வீர் தாஸின் ‘இரண்டு இந்தியா’ பேச்சு: சங்பரிவார் கொதிப்பு
புதுதில்லி, நவ.18- இந்தியாவின் மிகச்சிறந்த மேடை நகைச்சுவை கலைஞராக இருப்பவர் வீர் தாஸ். திரைப்படங்களிலும் நடித் துள்ளார். இவர், அமெரிக்காவின் வாஷிங் டன் டிசி-யிலுள்ள உலகப் புகழ்பெற்ற ஜான் எப் கென்னடி மையத்தில் (சென் டர் ஃபார் தி பெர்பாமிங் ஆர்ட்ஸ்) அண்மையில் நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் பங்கேற்றார். அதில், ‘ஐ கேம் ப்ரம் டூ இந்தியாஸ்’ (I Came From Two Indias) என்ற தலைப்பில் நகைச்சுவை உரையாற்றிய வீர் தாஸ் சுமார் 6 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த உரையை சமூகவலைதளப் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டார். இது வாச கர் மத்தியில் பரவலான வரவேற்பை பெற்றுவந்த நிலையில், வீர் தாஸ், தேசத்தை அவமதித்து விட்டார் என்று சங்-பரிவார் அமைப்புக்கள் வழக்கம் போல கலகத்தை ஆரம்பித்துள்ளன. அவரை கைது செய்ய வேண்டும் என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஆதித்ய ஜா, காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பார்வையாளர்கள் கலந்துகொண்ட நகைச்சுவை அரட்டை அரங்கத்தில், இந்தியாவின் ‘இரு வேறு முகங்கள்’ குறித்தே வீர் தாஸ் விளக்கி இருந்தார். இந்தியாவின் பெருமைகளை பேசிய அதேநேரத்தில் அவலங்களையும் பட்டியலிட்டார்.
“நான் இருவேறு காட்சிகள் நில வும் இந்தியாவிலிருந்து வந்திருக்கி றேன். ஒவ்வொரு முறையும் பச்சை செர்சி அணிந்த (பாகிஸ்தான்) அணி யுடன் விளையாடும் போது, நீலம் வெற்றியடையும் என்று நாங்கள் ஏக் கம் கொள்கிறோம். அதேநேரம், பச்சை யிடம் தோற்கும் ஒவ்வொரு முறையும் காவியாக நாங்கள் மாறுகிறோம். பகல் நேரங்களில் பெண்களை வழிபடுகி றோம். இரவில் கும்பலாக பாலியல் வல்லுறவில் ஈடுபடுகிறோம். பிரதமர் நலன் குறித்த தகவல் எப்போது வந்தா லும் நாங்கள் கவலைப்படுகிறோம். அதேநேரத்தில், பிரதமர் நலநிதியம் (PM Cares Fund) குறித்த வெளிப்படை யான விவரங்களை தெரிந்துகொள்ள முடியாதவர்களாகவும் இருக்கிறோம். பிரிட்டிஷ் ஆட்சியை அப்புறப்படுத்தி விட்டோம். ஆனால், இப்போதும் அர சாங்கத்தை ஆளும் கட்சி என்றுதான் கூறுகிறோம். உலகிலேயே 30 வய துக்கு கீழான இளைஞர்களை அதிகம் கொண்டிருக்கிறோம். ஆனாலும் 150 ஆண்டு கால பழமையான சிந்தனை களை கொண்ட 75 வயது தலைவர களின் பேச்சை கேட்பவர்களாக இருக்கிறோம்” என்று வீர் தாஸ் பேசி யிருந்தார்.
இந்தப் பேச்சுக்காகவே தற்போது அவரைக் கைது செய்ய வேண்டும் என்று பாஜகவினர் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். “வீர் தாஸ், இந்திய பெண்களையும் நாட்டையும் சர்வதேச அரங்கில் இழிவுபடுத்தியுள்ளார்” என்று பாஜக செய்தித் தொடர்பாளர் ஆதித்யா ஜா தனது புகாரில் குறிப் பிட்டுள்ளார். மறுபுறத்தில் வீர் தாஸிற்கு ஆத ரவுக் குரல்களும் எழுந்துள்ளன. “இங்கு இரண்டு இந்தியா இருக்கிறது என்பதில் யாரும் சந்தேகப்பட முடி யாது. ஆனால், ஒரு இந்தியராக அதை உலகுக்கு சொல்ல நாங்கள் விரும்ப வில்லை. நாங்கள் சகிப்புத்தன்மை யற்றவர்களாகவும் பாசாங்குத்தன மாகவும் இருக்கிறோம்” என்று காங்கி ரஸ் மூத்த தலைவர் கபில் சிபல் டுவிட்ட ரில் பதிவிட்டுள்ளார். இதனிடையே, நாட்டை அவ மதிக்கும் நோக்கத்தில் தான் எதுவும் பேசவில்லை என்று வீர்தாஸ் விளக் கம் அளித்துள்ளார். “வெவ்வேறு விஷயங்களைச் செய்யும் இரண்டு தனித்தனி இந்தி யாக்களின் இரட்டைத்தன்மை பற்றிய நையாண்டி வீடியோவே இது. எந்த தேசத்திலும் ஒளியும் இருளும், நன்மை யும் தீமையுமாக இரண்டுமே உள்ளன. இதில் ஒன்றும் ரகசியம் இல்லை. நாங்கள் சிறந்தவர்கள் என்பதை ஒரு போதும் மறக்க வேண்டாம் எனவும் அந்த நிகழ்ச்சியிலேயே நான் பேசி யுள்ளேன். திருத்தப்பட்ட வீடியோக் களால் தயவு செய்து ஏமாறாதீர்கள்” என்று மக்களை அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.