விளையாட்டு

14 வயதில் தங்கப் பதக்கம்

ஸ்ரீராமுலு ‘‘சாதிப்பதற்கு வயது தடையே கிடையாது என்பதை 14 வயதில் ஒரு இளம் இந்திய வீராங்கனை நிரூபித்துக் கொண்டிருக்கிறார் துப்பாக்கி சூடுதல் வீராங்கனை நம்யா கபூர்’’. பெரு நாட்டின் தலைநகர் லிமாவில் நடைபெற்ற ஜூனி யர் உலகக் சாம்பியன்ஷிப் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியா 39 தங்கப் பதக்கத்தில் 17 தங்கப் பதக்கங்களை அள்ளியது. இதில், பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் நம்யா கபூர் தங்கப் பதக்கத்தை தட்டி வந்தார். அப்போது இவருக்கு வயது 14. இவர் சர்வதேச அளவில் கலந்து கொண்ட முதல் போட்டியும் அதுவே. மிக இளம் வயதில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை என்ற பெருமை யை பெற்றுள்ளார் நம்யா.

யார் இவர்?

ஒன்பதாம் வகுப்பு படித்து வரும் நம்யா கபூர், மூன்று முறை ஒலிம்பியனான சஞ்சீவ் ராஜ்புத்தின் விளையாட்டு வாரிசு. தில்லியின் தொழிலதிபர் பிரவீன்-குஞ்சன் கபூரின் இளைய மகள்.

ஆரம்ப காலம்…

தில்லியின் பஞ்சாப்-பாகிஸ்தான் எல்லையோரம் உள்ள குரு ஹர்கிரிஷன் பப்ளிக் பள்ளியில் மூத்த சகோதரி குஷி துப்பாக்கி சுடுதல் பயிற்சி பெற்று வந்தார். அவரை தினமும் தாயார் அழைத்துச் செல்வது வழக்கம். கூடவே, இளைய மகள் நம்யா கபூர் சென்று வந்திருக்கிறார். மற்றவர்கள் பயிற்சி மேற்கொள்வதை உன்னிப்பாக கவனித்து வந்துள்ளார். இது, பயிற்சியாளர் சபீர் கண்களில் பட்டதும், அவருக்கும் பயிற்சி கொடுக்க பெற்றோ ரிடம் கூறியிருக்கிறார். பெற்றோரும் நம்யா கபூரின் ஆர்வத்திற்கு பச்சைக்கொடி காட்டி விட்டனர். தொழிலதிபர் என்பதால் தந்தை பிரவீன் மகள்க ளுக்கு நேரத்தை ஒதுக்க முடியாமல் அனைத்து பொறுப்பு களையும் தாயார் குஞ்சனிடம் ஒப்படைத்துள்ளார். ஆரம்பத் தில் இரு மகள்களையும் பயிற்சிக்காக பல கிலோமீட்டர் அழைத்துச் சென்று வந்துள்ளார். கர்னி சிங் மலைத் தொடருக்கும் சென்றிருக்கிறார்கள்.

விளையும் பயிர்…

ஆறாம் வகுப்பு படிக்கும் பொழுது மாநில அளவிலான சாம்பியன் போட்டியில் பங்கேற்க அழைப்பு வந்துள்ளது. ஆனாலும் பெற்றோர் ஆரம்பத்தில் சிறிது தயக்கம் காட்டி இருக்கிறார்கள். மகள் பெற்றோருக்கு கொடுத்த தைரியம் போட்டிக்கு வழி அனுப்பிவைத்து. உள்ளூராக இருந்தாலும் முதன்முதலாக போட்டியில் களம் இறங்கிய போது சற்று பயம் இருந்தாலும் நம்பிக்கை யுடன் பங்கேற்ற அந்தப் போட்டி 10 மீட்டர் ஏர் பிஸ்டல் ஆகும். 400 புள்ளிகளுக்கு 373 புள்ளிகள் குவித்து டாக்டர் கர்னி சிங் பதக்கத்தை வென்றது பெற்றோருக்கு உற்சா கத்தை கொடுத்தது. அதே உற்சாகத்தோடு, 2019 ஆம் ஆண்டில் வடக்கு மண்டல சாம்பியன்ஷிப் மற்றும் தேசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொண்டு பதக்கங்களை அள்ளி வந்தார் நம்யா. தொடர் வெற்றிகளால் வெகு விரைவில் அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பி தேசிய ஜூனியர் போட்டிக்கும் தேர்வாகினர். பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி மட்டுமல்லாமல் ஜூனியர் போட்டி களிலும் பங்கேற்பதற்காக அக்காவும் தங்கையும் இணைந்து சென்று பரிசுகளை குவித்து வந்திருக்கிறார்கள். இது கபூர் குடும்பத்திற்கு அளவில்லா மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

