OCT 31-NOV 06
OCT 31-NOV 06 -Page1
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் என்.நன்மாறன்
மூத்த தோழர் நன்மாறன் மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச்செயலாளர் கே,பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான தோழர் என்.நன்மாறன் அவர்கள் உடல் நலக் குறைவால் மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று (28.10.2021) மாலை 4 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 74. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத்தான தலைவர் தோழர் என்.நன்மாறன்
தோழர் என். நன்மாறன் இளம்வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் கடைசி வரை கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட அவர் நீண்டகாலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராக செயல்பட்டார். இரண்டு முறை தமிழக சட்டப்பேரவைக்கு மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.
தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் என்.நன்மாறன் அந்த அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வாலிபர் சங்கத்தில் இணைத்தவர்.
OCT 31-NOV 06 Page2
சிபிஎம் மூத்த தலைவர் - மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் காலமானார்
சென்னை,அக்.28- சிபிஎம் மூத்த தலைவர் தோழர் என்.நன்மாறன் மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினருமான தோழர் என்.நன்மாறன் அவர்கள் உடல் நலக் குறைவால் மதுரை, அரசு இராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி அக்டோபர் 28 அன்று மாலை 4 மணியளவில் காலமானார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு வயது 74. அவருடைய மறைவுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
தோழர் என். நன்மாறன் இளம்வயதிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர், கடைசி வரை கட்சியின் முழுநேர ஊழியராக பணியாற்றினார். கட்சியின் மதுரை மாவட்ட செயற்குழு உறுப்பினராகவும், மாவட்டக்குழு உறுப்பினராகவும் செயல்பட்ட அவர் நீண்டகாலம் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
சிபிஎம் மூத்த தலைவர் - மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் காலமானார்
இரண்டு முறை தமிழக சட்டப்பேரவைக்கு மதுரை கிழக்கு தொகுதியிலிருந்து தேர்வு செய்யப்பட்டு திறம்பட பணியாற்றியவர். தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் என்.நன்மாறன் ,அந்த அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வாலிபர் சங்கத்தில் இணைத்தவர்.
மேடைக் கலைவாணர் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட அவர் தன்னுடைய எளிமையான, நகைச்சுவை மிகுந்த உரையினால் மார்க்சியக் கருத்துக்களையும் கட்சியின் கொள்கைகளையும் எளிய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். தன்னுடைய அற்புதமானப் பேச்சுக் கலையால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். எளிய வாழ்க்கை முறையால் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக விளங்கியவர். கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையையும் செல்வாக்கையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
சிபிஎம் மூத்த தலைவர் - மேடைக் கலைவாணர் தோழர் என்.நன்மாறன் காலமானார்
தமிழகத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் என்.நன்மாறன் ,அந்த அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அகில இந்திய துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். தமிழகத்தில் கிராமம் கிராமமாகச் சென்று பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை வாலிபர் சங்கத்தில் இணைத்தவர்.
மேடைக் கலைவாணர் என்று தமிழக மக்களால் அழைக்கப்பட்ட அவர் தன்னுடைய எளிமையான, நகைச்சுவை மிகுந்த உரையினால் மார்க்சியக் கருத்துக்களையும் கட்சியின் கொள்கைகளையும் எளிய மக்களுக்கும் கொண்டு சேர்த்தவர். தன்னுடைய அற்புதமானப் பேச்சுக் கலையால் பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும் ஆற்றல் வாய்ந்தவர். எளிய வாழ்க்கை முறையால் ஒரு சிறந்த கம்யூனிஸ்ட்டாக விளங்கியவர். கட்சிக்கு பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய மரியாதையையும் செல்வாக்கையும் ஏற்படுத்திக் கொடுத்தவர்.
OCT 31-NOV 06 Page3
100 சதவீதம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
தூத்துக்குடி, அக்.28- தூத்துக்குடி மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில், விவசாயி கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ், தலைமையில் வியாழ னன்று (28.10.2021) நடைபெற் றது. இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் விவசாயிகளின் பல் வேறு கோரிக்கைகள், குறை களை கேட்டறிந்தார். மேலும் விவ சாயிகளின் கோரிக்கைகள் மற்றும் குறைகளை உடனுக்கு டன் நிறைவேற்ற உரிய அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் மூலம் 2021-22 மானிய திட்டங்களின் விவ ரத்தினை மாவட்ட ஆட்சியர் விவ சாயிகளிடம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் வருடாந்திர இயல்பான மழை யளவு 662.20 மி.மீ. அக்டோபர் 2021 மாதம் இயல்பான மழை யளவு 150.70 மி.மீ., அக்டோபர் 2021 (27.10.2021 வரை) மாதத்தில் மட்டும் இதுவரை 60.61 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது. ஜனவரி முதல் அக்டோபர் வரை 393.40 மி.மீ. மழை கிடைக்கப் பெற்றுள்ளது.
