத்தமாக ஆர்டர்களைப் பெறவும் ஒரு இணையதளத்தை (https://ariyalur.nic.in) தொடங்கி வைத்தார்.

டிஎஸ்பி ஜெயராமன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடி சோதனை

தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ஜெயராமனின் திண்டுக்கல் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையி னர் செவ்வாயன்று சோதனை நடத்தினர்.  திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயராம். கடந்த 1998ல் சார்பு ஆய்வாளராக திண்டுக்கல் சாமி நாதபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு இடங்களில் ஆய்வாளராக பணியாற்றிய ஜெயராம், டிஎஸ்பியாக பதவி உயர்வு பெற்று பொள் ளாச்சியில் பணியாற்றினார். அப்பொழுது தமிழகத்தையே உலுக்கிய பாலியல் வழக்கில்  விசாரணை அதிகாரியாக இருந்துள்ளார். தற்பொழுது தூத்துக்குடி மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி ஆக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் செவ்வாயன்று திண்டுக்கல் அசோக் நகரில் உள்ள அவரது வீட்டில் அதி காலை முதல் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார்  சோதனையில் ஈடுபட்டனர். வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்களை குவித்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில் தூத்துக் குடியில் பணியில் உள்ள டிஎஸ்பிக்கு சொந்த மான திண்டுக்கல் மற்றும் தூத்துக்குடியில் உள்ள வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். காலை 6.30 மணிக்கு துவங்கிய இந்த சோதனை மதியத்திற்கும் மேலும் நீடித்தது. இந்த சோதனையில் வீட்டில் பீரோக்க ளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கணக்கில் வராத ஏராளமான தங்க நகைகளும், வருமா னத்திற்கு அதிகமாக அவர் சேகரித்த சொத்துக் கள் தொடர்பான ஆவணங்களும்  சிக்கிய தாக தெரிகிறது. இந்த ஆவணங்களின் அடிப்ப டையில் லஞ்ச ஓழிப்பு போலீசார், டிஎஸ்பி ஜெயராமின் குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button