700 காளைகள், 300 வீரர்கள் பாலமேடு ஜல்லிகட்டில் பங்கேற்பு
பாலமேடு, ஜன.15- மதுரை மாவட்டம் பாலமேட்டில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு சனிக்கிழமை நடைபெற் றது. ஜல்லிக்கட்டில் 700 காளைகள், 300 மாடுபிடிவீரர்கள் கலந்து கொண்ட னர். ஜல்லிக்கட்டு காலை 7.50 மணிக்குத் தொடங்கியது. போட்டியை அமைச்சர் கள் பழனிவேல் தியாகராஜன், மூர்த்தி ஆகியோர் இணைந்து கொடியசைத்து துவக்கி வைத்தனர். மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் சட்டமன்ற உறுப்பினர் கள் மு.பூமிநாதன், வெங்கடேஷ், மதுரை ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாவட்ட வருவாய் அலுவலர் செந்தில் குமாரி, மாநகராட்சி ஆணையர் கா. ப. கார்த்திகேயன், காவல்துறை கண்கா ணிப்பாளர் அன்பு மற்றும் பலர் பங் கேற்றனர்.
காவல்துறை ஐ.ஜி.டி.எஸ்.அன்பு, டிஜஜி பொன்னி தலைமையில் 1,825 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடு பட்டனர். மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை (உசிலம்பட்டி) மருத்து வர் தலைமையில் 10-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், செவிலியர்கள் முதலு தவி காயம்பட்டவர்களுக்கு சிகிச்சை யளித்தனர். மூன்று 108 இருசக்கர வாக னங்கள், பத்து 108 ஆம்புலன்ஸ்கள் மருத்துவம் மற்றும் சுகாதாரப் பணி களில் ஈடுபட்டன. போட்டி தொடங்கும் முன்பாக ஜல்லிக்கட்டு உறுதிமொழி எடுக்கப் பட்டது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய காளையர்களுக்கும், காளை யர்களுக்கு போக்குக் காட்டிய காளை களுக்கும் கட்டில், பீரோ, தங்கக் காசு உள்ளிட்ட பலவகையான பொருட்கள் வழங்கப்பட்டன. கொரோனா கட்டுப்பாட்டால் வாடி வாசல் அருகே நடைபெற்ற ஜல்லிக் கட்டை விட ஆயிரக்கணக்கானோர் பால மேடு அரசு மருத்துவமனை அருகே அவிழ்த்துவிடப்பட்ட காளைகளை உரிமையாளர்கள் பிடிக்கும் இடத்தில் மற்றொரு ஜல்லிக்கட்டு போல் நடை பெற்றது.
மந்தையம்மன் ஆற்றின் இரண்டு கரைகளிலும் ஆயிரக்கணக்கான இளை ஞர்கள் நின்று கொண்டு பிடிபடாமல் வந்த காளைகளை விரட்டிச் சென்றனர். மாட்டின் உரிமையாளர்களும் காளைகளை விரட்டிச் சென்றனர். இது ஒரு மினி ஜல்லிக்கட்டு போலேவே காட்சியளித்தது. ஜல்லிக்கட்டுப் போட்டியை பீட்டா அமைப்பின் தலைவர் எம்.கே.மிட்டல் உள்ளிட்டவர்கள் கண்காணித்தனர். அலங்காநல்லூர் அரசு மருத்துவ மனைக்கு வந்த அவர், காயமடைந்த வர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சை கள் குறித்து கேட்டறிந்தார். எத்தனை மருத்துவர்கள் பணியில் உள்ளனர். யார் பொறுப்பு மருத்துவர் என்பதை யும் குறித்துக் கொண்ட அவர், சிகிச்சை பெறவருபவர்களில் மது அருந்தி விட்டு வருகிறார்களா என்பதைக் கவனிக்க வேண்டும். மருத்துவப் பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என உசிலம்பட்டி தலைமை மருத்துவரைக் கேட்டுக் கொண்டார்.
ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் குறித்து நமது செய்தியாளரிடம் பேசிய எம்.கே.மிட்டல், “ ஏற்பாடுகளில் முழு திருப்தியடைவதாகக் குறிப்பிட்டார். மாடுகள் பிடிக்கும் இடத்தில் ஆயி ரக்கணக்கான இளைஞர்கள் முகக்கவ சம் அணியாமல் உள்ளனர். இது குறித்து காவல்துறையிடம் வலியுறுத்தி யுள்ளேன். இது அரசின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்படும். ஜல்லிக்கட் டில் உயிர்ப்பலியைத் தடுக்க மார்புப் பகுதி பாதிக்காமல் இருக்க மாடுபிடி வீரர்கள் கவச உடை அணியவேண்டும். இதுவும் அரசிடம் வலியுறுத்தப்படும் என்றார்.
முகக்கவசம் அணியாதது குறித்து அதிருப்தி தெரிவித்த மிட்டலின் கருத்து குறித்து டிஜஜி பொன்னியிடம் கேட்ட தற்கு, நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகளை அறிவுறுத்தியிருப்ப தாகக் கூறினார். ஜல்லிக்கட்டில் மாடுபிடிவீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வை யாளர்கள், காவல்துறை தடியடியில் காயமடைந்தவர்கள் மற்றும் மதுரை உசிலம்பட்டி உட்கோட்டத்தில் பணி யாற்றும் கருமாத்தூரை அடுத்துள்ள நத்தபட்டியைச் சேர்ந்த காவலர் கோபி நாத் (33) உட்பட 16 பேர் காயமடைந்த னர். மதுரை மாவட்டம் சக்குடி திரு மணப்பதியைச் சேர்ந்த மணிகண்டன் (16), மதுரை மேலமடையைச் சேர்ந்த கோபிநாத் (36) ஆகியோர் மேல்சிகிச் சைக்காக மதுரை அரசு இராஜாஜி மருத் துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட னர்.