100 சதவீதம் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு ஆட்சியர் வேண்டுகோள்
வரி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
தூத்துக்குடி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை உரிய காலத்திற்குள் நிலுவையின்றி செலுத்தாவிட்டால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என அறி விக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி ஆணை யர் மற்றும் தனி அலுவலர் சாருஸ்ரீ வெளி யிட்ட செய்திக்குறிப்பு தூத்துக்குடி மாநகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறை வேற்றும் விதமாக மாநகராட்சி சார்பில் பல் வேறு திட்டங்களின் வாயிலாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் மாநகராட்சி பொது நிதியிலிருந்து மாநகரப் பகுதி களில் நிறைவேற்றப்பட வேண்டிய அத்தி யாவசிய பணிகள் பொதுமக்கள் நலன் கருதி அவ்வப்போது நடைபெற்று வருகிறது மேற்படி அவசரகால அந்தியாவசிய தேவை களுக்காக பெருமளவிலான தொகை செல விடப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கான அடிப்படை கட்ட மைப்பு வசதிகளை தொய்வின்றி நிறை வேற்றுவதற்கு மாநகராட்சியின் நிதி ஆதா ரம் இன்றியமையாததாகும் இந்நிலையில் மாநகராட்சிக்கு வரவேண்டிய வருவாய்கள் பொதுமக்களிடமிருந்து உரிய காலத்திற் குள் வரப்பெற்றால்தான் பணிகளை திட்ட மிட்டு நிதி ஒதுக்கீடு செய்து செயல்படுத்த இயலும்.
OCT 31-NOV 06 Page4
தீபாவளி பண்டிகை: திருப்பூரில் தற்காலிக பேருந்து நிலையம் - ஆட்சியர் அறிவிப்பு
தீபாவளி பண்டிகையையெட்டி பேருந்து நிலையங்களில் ஏற்படும் கூட்ட நெரிசலை குறைக்கும் பொருட்டு திருப்பூரில் தற் காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகையையொட்டி திருப்பூர் மாவட்டத்தி லுள்ள மக்ககள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று வரும் நோக்கிலும், மேலும் பயணிகளின் நெரிசலை குறைக்கும் பொருட்டும் குமார் நகர், பழை வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலக காலியிடத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் எஸ். வினீத் தெரி வித்துள்ளார். அதன்படி, கரூர், திருச்சி, பெரும்பலூர், அரிய லூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலிருந்து வரும் பேருந்துகள் அனைத்தும் காங் கயம் சாலையிலிருந்து முதலிபாளையம் பிரிவு பெருந் தொழுவு சாலை வழியாக கோவில் வழி பேருந்து நிலையத் திற்கு சென்றடைய வேண்டும்.
குழந்தை உட்பட 4 பேருக்கு டெங்கு கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி
குழந்தை உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கோவை மாவட்டத்தில் பெய்து வரும் பருவமழை காரணமாக டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுதவிர மலே ரியா, வைரஸ் காய்ச்சல் பாதிப்பும் அதிக ரித்துள்ளது. இதனால் அரசு மருத்துவ மனையின் காய்ச்சல் பிரிவுக்கு சிகிச்சைக் காக வரும் நோயாளிகளின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள் ளது. இதில் சிலருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பிற்கான அறிகுறி தென்படுகிறது. தற்போது கோவை அரசு மருத்துவம னையில் ஒரு குழந்தை உள்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் டெங்கு சிறப்பு வார்டில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்ற னர். இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் நிர்மலா கூறுகையில், கோவை அரசு மருத்துவமனையில் காய்ச்சல் பாதிப்பினால் வரும் நோயாளிகள் எண் ணிக்கை சற்று உயர்ந்துள்ளது. தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட 81 பேர், டெங்கு பாதிப்பால்
OCT 31-NOV 06 Page5
தார்ச்சாலையை சீரமைத்திட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
அவிநாசி, அக்.30- அவிநாசி அருகே ராக்கியாபாளையம் பகுதி செல்லும் சாலையை சீரமைத்து தர வியாழனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யினர் மனு அளித்தனர். திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி பேரூராட்சிக்குட்பட்ட, உமையஞ் செட்டிபா ளையத்திலிருந்து ராக்கியாபாளையம் வழி அம்மாபாளையம் உள்ள மெயின் ரோடு சாலையில், பைப்லைன் பதிப்பதற்காக பள் ளம் தோண்டப்பட்ட நிலையில் அவை சரிவர மூடாததால் குண்டும்,குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப் பட்டு வருகின்றனர். சில நேரங்களில் பெரும் விபத்தும் கூட ஏற்படுகின்றது. ஆகவே, இச் சாலையை சீரமைத்திட வேண்டும். 11-வது வார்டு குமரன் காலனி, பழனி யப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக பொதுமக்க ளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, காய்ச் சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டு கடந்த 10 தினங்களாக அவை அதிகரித்து வருகிறது, இதனை ஆய்வு செய்து நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத் திட வேண்டும்
கொடநாடு வழக்கு: கனகராஜ் அண்ணன் தனபாலை விசாரிக்க அனுமதி
11-வது வார்டு குமரன் காலனி, பழனி யப்பா நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக பொதுமக்க ளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, காய்ச் சல் போன்ற நோய் தொற்றுகள் ஏற்பட்டு கடந்த 10 தினங்களாக அவை அதிகரித்து வருகிறது, இதனை ஆய்வு செய்து நோய்த்தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத் திட வேண்டும் எனக்கோரி திருமுருகன்பூண்டி பேரூராட்சி செயலரிடம் மார்க்சிஸ்ட் கட்சி யின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.வெங் கடாச்சலம், ஒன்றியக்குழு உறுப்பினர் பால சுப்பிரமணிம், கிளை செயலாளர்கள் காம ராஜ், சுப்பிரமணி ஆகியோர் மனு அளித்த னர்.
