2021 ஆம் ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர்: உள்துறை அமைச்சகம் தகவல்
ஜுலை 19 அன்று மக்களவையில் உள்துறை அமைச்சகம் (MHA) வழங்கிய தகவலின்படி, 2021 ஆம் ஆண்டில் 1.6 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் தங்கள் குடியுரிமையைத் துறந்துள்ளனர். இது கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு அதிகமாக உள்ளது. இந்தியக் குடியுரிமையை விட்டுக்கொடுத்து, இரட்டைக் குடியுரிமையை இந்தியா அனுமதிப்பதில்லை.
78,000 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றுள்ளனர். ஒப்பீட்டளவில், இது மற்ற அனைத்து நாடுகளையும் விட மிக அதிகம்.
சீனாவில் வசிக்கும் 362 இந்தியர்களும் சீனக் குடியுரிமை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், குடியுரிமையைத் துறந்து ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்களின் எண்ணிக்கை 23,533, கனடா- 21,597, இங்கிலாந்து-14,637, இத்தாலி-5,986, நெதர்லாந்து- 2187, நியூசிலாந்து- 2643, சிங்கப்பூர்- 2516, அமெரிக்கா – 78284, பாகிஸ்தான்- 41, நேபாள் – 10 என்று அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் ஃபஸ்லுர் ரஹ்மானின் கேள்விக்கு பதிலளித்த உள்துறை இணை அமைச்சர் நித்யானந்த் ராய், “தனிநபர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தியக் குடியுரிமையைத் துறந்தனர்” என்று எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளார்.