“விடுதலை” சி.கே.பிரித்விராஜ் மறைவுக்கு இரங்கல்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
“விடுதலை” சி.கே.பிரித்விராஜ் மறைவுக்கு இரங்கல்
விடுதலை நாளிதழ் விளம்பரப் பிரிவில் பணியாற்றி வந்த சி.கே.பிரித்விராஜ் (52) இன்று (18.12.2023) அரசினர் பொது மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்
எண்ணூர், காமராஜ் நகரில் வசித்து வந்த சி.கே.பிரித்விராஜ் முப்பது வருடத்துக்கு முன்பு, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் வார இதழான ‘’ஜனசக்தி’’ நாளிதழாக வெளியான போது, ஜனசக்தி பத்திரிகையில் சேர்ந்து கணிணி பயிற்சி பெற்றவர். மூத்த தலைவரும், பத்திரிகை துறையில் அனுபவம் வாய்ந்தவருமான ஜே.எம். கல்யாணம் அவர்களது வழி காட்டலில் பத்திரிகையாளர் பயிற்சி பெற்றவர். நல்ல வடிவமைப்பாளாராக உயர்ந்தார். திரைப்பட கலைஞர்களுடன் நல்ல நட்பு கொண்டிருந்தவர்.
ஜனசக்தி நாளிதழ் மீண்டும் வார இதழாக மாற்றப்பட்ட நேரத்தில் விடுதலை பத்திரிகையில் இணைந்து விளம்பரப் பிரிவில் பணியாற்றி வந்தார்.
பணிவு, அடக்கம், அமைதி ஆகியவற்றின் ஒருங்கிணைந்து வாழும் சாட்சியாக இருந்த சி.கே.பிரித்விராஜ் இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட உடல் செயலிழப்பு தொடர்பாக ராஜீவ் காந்தி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இவருக்கு மனைவியும் மூன்று மகன்களும் உள்ளனர்.
அன்னாரின் மறைவுக்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அவரை பிரிந்து வாடும் அவரது மனைவி, மகன்களுக்கு ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறது என்று கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.