2023 ல் உலகப் பொருளாதாரம் மோசமடையும் – சர்வதேச நிதியம் தகவல்
கடந்த ஆண்டைக் காட்டிலும், 2023 -ல் உலகப் பொருளாதாரம் மேலும் மோசமடையும் என்று சர்வதேச நிதியம் கணித்துள்ளது. CBS News செய்தி நிறுவனத்திற்கு சர்வதேச நிதியத்தின் தலைவர் க்ரிஸ்டலீனா ஜார்ஜீவா அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
2023 ஆம் ஆண்டு சர்வதேச பொருளாதாரத்துக்கு சற்று கடினமான காலம் தான். அமெரிக்கா, சீனா, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பொருளாதார செயல்பாடுகள் ஒரே நேரத்தில் நலிவடைந்து வருவதே இதற்குக் காரணம் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருவதால் சீனப் பொருளாதார வளர்ச்சியில் எதிர்மறை தாக்கங்கள் ஏற்படலாம். அந்த எதிர்மறை விளைவுகள் சர்வதேச பொருளாதாரத்திலும் எதிரொலிக்கலாம் என்று அவர் எச்சரித்துள்ளார்.
முன்னதாக, கடந்த அக்டோபர் மாதத்தில் சர்வதேச நிதியம் 2023ல் உலகப் பொருளாதார வளர்ச்சி பற்றிய கணிப்பில் உக்ரைன் போர், உலகம் முழுவதும் நிலவும் பணவீக்க அழுத்தங்கள், அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதங்களை அதிகரிப்பதால் சர்வதேச அளவில் மந்தநிலை ஏற்படும் என்றே கூறியிருந்தது.
முதலாளித்துவ பொருளாதார அமைப்பு நெருக்கடியில் இருக்கிறது என்ற உண்மையை நடைமுறை அனுபவத்தில் உலக நாடுகளின் பொருளாதார நிலை அம்பலப்படுத்துகிறது. சோஷலிசமே மாற்று; பிரச்சனைகளுக்குத் தீர்வுகளைத் தரவல்லது.