OCT 31-NOV 06 Page6
ஒன்றிய அரசை கண்டித்து மீன் தொழிலாளர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கொடநாடு வழக்கில் கனகராஜ் அண்ணன் தனபாலை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி அனுமதியளித் தார். முன்னாள் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதாவிற்கு சொந்தமான நீலகிரி மாவட்டத்திலுள்ள கொடநாடு இல்லத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை தொடர்பான வழக்கானது உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன் னாள் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தனபாலிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.இதன்பின், கனகரா ஜின் விபத்து வழக்கையும் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் போலீசாரிடம் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
தன்னார்வலர்களுக்கு மடிக்கணினி வழங்கும் விழா
வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற விழாவில் தன்னார்வ லர்கள் 30பேர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேடு மற்றும் சில்ரன் பிலீவ் நிறுவனங்கள் இணைந்து மன்னார் வளைகுடா பகுதி கிராமங்களைச் சேர்ந்த 30 தன்னார்வலர்களுக்கு மடிக் கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழா வில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினார். கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சின்னரசு மற்றும் பேடு நிறுவன செயல் இயக்குனர் ராஜேந்திர பிர சாத் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேடு நிறுவன திட்ட செயலாக்க அலுவலர் பவுன்ராஜ் வர வேற்புரை வழங்கினார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி சிறப்புரை வழங்கினார். இம்மடிக்கணினி யின் மூலம் குழந்தைகளின் கற்றலை எளி மையாக்கும் விதத்தில் மேற்கொள்ள இருக்கும் செயல்முறைகள் குறித்து திட்ட இயக்குனர் மன்னர் மன்னன் பேசினார்.
திருநெல்வேலி மாவட்டம் ராதரபுரம் தொழிற்பயிற்சி மையத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவை
வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்ற விழாவில் தன்னார்வ லர்கள் 30பேர்களுக்கு மடிக்கணினி வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளியில் பேடு மற்றும் சில்ரன் பிலீவ் நிறுவனங்கள் இணைந்து மன்னார் வளைகுடா பகுதி கிராமங்களைச் சேர்ந்த 30 தன்னார்வலர்களுக்கு மடிக் கணினி வழங்கும் விழா நடைபெற்றது. விழா வில் தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி தலைமை வகித்து மடிக்கணினிகளை வழங்கினார். கோவில்பட்டி கல்வி மாவட்ட கல்வி அலுவலர் சின்னரசு மற்றும் பேடு நிறுவன செயல் இயக்குனர் ராஜேந்திர பிர சாத் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் பேடு நிறுவன திட்ட செயலாக்க அலுவலர் பவுன்ராஜ் வர வேற்புரை வழங்கினார். அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியை தமிழ்செல்வி சிறப்புரை வழங்கினார். இம்மடிக்கணினி யின் மூலம் குழந்தைகளின் கற்றலை எளி மையாக்கும் விதத்தில் மேற்கொள்ள இருக்கும் செயல்முறைகள் குறித்து திட்ட இயக்குனர் மன்னர் மன்னன் பேசினார்.
OCT 31-NOV 06 Page7
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் குறைந்தபட்ச வரி
பெருநிறுவனங்களின் லாபத்தில் குறைந்தபட்சம் 15 சதவீதமாவது வரி விதிக்கும் ஒப்பந்தம் ஒன்றுக்கு, உலகின் 20 முக்கிய பொருளாதாரங்களைச் சேர்ந்த தலைவர்கள் ஒப்புதலளித்துள்ளனர்.பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை குறைவான வரி விதிக்கும் நாடுகளுக்கு திசை திருப்பிவிடும் பிரச்சனையைத் தொடர்ந்து இப்படி ஒரு ஒப்பந்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ரோம் நகரத்தில் நடந்த, ஜி20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட அனைத்து நாட்டுத் தலைவர்களும் இந்த ஒப்பந்தத்துக்கு தங்கள் சம்மதத்தைத் தெரிவித்தனர்.உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் பருவநிலை மாற்றம் மற்றும் கொரோனா போன்ற பிரச்சனைகளும் உள்ளன. பெருந்தொற்று தொடங்கி யதிலிருந்து ஜி20 நாட்டுத் தலைவர்கள் நேரடியாக கலந்து கொள்ளும் முதல் சந்திப்பு இது.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் குறைந்தபட்ச வரி
