தமிழகம்
“வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காதது ஏன்?”- தேமுதிக கேள்வி
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்காததை கண்டித்து தேமுதிக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், “தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும், பிப்ரவரி 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இடையில் ஒருநாள் மட்டுமே கால அவகாசம் வழங்கி, ஜனவரி 28-ம் தேதி முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என அறிவித்திருப்பது எந்த விதத்தில் நியாயம்?” என்று தேமுதிக கேள்வி எழுப்பியுள்ளது.