வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் கே.நாராயணா
விலையேற்றம் மற்றும் வேலையின்மைக்கு எதிராக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அகில இந்திய பார்வர்டு பிளாக், புரட்சிகர சோசலிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் & லெனினிஸ்ட்) லிபரேஷன் ஆகிய இடதுசாரி கட்சிகள் மே மாதம் 25 முதல் 31 வரை அகில இந்திய போராட்ட இயக்கத்தை நடத்தவுள்ளதாக அறிவித்திருந்தன.
இந்த முடிவின் அடிப்படையில், நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ஹைதராபாத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தது.
இந்த நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்க்கு பிரதமர் மோடி வருகிறார் என்பதால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் தோழர் கே.நாராயணா வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.