9 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றி யத்தை உள்ளடக்கிய ஜி20 குழுவில் சீனாவின் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்யாவின் விளாடிமிர் புதின் ஆகிய இருவர் மட்டும் நேரடியாக கலந்து கொள்ளாமல் காணொளி வழியாக கலந்து கொண்டனர்.அமெரிக்கா முன்மொழிந்த இந்த வரி ஒப்பந்தம், ஞாயிற்றுக்கிழமை முதல் அதிகாரபூர்வமாக பின்பற்றப்படும் என ராய்டர்ஸ் முகமை கூறியுள்ளது. 2023ம் ஆண்டில் இது அமல்படுத்தப்படும். உலக பொருளாதாரத்துக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒரு “முக்கிய தருணம்” என்றும், “குறைவாக வரி வசூலிக்கும் நாடுகளுக்கு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு ஓடும் கார்ப்பரேட் வரி பிரச்சனையை குறைக்கும்” என்றும் அமெரிக்க கருவூல செயலர் ஜனெட் யெல்லன் கூறினார். பல அமெரிக்காவைச் சேர்ந்த பெரு நிறுவனங்கள் அதிகம் வரி செலுத்த வேண்டி இருந்தாலும், அமெரிக்க வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்கள் இந்த வரி ஒப்பந்தத்தின் மூலம் பலனடைவார்கள் என அவர் தன் ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 15 சதவீதம் குறைந்தபட்ச வரி
ஜி20 மாநாட்டில் நடக்கும் நிகழ்வுகள் பருவநிலை மாற்ற மாநாட்டில் எதிரொலிக்கலாம் என தெரிகிறது. உலகின் வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த ஜி20 நாடுகளின் வாக்குறுதிகளை வரைவு அறிக்கை ஒன்றில் பட்டியலிட்டுள்ளதாக ராய்டர்ஸ் முகமை கூறியுள்ளது. மேலும் அதற்கு அர்த்தமுள்ள மற்றும் சீரிய முறையில் நடவடிக்கை எடுக்கும் செயல்பாடுகள் தேவைப்படும் என அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக ராய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
OCT 31-NOV 06 Page 8
டிச.10 - வாகனங்களை சாலைகளில் நிறுத்தி எதிர்ப்பு
சிஐடியு அழைப்பு
கோயம்புத்தூர் அக்.30– ஒன்றிய பாஜக அரசின் தொடர் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து டிசம்பர் 10 ஆம் தேதி பத்து நிமிடம் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி எதிர்ப்பை வெளிப்படுத்தும் போராட்டத்தை சிஐடியு மாநில நிர்வாகக்குழு அறிவித்துள்ளது. இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) மாநில நிர்வாகக்குழு கூட்டம் கோவையில் 28 ஆம் தேதி துவங்கி 30 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் நடை பெற்றது. மாநிலத் தலைவர் அ.சவுந்தர ராசன் தலைமை வகித்தார். சிஐடியு அகில இந்திய தலைவர் டாக்டர் ஹேம லதா, அகில இந்திய துணை தலைவர் ஏ.கே.பத்மநாபன், மாநிலப் பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துக!
ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து தரப்பு மக்க ளும் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்ற னர். இதனை எதிர்த்து சிஐடியு அனை த்து மாவட்டங்களிலும் சைக்கிள் யாத்தி ரை, மாட்டு வண்டி பேரணி உள்ளிட்ட வடி வங்களில் தொடர்ந்து போராட்டம் நடத்துவது. தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக டிசம்பர் 10 ஆம் தேதி பத்து நிமிடம் வாகனங்களை நிறுத்தி போராட்டத்தை முன்னெடுக்க உள் ளோம். இதில் அனைத்து அமைப்பு களையும் பங்கேற்க செய்வதற்கான ஏற் பாடுகளை முன்னெடுக்க உள்ளோம். டிசம்பர் 10 ஆம்தேதி காலை 12 மணி முதல் 12.10 மணி வரை பத்து நிமிடங்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரி விக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள் ளது.
OCT 31-NOV 06 Page 9
சிஐடியு அழைப்பு
இதில் அனைத்து அமைப்பு களையும் பங்கேற்க செய்வதற்கான ஏற் பாடுகளை முன்னெடுக்க உள்ளோம். டிசம்பர் 10 ஆம்தேதி காலை 12 மணி முதல் 12.10 மணி வரை பத்து நிமிடங்கள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி ஒன்றிய அரசுக்கு எதிர்ப்பை தெரி விக்க பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுப்பது என முடிவெடுக்கப்பட்டுள் ளது. இப்போராட்டத்தை வெற்றிகர மாக்கிட சிறு சிறு குழுக்களை அமைத்து அனைத்து பெட்ரோல் பங்குகள் மற்றும் டோல்கேட்டுகள், டிராபிக் சிக்னல்கள் என போக்குவரத்து அதிகம் உள்ள பகுதிகளில் துண்டு பிரசுரங்களை விநியோகிப்பது என முடிவெடுக்கப் பட்டுள்ளது. இதர அமைப்புகளுடன் பேசி இப்போராட்டத்தை வலுவான போராட்டமாக முன்னெடுக்க இருக்கிறோம்.
தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்துக!
திமுக தலைமையிலான மாநில அரசு வந்து 100 நாட்கள் ஆகிவிட்டது. போக்கு வரத்து, ஆவின், சிவில் சப்ளையர்ஸ் என எதிலும் போனஸ் கொடுக்க வில்லை. கடந்த அரசு செய்த தவறை இந்த அரசும் தொடர்கின்றது. தொழி லாளர்கள் மீது கடந்த ஆட்சியில் போடப் பட்ட வழக்குகள் இது வரை திரும்பப் பெறப்படவில்லை. பல்வேறு ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் தமிழக முதல்வர் தமிழ்நாட்டில் தொழிலாளர் களுக்கு, தொழிலுக்கு இருக்கும் பிரச்ச னைகள் குறித்து தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இதேபோல் பட்டாசு வெடிக்கக் கூடாது, செங்கல் சூளை யில் மண் எடுக்க கூடாது என்று சொல்லப்படும் விவகாரத்தில் மாற்று ஏற்பாடு என்ன என்பதையும் அரசு சேர்த்து பார்க்க வேண்டும்.
