கட்டுரைகள்

விடுதலை நாளில் விபரீத குரல்…

ஆர்.கிருஷ்ணமூர்த்தி

ஆகஸ்ட் 15 இந்திய சுதந்திர தினம். நாடு முழுவதும் மக்கள் தேசியக் கொடி ஏற்றி பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடுகிற நாள். வெள்ளையனை விரட்டி இந்தியாவை மீட்டெடுக்க தங்களது இன்னுயிரைக் கொடுத்து போராடிய எண்ணற்ற தியாகிகளை நினைவு கூர்ந்து தியாகம் போற்றும் நாள். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு, தியாகிகளுக்கு வணக்கம் செலுத்தும் நாள். கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றி மலர்கள் உதிர வந்தேமாதரம் என முழங்கும் நாள். பெற்ற விடுதலையைப் பேணிக் காத்திட , தேசம் காத்திட, ஜனநாயகம் காத்திட, மதச் சார்பின்மை காத்திட ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் உறுதி மொழி ஏற்கும் நாள். ஆடுவோமே! பள்ளுப்பாடுவோமே! என ஆனந்தக் கூத்தாடி கொண்டாட வேண்டிய நாள். எங்கும் சுதந்திரம் எதிலும் சுதந்திரம் என்பதே பேச்சாகி நாமிருக்கும் நாடு நமதென்பதறிவோம்! இது நமக்கே உரியதாம் என்பதறிவோம் என்று பாடி மகிழ்ந்து சுதந்திரத்தின் பெருமையைப் பேசி மகிழ வேண்டிய நாள். அடிமையென்பது இனியில்லை என துள்ளிக் கூத்தாடும் நாள். இந்திய விடுதலைக்கு இன்னுயிர் தந்திட்ட முன்னோடித் தியாகத் தலைவர்கள் கனவு கண்ட இந்தியாவைக் கட்டுவதற்கும், விடுதலைக்குப் பின் பெற்ற வளர்ச்சியினைப் பேணி காப்பதற்கும், நாளைய வளர்சிப் பாதைக்கான திட்டங்கள் உருவாக்கி, அந்தப் பாதையில் நமது பணி என்ன என்பது குறித்துஷ கனவு காண வேண்டிய நாள். அதனால் தான் ஆகஸ்ட் 15ஐ தேசிய நாளாகப் போற்றி மகிழ்கிறோம்.
விஷ விதை….
இந்த ஆண்டு டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிய பாசிச அரசின் பிரதமர் மோடி அவர்கள் அவருக்கே உரிய வகையில் கடந்த மூன்று, நான்கு ஆண்டுகளின் அதே அவதாரத்தோடு , மாற்றம் இல்லாத கீறல் விழுந்த ரெக்கார்டிங் உரையை அள்ளி விடுகிறார். அவரது உரையில் 260 நாட்களுக்கு மேலாகப் போராடும், நாடே அவர்கள் பக்கம் நிற்கும் விவசாயிகள் போராட்டம் பற்றி ஒரு வார்த்தை இல்லை. பேரிடரால் வேலையின்றி தவிக்கும் பலகோடி மக்களின் வாழ்வாதாரச் சீரழிவு குறித்து ஒரு வார்த்தை இல்லை. நாளும் வீழும் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது பற்றி கவலையேதும் அவர் உரையில் காணப்படவில்லை. வேலையில்லா திண்டாட்டம், மாநில அரசுகளின் நிதி உள்ளிட்ட கோரிக்கைகள் பற்றி பேச்சுமூச்சேயில்லை. கொரானா பேரிடர் மூன்றாம் அலை பற்றிய மருத்துவச் சான்றோர்களின் கவலை கண்டு கொள்ளப் படவேயில்லை. தடுப்பூசிக்கு மக்கள் நாளும் அலைவது பற்றியோ, தன் அரசால் தேசத்தின் சொத்தாம் அரசுத்துறை- பொதுத்துறை நிறுவனங்கள் கார்ப்பரேட் கைகளுக்கு மாற்றப் படுவது பற்றியோ அவர் உரை கண்டு கொள்ளாத நிலையையே காட்டியது. வரலாற்றில் இல்லாத அளவுக்கு எதிர்க்கட்சிகள் தேசத்தின் ஜனநாயகம் காத்திட பாராளுமன்றத்திற்கு உள்ளும் வெளியிலும் நடத்துகின்ற போராட்டங்களை அலட்சியப் படுத்தும் வகையில் தான் மோடியின் உரை. மாறாக போலித்தன பழம்பெருமை ஓங்கி சொல்லப் பட்டது. பாராளுமன்ற மற்ற ஜனநாயக மரபுகளை மீறி அசுரவேகத்தில் நொடிப்பொழுதில் மக்கள் விரோத, தேசவிரோத சட்டங்கள் அமலாக்கப் பட்ட விதத்தை மறைப்பதற்கான உரையாகவே பிரதமரின் உரை எனில் அது மிகையாகாது.
இது ஒருபுறம் இருக்கட்டும். ஆகஸ்ட் 15 கோட்டையிலே கொடியேற்றி பிரதமர் ஆற்றும் உரை என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது என்பதை மறுப்பதாக அவர் உரை தொனித்தது. இந்த நேரத்தில் வேண்டாத, சம்பந்தமற்ற ஒரு விஷவிதையை பிரதமர் மோடி தூவுகிறார். இனி வரும் ஆண்டுகளில்
ஆகஸ்ட் 14 தேசப் பிரிவினையின்நினைவு தினமாக அனுசரிக்கப்படும் என்பதை அவர் நாட்டு மக்களுக்கு மன்கீபாத் அதாவது தனது மனதின் குரலாக முழங்கியிருக்கிறார்.
பின்னணி:-
இந்தியாவின் அதிகார மொழியாக இந்தி அறிவிக்கப் பட்டபோது 40 சதமாக உள்ள முஸ்லிம் மக்களின் உருதுவையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
1906ம் ஆண்டு பிரிக்கப்படாத இந்தியாவில் முஸ்லீம் மக்களின் அதிகாரங்களைப் பாதுகாப்பதற்கு ஒரு அமைப்பு தேவையென உருவாக்கப்பட்டதே முஸ்லிம் லீக்.
1940ல் பிரிட்டன் வைஸ்ராய் லின்லித்தோ ஆகஸ்ட் பிரகடனம் (மாண்டேகு பிரகடனம்) என்ற திட்ட அறிவிப்பை வெளியிட்டார். வைஸ்ராய் நிர்வாகக் குழுவிலும், போர் பிரதிநிதி ஆலோசனைக் குழுவிலும் இந்தியர் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. ஆனால் முஸ்லிம் லீக் நிராகரிக்கப்பட்டது.
1940 மார்ச் 23 அன்று முஸ்லிம் லீக் சுதந்திரமான பாகிஸ்தான் தனிநாடு தீர்மானத்தை முன்மொழிவு செய்தது.
பாகிஸ்தான் முஸ்லிம்களுக்கான நாடு எனில் இந்தியா இந்துக்களுக்கான நாடாக வேண்டும் என்றனர் மத அடிப்படைவாதிகள்.
பாகிஸ்தான் உருவான பிறகே சுதந்திரம் என்றார் ஜின்னா.
சுதந்திரமே முன்னுரிமை என்றார் காந்தி.
மத மோதல்கள் பெருகியது. கல்கத்தா மதக்கலவரத்தில் உயிரிழப்பு அதிகமாயிற்று.
இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என காந்தி உறுதிபட அறிவித்தார்.
1946ல் சுதந்திரம் வழங்க பிரிட்டனால் அனுப்பப்பட்ட அமைச்சரவை தூதுக்குழுவின் பேச்சு வார்த்தையில் முஸ்லிம் லீக் விலகி நின்றது. 1946 ஆகஸ்ட் 16, 17,18 தேதிகளில் கல்கத்தா படுகொலைகள் பெருக்கெடுத்தது.
“மதமோதல்கள் வேண்டாம்- மனிதனை மனிதன் வேட்டையாடுதல் வேண்டாம்“ என காந்தி பிரார்த்தனை கூட்டங்களிலும், மக்கள் சந்திப்பிலும் வலியுறுத்தினார். மதக்கலவரம் அடங்கத் துவங்கியது.
“ ஒரு முழு ராணுவப் படையால் சமாளிக்க முடியாத கல்கத்தா கலவரத்தை தனியரு மனிதனாக காந்தி சமாளித்தது அற்புதமான செயல்” என்று புகழ்ந்தார் மவுண்ட் பேட்டன்.
இந்தியா- பாகிஸ்தான் பிரிவினையை காந்தி விரும்பவில்லை. அதேசமயம் தடுக்கும் முயற்சியும் பலனளிக்கவில்லை. மதக் கலவரத்திற்குப்பின் காந்தி ஒப்புதல் கொடுத்தார்.
ஜூன் 2 அன்று பிரிவினைத் திட்டத்தை மவுண்ட் பேட்டன் முன் வைத்தார்.
