100 மையங்களில் ஏஐடியுசி மறியல்: 30,000 பேர் பங்கேற்பு, 15,000 பேர் கைது!
இன்று (2023 ஜனவரி 24-ஆம் தேதி) தமிழ்நாடு முழுவதும் 100 மையங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் 30,000 தொழிலாளர்கள் பங்கேற்றனர்; 15,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
பங்கேற்ற தோழர்கள், போராட்டத்தின் வெற்றிக்கு உழைத்த, மாநில, மாவட்ட, சங்க, கிளை நிர்வாகிகள், முன்னணி தோழர்கள், உறுப்பினர்கள், ஆதரவளித்த அனைத்து பொதுமக்கள், தோழர்கள், தொழிலாளர்கள், அனைவருக்கும் தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.
கோரிக்கைகள் மீது அரசு செவிகொடுக்கும் என்று நம்புகிறோம் என்று ஏஐடியுசி தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் ம. இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள சமூக ஊடக செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
மாநிலம் தழுவிய இந்த மறியல் போராட்டத்தில் ஏஐடியுசி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், முன்னணி நிர்வாகிகள் தலைமையேற்று, கைதாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தாராபுரத்தில் தோழர் கே சுப்பராயன் M.P, சென்னையில் தோழர் டி எம் மூர்த்தி, சேலத்தில் தோழர் நா.பெரியசாமி Ex-MLA, கோவையில் தோழர் எம். ஆறுமுகம், திருச்சியில் தோழர் வகித்த நிஜாம், மதுரையில் தோழர் காசி விஸ்வநாதன், செங்கல்பட்டில் தோழர் ம. இராதாகிருஷ்ணன், நாகப்பட்டினத்தில் தோழர் எம். செல்வராசு M.P, கிருஷ்ணகிரியில் தோழர் தளி ராமச்சந்திரன் MLA, திருவாரூரில் கே மாரிமுத்து MLA ஆகியோர் மறியல் போராட்டத்திற்கு தலைமையேற்றனர். புகைப்படங்கள் கீழே: