மனிதனுக்கு பொருத்திய பன்றியின் சிறுநீரகம் – மருத்துவ சாதனை
முதன்முறையாக மனிதனுக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி மருத்துவ வரலாற்றில் சாதனை படைத்துள்ளனர்.
இருதயம், கல்லீரல், நுரையீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிவரும் நிலையில் பல ஆண்டுகளாகவே விலங்குகளின் உறுப்புகளை மனிதர்களுக்கு பொருத்தும் சோதனை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள என்.ஒய்.யு லங்ஓன் உறுப்பு மாற்று சிகிச்சை மையத்தில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பன்றியிடமிருந்து எடுக்கப்பட்ட சிறுநீரகத்தை மூளைச்சாவடைந்த ஒருவருக்கு பொருத்தியதில் அந்த சிறுநீரகம் நன்றாக இயங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மனிதருக்கு பெருத்தப்படும் சிறுநீரகத்தில் எதிர்பார்க்கப்படும் சிறுநீர் அளவு, பன்றியின் சிறுநீரகத்திலும் காண முடிந்ததாக தெரிவித்தனர்.
மேலும் அந்த நபருக்கிருந்த மோசமான சிறுநீரக செயல்பாட்டைவிட, புதிதாக பொருத்தப்பட்ட பன்றி சிறுநீரகத்தின் செயல்பாட்டின் முன்னேற்றம் இருந்ததாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.