2 வாரத்திற்கு கவனமாக இருக்க வேண்டும்: சுகாதாரத்துறை எச்சரிக்கை
சென்னை, ஜன. 15- தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றும், அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஓமைக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,‘தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது என்று கூறிய அவர், தற்போது 1.91 லட்சம் படுக்கைகள் கையிருப்பு உள்ளது. கொரோனாவிற்கு மட்டும் 1.28 லட்சம் படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார். டெல்டா வகை தொற்று 10 முதல் 15 விழுக்காடு அளவில் பதிவாகி வருகிறது என்றும், தொற்று பாதிக்கப்பட்ட 7 விழுக்காட்டினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவர், 80 விழுக்காடு 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றார். மேலும் ஓமைக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று கவனக்குறைவாக மக்கள் இருக்க வேண்டாம் என்றும் அடுத்த இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதேபோல் காசிமேடு போன்ற பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அவர், தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பிட்ட நாளில் கட்டாயம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பது போன்று இல்லாமல் தங்கள் உடல் நலத்தில் அக்கறையோடு இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.சென்னை, ஜன. 15- தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றும், அவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்திக்கொள்ள முன்வர வேண்டும் எனவும் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். ஓமைக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள கட்டளை மையத்தை சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,‘தொடர்ந்து தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் சூழலில், மக்கள் ஒத்துழைப்பு மிகவும் தேவைப்படுகிறது என்று கூறிய அவர், தற்போது 1.91 லட்சம் படுக்கைகள் கையிருப்பு உள்ளது. கொரோனாவிற்கு மட்டும் 1.28 லட்சம் படுக்கைகள் உள்ளதாக தெரிவித்தார். டெல்டா வகை தொற்று 10 முதல் 15 விழுக்காடு அளவில் பதிவாகி வருகிறது என்றும், தொற்று பாதிக்கப்பட்ட 7 விழுக்காட்டினர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறிய அவர், 80 விழுக்காடு 15 முதல் 18 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும், 18 வயதுக்கு மேற்பட்டோர் 55 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளவில்லை என்றார். மேலும் ஓமைக்ரான் தொற்றால் பாதிப்பு இல்லை என்று கவனக்குறைவாக மக்கள் இருக்க வேண்டாம் என்றும் அடுத்த இரண்டு வாரங்கள் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதேபோல் காசிமேடு போன்ற பகுதிகளில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும் என்ற அவர், தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறிப்பிட்ட நாளில் கட்டாயம் இறைச்சி சாப்பிட வேண்டும் என்பது போன்று இல்லாமல் தங்கள் உடல் நலத்தில் அக்கறையோடு இருந்து தற்காத்துக் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.