பேர் சொல்லும் பிள்ளை…

மூத்த மகள் குஷியை காட்டிலும் இளைய மகள் தனது அற்புதமான சாதனையால் அவர் பங்கேற்ற முதல் போட்டியிலேயே சர்வதேச அளவில் தங்கப் பதக்கம் வென்றது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. இந்த வெற்றிக்காக ஒவ்வொருநாளும் அவள் மேற்கொண்ட பயிற்சி கைவிட வில்லை. இளைய மகளின் கடின உழைப்புக்கும், திற மைக்கும், விளையாட்டின் மீது கொண்ட அதிக நம்பிக்கைக்கும் கிடைத்த வெற்றி என்று நம்யாவின் தாய் குஞ்சன் புகழ்ந்திருக்கிறார். மகளின் விளையாட்டு பங்களிப்புகளில் தன்னால் போதிய கவனம் செலுத்த முடியவில்லை என்றாலும், கேட்ட உதவிகள் அனைத்தையும் செய்து கொடுத்து வருகிறேன். அந்த அடிப்படையில் உலக அளவில் தங்கப் பதக்கம் வென்ற தும் ஒரு ஐபோன் வாங்கி வருவீர்களா? என்று கேட்டால் அதையும் வாங்கி கொடுத்துவிட்டேன் என்று பெருமிதம் கொள்கிறார் நம்யாவின் தந்தை பிரவீன்.

நம்பிக்கைச் சுடர்…

பரிதாபாத் அங்கித் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று வந்த நம்யா கபூர், கடின உழைப்பு ,முயற்சியால் இலக்கை நோக்கி துல்லியமாக சுடுவதில் வல்லமை படைத்தார். நம்யா கபூரின் அசாத்திய திறமையை பார்த்து வியந்த அவரது தாய்வழி உறவான மாமா சஞ்சீவ் ராஜ்புத், பயிற்சி யாளர் அங்கித் சர்மா இருவரும் இணைந்து பல்வேறு தொழில்நுட்ப நுணுக்கங்களையும் கற்றுக் கொடுத்தனர். மற்றவரைக் காட்டிலும் வித்தியாசமாகவும் காணப் பட்டார். தீப்பந்தமாக எளிதில் புரிந்து கொண்டார். இத னால், நிச்சயம் மிகப்பெரிய வீராங்கனையாக உரு வெடுப்பார் என்று இருவரும் பல சந்தர்ப்பங்களில் தெரி வித்ததை சாதித்தும் காட்டிவிட்டார். மிகவும் இளைய வயதில் இந்தியாவுக்கு தங்கப்பதக் கம் பெற்றுக்கொடுத்த நம்யா கபூருக்கு, பல தரப்பிலி ருந்தும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. புதுதில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஒன்றிய அரசின் விளை யாட்டு அமைச்சகம் முன்னாள், இந்நாள் வீரர்கள், பயிற்சி யாளர்கள் பலரும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வரு கின்றனர்.

இளைஞர்களுக்கு உத்வேகம்…

நம்யா கபூரின் இந்த எழுச்சி துப்பாக்கி சுடும் போட்டி யில் தேசிய அணிக்குள் மேலும் வலு சேர்த்துள்ளது. இது இளைஞர்களுக்கு புதிய உற்சாகத்தையும் கொடுத்தி ருக்கிறது என்றால் சந்தேகமே இல்லை. இந்திய ஜூனியர் அணி பிஸ்டல் பிரிவு பயிற்சியா ளர் ஜஸ்பால் ராணாவின் திறமையான வழிகாட்டுதல் உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் அதிக அளவில் தங்கப் பதக்கங்களை குவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. எதிர்காலத்தில் மிகச்சிறந்த துப்பாக்கி சுடும் வீராங்க னையாக மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் நம்யா கபூருக்கு உள்ளது. 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக்கில் நம்யா கபூர் பங்கேற்று, பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்க்க அனைவரும் வாழ்த்துவோம்.

ஸ்ரீராமுலு

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button