‘வாய்தா’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு விழா!
தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை இன்று (நாள்: 15/06/2022) வெளியிட்டுள்ள ஊடகங்களுக்கான செய்திக்குறிப்பில் கூறியிருப்பது பின்வருமாறு:
‘வாய்தா’ திரைப்படக் குழுவினருக்கு பாராட்டு விழா மற்றும் கவிதை நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியை தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய முற்போக்குப் பேரவை இணைந்து சென்னையில் நாளை (16/06/2022 வியாழன்) மாலை 5 மணி அளவில் நடத்துகின்றன.
இயக்குநர் மகிவர்மன் இயக்கிய , புதுமுக கதாநாயகர் புகழ் மகேந்திரன் நடித்த திரைப்படம் ‘வாய்தா’ நீதித்துறையில் நிலவும் அவலங்களையும், நீதியைப் பெறுவதற்கு சாமானிய மக்கள் படும், துன்ப துயரங்களையும் இப்படம், படம் பிடித்துக் காட்டியுள்ளது. கிராமப்புறங்களில் நிலவும் சாதீய பாகுபாடுகளையும், தீண்டாமையையும் மனக்கண் முன் கொண்டுவருகிறது.
வணிக ரீதியாக ,லாப நோக்கோடு பல ஃபார்முலாக்களை உள்ளடக்கி திரைப்படங்கள் வெளிவரும் காலக்கட்டத்தில், ‘வாய்தா’ என்ற திரைப்படம் , சமூக அக்கறை மற்றும் பொறுப்புணர்வோடு எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதில் நடித்துள்ள கலைஞர்கள் தங்களின் திறமையை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளனர். எனவே, அவர்களைக் கொண்டாடும் வகையில், ‘வாய்தா’ திரைப்படக் குழுவிற்கு பாராட்டு விழாவை, தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றமும், அனைத்திந்திய முற்போக்கு பேரவையும் இணைந்து நடத்துகின்றன.
அதே போல், அந்நிகழ்வின் பொழுது கவிதை நூல்களும் வெளியிடப்பட உள்ளன. நாளை ,16-06-2022, வியாழக்கிழமை, மாலை 5.00 மணி அளவில், சென்னை எழும்பூர், 107, பாந்தியன் சாலையில் , மியூசியம் எதிரே உள்ள , ICSA மையத்தின் ,JJ அரங்கத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் வழிகாட்டுக் குழு உறுப்பினர் ஜீவா மணி குமார் இவ்விழாவிற்கு தலைமை தாங்குகிறார். எழுத்தாளர் இளசை எஸ்.எஸ்.கணேசன் (மாநில செயலாளர் – AIPF) மற்றும் பேராசிரியர் கணபதி இளங்கோ சென்னை மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்) முன்னிலை வகிக்கின்றனர். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் சி.இராமலிங்கம் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் த. அறம் துவக்கவுரையாற்றுகிறார். புதுமுக கதாநாயகர் புகழ் மகேந்திரன் மற்றும் இயக்குனர் சி.எஸ்.மகிவர்மன் உள்ளிட்ட வாய்தா திரைப்படக் குழுவினரைப் பாராட்டி, தமிழ்நாடு AITUC பொதுச் செயலாளர் T. M. மூர்த்தி சிறப்புரையாற்றுகிறார்.
கவிஞர். ராஜபாரதி எழுதிய ‘ஆழ்முகி’ கவிதை நூலை Dr. A. R. சாந்தி (தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், அனைத்திந்திய முற்போக்குப் பேரவை – AIPF) வெளியிடுகிறார். ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கத்தின் மாநிலச் செயலாளர் K. S. குமார் முதல் பிரதியைப் பெறுகிறார்.
கவிஞர்.யாழினி முனுசாமி எழுதிய ‘காற்றில் அலையும் சொற்கள்’ கவிதை நூலை தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் மாநில செயற்குழு உறுப்பினர் T. S. நடராஜன் வெளியிடுகிறார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் காஞ்சிபுரம் மாவட்டப் பொருளாளர், எஸ். சங்கர நாராயணன் முதல் பிரதியைப் பெறுகிறார்.
அனைத்தித்திய முற்போக்குப் பேரவையின் மாநில பொதுச் செயலாளர், டாக்டர் ஜி.ஆர். இரவீந்திரநாத் நிறைவுரையாற்றுகிறார்.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் சென்னை மாவட்ட துணைச் செயலாளர் செ.புஷ்பராஜ் நன்றியுரையாற்றுகிறார்.
இவண்,
டாக்டர் ஜி.ஆர்.
இரவீந்திரநாத் பொதுச் செயலாளர்,
(அனைத்திந்திய முற்போக்குப் பேரவை)
சி.இராமலிங்கம்
மாவட்டச் செயலாளர்
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் ,
காஞ்சிபுரம் மாவட்டம்.
கணபதி இளங்கோ,
சென்னை மாவட்டச் செயலாளர்,
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்.
தொடர்புக்கு :
94441 81955,
94452 83135,
93822 03123