ஜுன் 3 அன்று நேரு , ஜின்னா மற்றும் சீக்கிய பிரதிநிதி பல்தேவ்சிங் ஆகியோர் ஆல் இண்டியா ரேடியோ மூலம் பிரிவினை திட்டத்தை நாட்டு மக்களிடம் முன் வைத்தனர்.
1947 ஆகஸ்ட் 14 பாகிஸ்தான் புதிய நாடானது.
பஞ்சாப், ஆப்கான், காஷ்மீர், சிந்து, பலுகிஸ்தான், வங்காளம் ஆகியவற்றின் ஆங்கில முதல் எழுத்துடன், பலுகிஸ்தானிலிருந்து தான் சேர்த்து பாகிஸ்தான் என்ற பெயரை சவுத்ரி ரகமத் அலி அறிவித்தார். பாகிஸ்தான் பிரிவினையை முதலில் கோரியதும் இவரே.
இதற்குப் பிறகு பங்களாதேஷ் ஒரு யுத்தத்திற்குப் பின் பிரிந்தது. இது வரலாறு.
எந்த தேசத்திலும் பிரிவினை ஒரு கலவரத்தின் தொடர்ச்சியாகவே ஏற்படும். ஆனால் 74 ஆண்டுகளுக்குப் பின் அந்த நாளை பிரிவினையின் நினைவு தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற மோடியின் அறிவிப்புக்கு அவசியம் என்ன? நாடும் மக்களும் இந்திய விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்ற இந்த நேரத்தில் தோண்டி எடுத்து இந்துத்வா மதவெறி ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி அறிவிப்பின் நோக்கம் என்ன? இந்த அறிவிப்பு எதற்கான தூண்டுதல்? விடுதலை இந்தியாவை அதன் ஜனநாயக, பாரம்பரிய, கலாச்சார, மத ஒற்றுமை என அனைத்து வகையாலும் சீரழிப்பதை கைவிடவேண்டிய மோடி அரசு ஒரு விஷமத்தன அறிவிப்பின் மூலம் மேலும் எண்ணெய் ஊற்றுகிறது. இந்திய மக்களை மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட அனுமதிக்காத மோடி அரசு , சுதந்திர தினத்தன்று அனைத்து பகுதி மக்களும் இந்தியாவைக்காப்போம் ! என்ற கோரிக்கையுடன் போராட வேண்டிய இழி நிலையை உருவாக்கி இன்பம் காணும் மோடி அரசு, தன் கொடும் செயலை மறைத்து மக்களை திசை திருப்பிட 74 ஆண்டுகளுக்கு முன்பான , நமக்கு தேவையற்ற, நாடு மறந்து போன பிரிவினை நினைவு தினத்தை தேடி எடுத்து அனுசரிக்கச் சொல்வது கேவலம் அல்லவா?
நாட்டு மக்களை ஒன்று சேர விடாமல் இனத்தின், மதத்தின், ஜாதியின் பெயரால் நாளும் பிரிக்கின்ற மோடி அரசின் தேசவிரோத முயற்சிதானே பிரிவினை நினைவு தினம் அறிவிப்பு.
மோடி அவர்களே! சங்கிப் பரிவாரங்களே! துக்க நினைவு தினமாக, இந்திய வரலாற்றில் கரை படிந்த தினமாக அனுசரிக்க வேண்டிய தினங்கள் எவை தெரியுமா?
விடுதலைப் போராட்டத்தில் விரல்கூட நுழைக்காது சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஓடின நாள்!
நாடே, உலகே போற்றும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற மதவெறியன் நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15 ம் நாள். இது போன்ற உங்களின் நாட்களை தேசத்துரோக தினமாக அனுசரிக்கலாமா?
இந்திய வரலாற்றில், இந்துத்வா வம்ச வழியில் இப்படி ஏகப்பட்ட நாட்களை இந்த நாட்டு மக்கள் அனுசரிக்க வேண்டி இருக்க , முடிந்து போன அண்டை நாட்டு விடுதலை நாளை இங்கு பிரிவினை தினமாக அனுசரிக்க அறைகூவல் விடும் பிரதமர் மோடி அவர்களே! அநாகரீகம் என்றும் அரசியல் ஆகாது!
இன்றைய உங்களது பாசிச ஆட்சியில் தேசமும், மக்களும் ஒவ்வொரு நாளையும் துயர் மிகு நாளாக , துக்க நாளாக அனுபவிக்கிறது, அனுசரிக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்! ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஒரே வேண்டுகோள் பாசிசம் வேரறுக்கப் பட வேண்டும் என்பதுதான்! அந்த மாற்றத்தை நிச்சயம் காண்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!
இந்தியா காத்திட இணைந்து விட்டோம்! ஒன்றினைந்து போராடி நாடு காப்போம்! ஏனெனில் தேச பக்த கூட்டம் நாம்!
இதற்குப் பிறகு பங்களாதேஷ் ஒரு யுத்தத்திற்குப் பின் பிரிந்தது. இது வரலாறு.
எந்த தேசத்திலும் பிரிவினை ஒரு கலவரத்தின் தொடர்ச்சியாகவே ஏற்படும். ஆனால் 74 ஆண்டுகளுக்குப் பின் அந்த நாளை பிரிவினையின் நினைவு தினமாக அனுசரிக்கவேண்டும் என்ற மோடியின் அறிவிப்புக்கு அவசியம் என்ன? நாடும் மக்களும் இந்திய விடுதலையை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்ற இந்த நேரத்தில் தோண்டி எடுத்து இந்துத்வா மதவெறி ஆர்.எஸ்.எஸ். பிரதமர் மோடி அறிவிப்பின் நோக்கம் என்ன? இந்த அறிவிப்பு எதற்கான தூண்டுதல்? விடுதலை இந்தியாவை அதன் ஜனநாயக, பாரம்பரிய, கலாச்சார, மத ஒற்றுமை என அனைத்து வகையாலும் சீரழிப்பதை கைவிடவேண்டிய மோடி அரசு ஒரு விஷமத்தன அறிவிப்பின் மூலம் மேலும் எண்ணெய் ஊற்றுகிறது. இந்திய மக்களை மகிழ்ச்சியுடன் வாழ்ந்திட அனுமதிக்காத மோடி அரசு , சுதந்திர தினத்தன்று அனைத்து பகுதி மக்களும் இந்தியாவைக்காப்போம் ! என்ற கோரிக்கையுடன் போராட வேண்டிய இழி நிலையை உருவாக்கி இன்பம் காணும் மோடி அரசு, தன் கொடும் செயலை மறைத்து மக்களை திசை திருப்பிட 74 ஆண்டுகளுக்கு முன்பான, நமக்கு தேவையற்ற, நாடு மறந்து போன பிரிவினை நினைவு தினத்தை தேடி எடுத்து அனுசரிக்கச் சொல்வது கேவலம் அல்லவா?
நாட்டு மக்களை ஒன்று சேர விடாமல் இனத்தின், மதத்தின், ஜாதியின் பெயரால் நாளும் பிரிக்கின்ற மோடி அரசின் தேசவிரோத முயற்சிதானே பிரிவினை நினைவு தினம் அறிவிப்பு.
மோடி அவர்களே! சங்கிப் பரிவாரங்களே! துக்க நினைவு தினமாக, இந்திய வரலாற்றில் கரை படிந்த தினமாக அனுசரிக்க வேண்டிய தினங்கள் எவை தெரியுமா?
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு பிரிட்டிஷ் ஆட்சியிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டு ஓடின நாள்!
நாடே, உலகே போற்றும் மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற மதவெறியன் நாதுராம் கோட்சே தூக்கிலிடப்பட்ட நவம்பர் 15 ம் நாள். இது போன்ற உங்களவர்களின் நாட்களை தேசத்துரோகிகள் தினமாக அனுசரிக்கலாமா?
இந்திய வரலாற்றில், இந்துத்வா வம்ச வழியில் இப்படி ஏகப்பட்ட நாட்களை இந்த நாட்டு மக்கள் அனுசரிக்க வேண்டி இருக்க, முடிந்து போன அண்டை நாட்டு விடுதலை நாளை இங்கு பிரிவினை தினமாக அனுசரிக்க அறைகூவல் விடும் பிரதமர் மோடி அவர்களே! அநாகரீகம் என்றும் அரசியல் ஆகாது!
இன்றைய உங்களது பாசிச ஆட்சியில் தேசமும், மக்களும் ஒவ்வொரு நாளையும் துயர் மிகு நாளாக , துக்க நாளாக அனுபவிக்கிறது, அனுசரிக்கிறது என்பதை நீங்கள் அறிய வேண்டும்! ஒட்டுமொத்த இந்திய மக்களின் ஒரே வேண்டுகோள் பாசிசம் வேரறுக்கப் பட வேண்டும் என்பதுதான்! அந்த மாற்றத்தை நிச்சயம் காண்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை!
இந்தியா காத்திட இணைந்து விட்டோம்! ஒன்றினைந்து போராடி நாடு காப்போம்! ஏனெனில் தேச பக்த கூட்டம் நாம்!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button