OCT 31-NOV 06 Page 10
20 லட்சம் பேருக்கு வீட்டிலிருந்து வேலை விவசாயம், சுற்றுலா துறைகளில் கூடுதல் வாய்ப்பு
வீட்டிலிருந்து பணியை பரவலாக்குவதன் மூலம் 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்க கேரள அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று முதல்வர் பினராயி விஜயன் கூறினார். அதே நேரத்தில் விவசாயம், சுற்றுலா உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். புதிய கேரளாவை உருவாக்க வேலைவாய்ப்பு அவசியம் என்றும் அவர் கூறினார். பாலயாடு சிட்கோ தொழிற்பேட்டையின் சீரமைப்புப் பணிகளைத் தொடக்கி வைத்த முதல்வர் மேலும் பேசியதாவது: இந்த அரசு ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்தில் ரூ.3220 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலுமிருந்து தொழில்முனைவோர் வருகிறார்கள். 4299 சிறிய - நடுத்தர அலகுகள் தொடங்கப்பட்டன. இது 17,448 வேலைகளை உருவாக்கியுள்ளது. நாடும் மக்களும் ஒற்றுமையாக இருந்ததன் காரணமாகவே முந்தைய அரசாங்கத்தால் இணையற்ற வளர்ச்சியை அடைய முடிந்தது. இந்த அரசுக்கு மக்களின் முழு ஆதரவு உள்ளது. இருப்பினும், அரிதாக, சில குறுகிய மனப்பான்மை கொண்டவர்கள் வளர்ச்சி தேவையில்லை என்று நினைக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை நிராகரித்ததன் மூலம்தான் சாதனை படைக்க முடிந்தது. தொழில்துறைக்கு உகந்த சூழலை உருவாக்க பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. முதலீட்டாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மாநில மற்றும் மாவட்ட அளவில் சட்டபூர்வமான குழுக்களை அமைக்க சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. தொழில்களில் மையப்படுத்தப்பட்ட ஆய்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. விரைவாக தொழில் தொடங்கத் தேவையான நடவடிக்கைகள் எளிமைப்படுத்தப்பட்டன. ரூ.50 கோடிக்கு மேல் முதலீட்டில் தொழில் தொடங்க தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தால் ஏழு நாட்களுக்குள் உரிமம் வழங்கப்படும். இதன் மூலம் முதலீட்டுக்கு உகந்த மாநிலமாக கேரளா மாறி வருகிறது என்றும் முதல்வர் கூறினார். விழாவுக்கு கண்ணூர் மாவட்ட ஊராட்சித் தலைவர் பி.பி.திவ்யா தலைமை வகித்தார்.
தோழர் டி.எஸ்.ரங்கராஜன் இறுதி நிகழ்ச்சி சிபிஎம் தலைவர்கள் புகழாரம்
தோழர் டி.எஸ்.ஆர். என்று அனை வராலும் அன்புடன் அழைக்கப்பட்ட டி.எஸ்.ரங்கராஜன் வெள்ளியன்று (அக். 29) காலமானார். அவரது உடல் ஞாயிறன்று தகனம் செய்யப்பட்டது. இந்தியன் ஆயில் எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற அமைப்பை 1996ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். மேலும் அந்த தொழிற்சங்கத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மாநி லங்கள் அனைத்திற்குமான அங்கீ காரம் பெற்ற தொழிற்சங்கமாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் தோழர் டி.எஸ். ரங்கராஜன். அவர் திடீர் உடல் நலக்குறைவால் வெள்ளிக் கிழமை(அக்.29) காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டை, அபிராமி புரம் அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவ ரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
OCT 31-NOV 06 Page 11
மழைக்கால நோய்களை கட்டுப்படுத்த ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்
மழைக்காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். மழைக்காலம் மற்றும் குளிர் காலத்தில் பருவ கால நோய்களான டெங்கு உள்ளிட்ட நோய்கள் அதிகம் பரவ வாய்ப்புள்ளது. இதனால் பொதுமக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என அரசு வலி யுறுத்தியுள்ளது. டெங்கு வைர ஸில் இருந்து காக்க சுற்றுப்புற த்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். கொசுக்கள் உற்பத்தி இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வீட்டில் இருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கி விசாலமாக வீடு இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இந்நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எழுதியுள்ள கடிதத்தில், கொரோ னாவை கட்டுப்படுத்தும் பணிகளில் உரிய கவனம் செலுத்த வேண்டும்; டெங்கு, மழை காலங்களில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்த தயாராக இருக்க வேண்டும். சுகாதாரத் துறைக்கு அடுத்த 2 மாதங்கள் சவா லானதாக இருக்கும்; நோய் தடுப்பு பணிகளில் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
