விருது பெற்ற கோவை மாமன்ற உறுப்பினர் பிரபா ரவீந்திரனுக்குப் பாராட்டு!
செய்திக்குறிப்பு: A. P. மணிபாரதி
கோயமுத்தூர் மாநகராட்சியில் தேர்வு பெற்றுள்ள 100 மாமன்ற உறுப்பினர்களில் சிறப்பாகப் பணியாற்றி வரும் 10 மாமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்கு மாமன்ற நிர்வாகத்தின் சார்பில் இன்று (26.01.2023) குடியரசு தின விழா நிகழ்ச்சியில் விருதுகள் வழங்கிப் பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்தப் பத்து மாவட்ட உறுப்பினர்களின் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 48 வது வார்டு உறுப்பினர் பிரபா ரவீந்திரனும் ஒருவர்.
சிறந்த முறையில் பணியாற்றி வரும் மாமன்ற உறுப்பினர் என்ற பெருமை பெற்று வந்த பிரபா ரவீந்திரன் அவர்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அலுவலகமான ஜீவா இல்லத்தில் மாநில பொருளாளர் எம். ஆறுமுகம் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் சி. சிவசாமி, மாவட்ட துணை செயலாளர் ஜெ.ஜேம்ஸ், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் கே.எம். செல்வராஜ், ரவீந்திரன் சாந்தி சந்திரன், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன், மற்றும் கே.சுப்பிரமணியம், ஏ. அஷ்ரப்அலி, என்.சந்திரன், கே.ஆர். தங்கராஜ், பி. சற்குணம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.