தமிழகம்
விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 26.-11.-2021 காலை 11-.00 மணியளவில் விவசாயிகள் போராட்டம் ஓராண்டு நிறைவு பெற்றதை ஒட்டி நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் முல்லை, வீரமணி ஆகியோர் தலைமை தாங்கினர்.
ஆர்ப்பாட்ட கோரிக்கைகளை விளக்கி மார்க்சிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் காசி, மாவட்ட குழு உறுப்பினர் ஞானசேகரன், கேசவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுந்தரேசன், விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் எம்.நந்தி ஆகியோர் உரையாற்றினர். இறுதியில் திருப்பத்தூர் நகர துணை செயலாளர் முருகன் நன்றியுரையாற்றினார்.