தோழர் டி.எஸ்.ரங்கராஜன் இறுதி நிகழ்ச்சி சிபிஎம் தலைவர்கள் புகழாரம்
தோழர் டி.எஸ்.ஆர். என்று அனை வராலும் அன்புடன் அழைக்கப்பட்ட டி.எஸ்.ரங்கராஜன் வெள்ளியன்று (அக். 29) காலமானார். அவரது உடல் ஞாயிறன்று தகனம் செய்யப்பட்டது. இந்தியன் ஆயில் எம்ப்ளாயீஸ் யூனியன் என்ற அமைப்பை 1996ஆம் ஆண்டில் தோற்றுவித்தார். மேலும் அந்த தொழிற்சங்கத்தை இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தென் மாநி லங்கள் அனைத்திற்குமான அங்கீ காரம் பெற்ற தொழிற்சங்கமாக வளர்த்தெடுத்த பெருமைக்குரியவர் தோழர் டி.எஸ். ரங்கராஜன். அவர் திடீர் உடல் நலக்குறைவால் வெள்ளிக் கிழமை(அக்.29) காலமானார். சென்னை ஆழ்வார்பேட்டை, அபிராமி புரம் அசோக் நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அவ ரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனி ஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பி னர் டி.கே.ரங்கராஜன், மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம் ஆகியோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
OCT 31-NOV 06 Page 12
கனமழையால் வெள்ளத்தில் தவிக்கும் தூத்துக்குடி மக்கள்
தூத்துக்குடியில் கனமழை காரண மாக பி அன்டு டி காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. காற்றழுத்த தாழ்வு பகுதி காரண மாக, தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் தூத்துக்குடியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பி அன்டு டி காலனி 16வது தெரு மேற்கு, (கோக்கூர் - பெருமாள் கோயில் பாதை மத்தி தெரு). ஏரியா முழுவதும் மழைநீரால் நிரம்பி தண்ணீர் தேங்கிக் கிடக்கிறது. மழை வெள்ளத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ராஜீவ்நகர், தாளமுத்துநகர், கலைஞர் நகர், ராஜீவ்காந்தி நகர் உள்ளிட்ட இடங்களில் ஏராளமான வீடு களை தண்ணீர் சூழ்ந்து உள்ளது.
ஒற்றுமை தின மினி மராத்தான் போட்டி
சர்தார் வல்லபாய் படேலின் 146 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு 31.10.2021 அன்று, தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெய லலிதா மீன்வளப் பல்கலைக் கழகத்தின் சார்பில் மாணவ மாணவிகளுக்கான மினி மராத்தான் போட்டி ‘ஓற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் நடத்தியது. இதில் பல்கலைக் கழகத்திலுள்ள 8 கல்லூரிகளிலிருந்து மொத்தம் 80 மாண வர்கள் மற்றும் 52 மாணவிகள் பங்கு பெற்றனர். இப்போட்டியை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் எஸ். ஜெயகுமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவர்களுக்கான 5 கி.மீ ஓட்டப்பந்த யம் மறன்மடம் பேருந்து நிறுத்ததிலிருந்தும் மாணவிகளுக்கான 3 கி.மீ ஓட்டப்பந்தயம் கோரம்பள்ளம் பேருந்து நிறுத்ததிலிருந்து தொடங்கி மீன்வளக்கல்லூரியின் விளை யாட்டு மைதானத்தில நிறைவுற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்கா ணிப்பாளர் எஸ். ஜெயகுமார் பரிசு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மீன்வள மாலுமி கலை தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் கேப்டன் விஸ்வநாதன் பங்கேற்றார். முன்னதாக விளையாட்டு செயலாளர் பா.பார்த்திபன் வரவேற்றார். உதவி உடற் கல்வி இயக்குநர் நடராஜன் நன்றி கூறினார். இந்நிகழ்வில் ஒரு பகுதியாக, நாட்டு நலப்பணித்திட்டத்தின் சார்பாக “தேசிய ஒற்றுமை நாள்” உறுதிமொழியை அனைத்து மாணவ-மாணவியர் மற்றும் அலுவலர்கள் ஏற்றனர்.
மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு
தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண் டார். தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, பிரை யன்ட் நகர், மேட்டுப்பட்டி, லூர்தம்மாள்புரம், கலைஞர்நகர், செல்வநாயகபுரம், குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், பால்பாண்டி நகர், கட்டபொம்மன் நகர், போல் டன்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகரில் அதிகளவு மழை பெய்துள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி யுள்ளது. இதனை அகற்ற போர்க் கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ள தால் உடனடியாக மழைநீர் அகற்றப்படுகிறது.
