ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் முதன்மை தளபதி விபின் ராவத் உள்ளிட்டோர் மறைவு
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இரங்கல்
நாட்டின் பாதுகாப்புத் துறையின் முப்படைகளின் முதன்மை தளபதி திரு.விபின் ராவத் அவரது மனைவி மற்றும் உறவினர்கள் உட்பட 14 பேர் குன்னூர் வந்த ஹெலிகாப்டர் விபத்துக்கு ஆளான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இதில் திரு.விபின் ராவத் உட்பட 11 பேர் உயிரிழந்த துயரச் செய்தி உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் மூவர் உயிராபத்தான நிலையில் வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹெலிகாப்டர் விபத்துக்கு என்ன காரணம் என்று விசாரிக்க இந்திய விமானப்படை உயர் அமைப்பு உத்திரவிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் முப்படைகளின் முதன்மை தளபதியும், அவரது குடும்பமும், உயர் அதிகாரிகளும் உயிரிழந்த செய்தி நெஞ்சை பிசையும் வேதனையளிக்கிறது.
முப்படைகளின் தலைமை அதிகாரியின் பயணத் திட்டத்தில் ஏற்பட்ட ஹெலிகாப்டர் விபத்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. இதற்கு பொறுப்புணர்வோடும். நம்பிக்கையளிக்கும் வகையிலும் ஒன்றிய அரசு நாட்டு மக்களுக்கு பதிலளிப்பது அவசியமாகும்.
விபத்தில் உயிரிழந்த திரு.விபின் ராவத் உட்பட அனைவரின் மறைவுக்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக் குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
இவ்வாறு மாநிலக்குழு சார்பில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.