வெறும் 1 சதவிகிதம் பேரிடம் நாட்டின் 22% வருமானம்
வெறும் 10 பணக்காரர்களிடம் உலகின் 52% வருமானம்
உலகின் மக்கள் தொகையில் வெறும் பத்தே நபர்கள் உலகின் மொத்த வரு மானத்தில் 52 சதவிகிதத்தை கையில் வைத்துள்ளனர். அதேநேரம் உலகின் மக்கள் தொகையில் 50 சதவிகிதத்திற்கும் அதிகமான மக்கள், உலக வருமானத்தில் 8.5 சதவிகிதத்தை மட்டுமே பகிர்ந்து கொள்கின்றனர். மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்கா (MENA) ஆகியவை உலகில் மிக அதிகமான சமத்துவ மின்மை நிலவும் பகுதிகளாக உள்ளன. ஐரோப்பாவில் இது சற்று குறைவாக உள்ளது. ஐரோப்பாவில் முதல் 10 சதவிகித வருமானத்தை 36 சதவிகிதம் பேர் பகிர்ந்து கொள்ளும் நிலையில், மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்காவில் இது 58 சதவிகிதமாக உள்ளது.
புதுதில்லி, டிச. 10 – இந்தியாவில் ஏழைகள் எண்ணிக்கையும், மக்களிடையே சமத்துவமின்மையும் அதிகரித்து வருவதை ‘உலக சமத்துவமின்மை அறிக்கை – 2022’ உறுதிப்படுத்தியுள்ளது. பிரான்ஸ் பொருளாதார நிபுணர் தாமஸ் பிக்கெட்டி உட்பட உலகின் பல்வேறு பொரு ளாதார வல்லுநர்கள் இணைந்து தயாரித்துள்ள உலக சமத்துவமின்மை அறிக்கையை (World Inequality Report 2022), அந்த அமைப்பின் இணை இயக்குநர் லூக்காஸ் சான்செல் வெளியிட்டுள்ளார். இதில்தான், சமத்துவமின்மை நிலவும் நாடுகள் உலகில் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக சமத்துவமின்மை மோசமாக நிலவும் நாடுகளில் ஒன்றாக இந்தியா இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டில் நாட்டின் ஒட்டுமொத்த வருமானத்தில் 22 சதவிகிதத்தை வெறும் ஒரு சதவிகித மக்கள் பகிர்ந்து கொள்ள, 10 சதவிகித மக்கள் 57 சதவிகித வருமானத்தையும், 50 சத விகிதமான மக்கள் வெறும் 13 சதவிகித வரு மானத்தையும் மட்டுமே பகிர்ந்துகொள்கின்ற னர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
“கடந்த 1980-களின் நடுப்பகுதியில் கொண்டு வரப்பட்ட பொருளாதாரக் கட்டுப்பாடு நீக்கம், தாராளமயமாக்கள் கொள்கைகள் நடை முறைப்படுத்தப்பட்டபின், உலகளவில் மக்களி டையே வருமானத்திலும், சொத்துக்கள் சேர்ப்பதிலும் பெரும் சமத்துவமின்மை காணப்படுகிறது. இந்திய மக்கள் தொகையில் 50 சதவிகித மக்களின் ஆண்டு வருமானம் சராசரியாக ரூ. 53 ஆயிரத்து 610 ஆக இருக்கிறது. ஆனால், இதை விட 20 மடங்கு அதிகமான வருமானத்தை வெறும் 10 சதவிகித மக்கள் கொண்டிருக் கின்றனர். அதாவது ஆண்டுக்கு சராசரியாக ரூ. 11 லட்சத்து 66 ஆயிரத்து 520 வருமானம் ஈட்டு கின்றனர். இந்திய இளைஞர்களின் சராசரி ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்து 4 ஆயிரத்து 200 ஆகவே உள்ளது. இந்தியா ஏழைகள் நிரம்பிய, சமத்துவமற்ற நாடாகவும், செல்வந்தர்கள் உயர்ந்து தனித்துவமாகத் தெரியும் நாடாகவும் இருந்து வருகிறது. இந்திய மக்களின் சராசரி குடும்பச் சொத்து என்பது ரூ. 9 லட்சத்து 83 ஆயிரத்து10 ஆக இருக்கிறது. பாலின சமத்துவமும் இந்தியாவில் மிகவும் அதிகமாக இருந்து வருகிறது.
இந்தியாவில் பெண் ஊழியர்களின் வருமானப் பங்கு 18 சத விகிதமாக இருக்கிறது. உலகளவில் இந்த சத விகிதம் மிகவும் குறைவு. மத்திய கிழக்கு நாடுகளில் மட்டும்தான் பெண் தொழிலாளர்கள் வருமானப் பகிர்வு, இந்தியாவை விடக் குறைவாக 15 சதவிகிதமாக இருக்கிறது. உலகளவில் அதிகமான வருமானம் உள்ள நாடுகளிலும் பாலின சமத்துவமின்மை இருக்கிறது. குறிப்பாக அமெரிக்காவில் இருக் கிறது. ஆனால், அதிக வருமானம் ஈட்டும் அதே நேரத்தில் சமத்துவம் இருக்கும் நாடுகளில் ஒன்றாக சுவீடன் இருக்கிறது. குறைந்த வருமானம், நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் சமத்துவமின்மை அதிக மாக இருக்கிறது. பிரேசில், இந்தியாவில் வரு மானச் சமத்துவமின்மை அதிகரித்துள்ளது. அதிகமான அளவில் சமத்துவமின்மை இருக்கும் நாடுகளில் சீனாவும், குறைந்த அள வில் சமத்துவமின்மை இருக்கும் நாடுகளில் மலேசியா, உருகுவே-யும் இடம்பெற்றுள்ளன. இந்த சமத்துவமின்மை சீராக அதிகரிக்க வில்லை. மாறாக, அமெரிக்கா, ரஷ்யா, இந்தியாவில் சமத்துவமின்மை வேகமாக அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள், சீனா வில் சமத்துவமின்மை இருந்தாலும் அது குறைந்த வேகத்தில்தான் இருக்கின்றன. கொரோனா தொற்றுப் பரவலால் பொரு ளாதாரத்தில் ஏற்பட்ட சிக்கல்கள், நெருக்கடிகள் சமத்துவமின்மை அளவை மேலும் அதி கரித்துவிட்டன. குறிப்பாக செல்வந்தர் களுக்கும், சாமானியர்களுக்கும் இடை யிலான வேறுபாடு அதிகரித்துள்ளது.” இவ்வாறு, உலக சமத்துவமின்மை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.