பொய்கை அணை நீர்மட்டம் முதல்முறையாக 40.90 அடியை எட்டியது
தூத்துக்குடியில் மழைநீர் சூழ்ந்த பகுதிகளில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண் டார். தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் கனமழையால் மழைநீர் தேங்கி பாதிக்கப்பட்ட ஸ்டேட் பாங்க் காலனி, பிரை யன்ட் நகர், மேட்டுப்பட்டி, லூர்தம்மாள்புரம், கலைஞர்நகர், செல்வநாயகபுரம், குறிஞ்சி நகர், தனசேகரன் நகர், பால்பாண்டி நகர், கட்டபொம்மன் நகர், போல் டன்புரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அமைச்சர் கீதா ஜீவன் நேரில் சென்று பார்வை யிட்டு ஆய்வு செய்தார். அதைத்தொடர்ந்து அவர் பொதுமக்களிடம் கூறியதாவது: தூத்துக்குடி மாநகரில் அதிகளவு மழை பெய்துள்ளதால் பல இடங்களில் மழைநீர் தேங்கி யுள்ளது. இதனை அகற்ற போர்க் கால நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் மின் மோட்டார்கள் வைக்கப்பட்டுள்ள தால் உடனடியாக மழைநீர் அகற்றப்படுகிறது
OCT 31-NOV 06 Page 13
குமரி மாவட்டத்தில் மழை நீடிப்பு
குமரி மாவட்டத்தில் வெள்ளியன்று (அக்.29) விடிய, விடிய பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சனியன்று சற்று குறைந்திருந்த மழை ஞாயி றன்று பிற்பகல் கொட்டித்தீர்த் தது. தென்மேற்கு வங்க கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதியில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமி ழகத்தின் பல்வேறு மாவட்டங்க ளில் கனமழை பெய்து வரு கிறது. குமரி மாவட்டத்தில் வெள்ளியன்று இரவு விடிய, விடிய கனமழை பெய்தது. இந் நிலையில் குமரி மாவட்டத் திற்கு வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்தி ருந்தது. சனியன்று நாகர்கோ வில் மற்றும் சுற்றுவட்டார பகுதி களில் சாரல் மழையாக பெய் தது. ஞாயிறன்று காலை 8 மணி வரையில் அதிகபட்சமாக கொட்டாரத்தில் 25.40 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் மித மான மழை பெய்தது.
அணைகளின் நீர்மட்டம்
ஞாயிறன்று காலை 8 மணி வரை சிற்றார் (1) 16.04 அடி, சிற்றார் (2) 16.14, பேச்சிப் பாறை 43.56, பெருஞ்சாணி 72.87, பொய்கை 40.90, மாம் பழத்துறையாறு 49.54, முக் கடல் அணை 25 அடி, பேச்சிப் பாறை அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 1558 கன அடியாக உள்ளது. நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1635 கன அடி, பெருஞ்சாணிக்கு நீர் வரத்து 1231 கன அடி, வெளியேற்றம் 800 கனஅடி சிற்றார் (1) நீர் வரத்து 485 வெளியேற்றம் 536 கன அடியாக உள்ளது. திற்பரப்பு அருவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அரு விப்பகுதி முற்றிலும் மூழ்கிய நிலையில் காணப்பட்டது.
OCT 31-NOV 06 Page 14
100 நாள் வேலைக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கப்படும்
மாகத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் நிதிப்பற்றாக்குறை காரணமாக முட ங்கும் அபாயத்தில் இருந்தது. இது குறித்து தீக்கதிர் (அக்.31) ஞாயிறன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் இந்தத் திட்டத் திற்கு போதுமான நிதி ஒதுக்கப்படும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டத்தை (MGNREGA) முறையாகச் செயல்படுத்து வதற்கான நிதியை தொடர்ந்து வழங்க ஒன்றிய அரசு உறுதியளித்துள்ளது. இது தொடர்பாக மோடி தலைமை யிலான அரசு கூறியிருப்பதாவது:- நடப்பு நிதியாண்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.63,793 கோடிக்கு மேல் வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நிதி ஒதுக்கீடு 18 சத வீதத்துக்கும் கூடுதலாக அதி கரித்துள்ளது நடப்பு நிதியாண்டில், 6 கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் 100 நாள் வேலையைப் பெற்றுள்ளன.
அனைத்துப் பணியிடங்களிலும் விசாகா கமிட்டி அமைத்திடுக!
கொரோனா வைரசை எதிர்த்துப் போரிடுவதற்காக இந்த உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய 16-வது ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் நடைபெற்றது. ஜி-20 நாடுகள் பட்டியலில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் இந்தியா சார்பில். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? கல்வி உதவித்தொகை தேர்வு தமிழில் வேண்டும்
ஒன்றிய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் (தனிப் பொறுப்பு) கிஷோர் வைக்யானிக் புரோட்சகான் யோஜனா பற்றி (KVPY) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் 25/8/2021 அன்று எழுதியிருந்த கடிதத்திற்கு 12/10/2021 அன்று பதில் தந்துள்ளார். கிஷோர் வைக்யானிக் புரோட்ச கான் யோஜனா (முஏஞலு) என்கிற திட்டத்தின் அடிப்படையில் அறிவியல் முனைப்புள்ள மாணவர்களுக்கு உதவித் தொகை (ரூ.80 ஆயி ரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 12 ஆயி ரம்) வழங்குவதற்கான ஆன் லைன் திறனறித் தேர்வு இரண்டு மொழி களில் வினாத் தாள் கொண்டதாக மட்டுமே இருக்கும் என்கிற பார பட்சம் அகற்றப்பட்டு மாநில மொழி களிலும் தேர்வை நடத்துங்கள் என்று கேட்டிருந்தேன்.
உள்நாட்டிலே தயாரித்த அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றி
விமானத்தில் இருந்து தொலை தூரத்தில் உள்ள தரை இலக்கை தாக்கும் அதிநவீன வெடிகுண்டு பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது. வானில் இருந்து தரை இலக்குகளை தாக்கவல்ல வெடிகுண்டுகளை ஹைதரா பாத்தில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (டிஆர்டிஓ) வின் இமாரத் ஆராய்ச்சி மையம் அண்மை யில் உருவாக்கியது. இந்த வெடிகுண்டு முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. வான் பரப்பில் இருந்து தரையில் 50 முதல் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் வகையில் இந்த வெடி குண்டுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த வெடிகுண்டு பரிசோதனை ஒடிசா மாநிலம் பாலாசோரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று நடைபெற்றது. அப்போது, விமானப் படைக்கு சொந்த மான போர் விமானத்தில் இருந்து இந்த வெடிகுண்டு ஏவப்பட்டது.
OCT 31-NOV 06 Page 15
அறிவியல் முனைப்புக்கும் ஹிந்திக்கும் என்ன தொடர்பு? கல்வி உதவித்தொகை தேர்வு தமிழில் வேண்டும்
கொரோனா வைரசை எதிர்த்துப் போரிடுவதற்காக இந்த உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய 16-வது ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் நடைபெற்றது. ஜி-20 நாடுகள் பட்டியலில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் இந்தியா சார்பில். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
மாநாட்டில் பேசிய மோடி, உலகெங்கிலும், குறிப்பாக வளரும் நாடுகளில் தடுப்பூசி ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டியதோடு அடுத்த ஆண்டு இறுதிக்குள் 500 கோடிக்கும அதிகமான தடுப்பூசிகளைத் தயாரிக்க இந்தியா தயாராக இருப்பதாகக் கூறினார்.
வாகனம் கவிழ்ந்து 13 பேர் பலி
உத்தரகண்ட் மாநிலத் தலைநகரான டேராடூனி லிருந்து 170 கிமீ தொலைவில் உள்ள சக்ரதா தெஹ்சில் தெஹ்சில் பகுதியில் 300 அடி பள்ளத்தில் வாகனம் ஒன்று ஞாயிற்றுக்கிழமை கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக்குழுவினர் மீட்பு நட வடிக்கையில் ஈடுபட்டனர். இதுவரை 13 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள தாக அதிகாரிகள் தெரி வித்துள்ளனர். காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து காவல்துறையினர் விசார ணை நடத்தி வருகின்றனர்.
OCT 31-NOV 06 Page 16
அடுத்த ஆண்டுக்குள் 500 கோடி தடுப்பூசிகளை இந்தியா தயாரிக்கும்
கொரோனா வைரசை எதிர்த்துப் போரிடுவதற்காக இந்த உலகிற்கு உதவ அடுத்த ஆண்டு 500 கோடி தடுப்பூசிகளை தயாரித்து வழங்க இந்தியா தயாராக இருக்கிறது என்று ஜி-20 நாடுகள் மாநாட்டில் பிரதமர் மோடி தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட 20 வளரும் நாடுகள் அடங்கிய 16-வது ஜி-20 அமைப்பின் மாநாடு இத்தாலி நாட்டில் ரோம் நகரில் சனி, ஞாயிறு இரண்டு தினங்கள் நடைபெற்றது. ஜி-20 நாடுகள் பட்டியலில், அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியா குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை இடம் பெற்றுள்ளன. மாநாட்டில் இந்தியா சார்பில். பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பிடன், பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ஐ.நா. சபை, உலக சுகாதார அமைப்பின் தலைவர்கள், பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு முகவரிக்கும் மின்னணு முகவரி குறியீடு
ஆதார் எண் போல ஒவ்வொரு முகவரிக்கும் தனித்தனியாக மின் னணு முகவரி குறியீடு (டிஏசி) வழங்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. இப்போது முகவரிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை பயன்படுத்துகிறோம். ஆனால் அதில் இடம்பெற்றுள்ள முகவரியை மின்னணு முறையில் உறுதிப்படுத்த முடியாது. இதனால் நாட்டில் உள்ள அனைத்து முகவரியையும் புவியியல் ரீதியாக மின்னணு முகவரி குறியீடாக உரு வாக்க ஒன்றிய அரசு திட்ட மிட்டுள்ளது. இதன்மூலம் எந்தவொரு முகவரியையும் இணையதளம் மூலம் உறுதிப்படுத்த முடியும். இந்தக் குறியீடை உருவாக்கும் பணியில் அஞ்சல் துறை ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான வரைவு அறிக்கையை இணைய தளத்தில் வெளியிட்டுள்ள அஞ்சல் துறை, பொதுமக்களின் கருத்தை கோரியுள்ளது.
மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கே பெட்ரோல் விலை உயர்வால் லாபம்
பெட்ரோல்,டீசல் விலை உயர்வால் பிரதமர் மோடிக்கு நெருக்கமான தொழிலதிபர்களே லாபம் அடைகின்றனர் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., குற்றம்சாட்டியுள்ளார். அடுத்த ஆண்டு கோவா சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் ராகுல் காந்தி தேர்தல் சுற்றுப்பய ணம் மேற்கொண்டார். இதில் வெல்சோ கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி பேசுகையில், பிரதமர் மோடி ஆட்சியில் உணவுப் பொருட்கள், பெட்ரோலியப் பொருட்கள், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சர்வதேசச் சந்தை யில் கச்சா எண்ணெய்யின் விலை வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது.