தமிழகம்
தாழ்த்தப்பட்ட மக்கள் கோவிலுக்குள் செல்ல ஆதிக்க சாதியினர் தடை: இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்
தமிழ்நாட்டில் உள்ள திண்டுக்கல் மாவட்டம் சித்தரேவு கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்களை கோவிலுக்குள் செல்ல விடாமல் சமூக விரோத ஆதிக்க சாதியினர் தடுத்து வருகின்றனர்.
சமூக விரோத ஆதிக்க சாதியினரைக் கண்டித்தும், தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்த மக்கள் கோவிலுக்குள் செல்வதற்கான உரிமையைப் பெற்றுத் தரக்கோரியும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று (வண்டி வாய்க்கால் )பழனி அருகே மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் சந்தானம் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கைதாகினர்.
தமிழ்நாடு அரசு இந்தப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணுமா?