வீரளூர் சம்பவம்: வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்க
சென்னை, ஜன. 28 – வீரளூரில் சாதிய வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், வீரளூரில் அருந்திய மக்கள் மீது ஜன.16 அன்று சாதிய ஆதிக்க சக்தி கள் தாக்குதல் நடத்தினர். இதுகுறித்து மே 17 இயக்கத்தின் கள ஆய்வு அறிக்கை வெளியீட்டு நிகழ்வு வெள்ளி யன்று (ஜன.28) சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் அரசியல் தலைமைக்குழு உறுப் ்பினர் ஜி.ராமகிருஷ்ணன், “வீரளூரில் 12ம் தேதி உயிரிழந்த நாட்டான் என்பவரை பொதுப்பாதை வழியாக கொண்டு செல்ல ஆட்சியரும், வட்டாட் ்சியரும் ஏற்பாடு செய்தனர்.
அமுதா என்பவரின் சடலத்தை ஜன.16ந் தேதி பொதுப்பாதை வழி யாக கொண்டு செல்ல பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருந்த நேரத்தில், சாதிய ஆதிக்க சக்திகள் அருந்ததிய குடியிருப்புக்குள்புகுந்து தாக்குதல் நடத்தி உள்ளனர். இதில் தொடர்புடையவர்கள் மீது வன் கொடுமை தடுப்புச்ச ட்டத்தின்கீழ் வழக்கு பதிய வேண்டும்; பாதிக்கப்பட் ்டவர்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்” என்றார். “இந்தச் சூழலில், ஜன.28 அன்று அருந்ததிய சமூகத்தை சேர்ந்த பெண்மனி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரின் உடலை பொதுப்பாதை வழியாக கொண்டு செல்ல அரசு நடவ டிக்கை எடுக்க வேண்டும். இதை செய்ய தவறும்பட்சத்தில் நேரடியாக களத்தில் இறங்குவோம். கிராமங்களில் வெவ்வேறு வடிவங்களில் நிகழும் தீண்டாமை கொடுமையை ஒழிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அவர் கூறினார்.
பதவி நீக்கம்
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி குறிப்பிடுகையில், “பொதுப்பாதையை பயன்படுத்த அனைவருக்கும் அனுமதியும், பாது காப்பும் வழங்க வேண்டும். வீரளூரில் வன்முறையில் ஈடுபட்டவர்கள், அதனை தடுக்க தவறிய அதிகாரிகள், மக்களை சந்திக்காத மக்கள் பிரதிநிதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக, சட்டத்தை அமல்படுத்த தவறிய அதி காரிகளை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அருந்ததிய மக்கள் மீதான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்” என்றார். “திருக்காட்டுப்பள்ளி விவகாரத்தில் மதக்கலவரத்தை உருவாக்க முயற்சிக் ்கும் பாஜக தலைவர்கள் அனைவரை யும் கைது செய்ய வேண்டும். பாஜக எம்பிக்களை கொண்டு அமைக்கப்பட்ட குழுவை தமிழகத்திற்குள் அரசு அனு மதிக்க கூடாது” என்றும் அவர் கூறினார். இந்நிகழ்வில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செய லாளர் மூ.வீரபாண்டியன், விசிக துணைப்பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி எம்எல்ஏ, ஆதித்தமழர் கட்சித் தலைவர் கு.ஜக்கையன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.