வானிலை முன்னறிவிப்பை துல்லியமாக கணக்கிட தொழில்நுட்பத்தை நிறுவும் திட்டம் உள்ளதா?
புதுதில்லி,பிப்.4- வானிலை முன்னறிவிப்பை துல்லி யமாக கணக்கிட தொழில்நுட்பத்தை நிறுவும் திட்டம் ஒன்றிய அரசிடம் உள்ளதா? என்று நாடாளுமன்ற மாநிலங் களவையில் தமிழக எம்.பி., கேள்வி எழுப்பினார். இதுகுறித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி., ராஜேஷ்குமார் பிப்ரவரி 4 வெள்ளியன்று கேள்வி எழுப்பினார். அவர் பேசுகையில் , ‘இந்தியாவில் காலநிலை முன்னறிவிப்பு கணக்கீடு கள் கடந்த 5 ஆண்டுகளில் தவறாக இருந்துள்ளதா? மண்டல வானிலை ஆய்வு மையங்கள் இதுபோன்ற முன்ன றிவிப்புகள் தவறாக உள்ளது என்பதை கணித்துள்ளதா? என்றும் வானிலை முன்னறிவிப்பை துல்லியமாக கணக் கிடும் தொழில்நுட்பம் நிறுவுவது தொடர் பாக அரசிடம் திட்டம் உள்ளதா? அப்படியானால் அது எத்தகையானது? என்று கேள்வி எழுப்பினார். இதற்கு ஒன்றிய அறிவியல் – தொழில்நுட்பம் மற்றும் புவியியல் அமைச்சகம் அளித்த பதிலில் , “கடந்த சில ஆண்டுகளாக வானிலை முன்னெச்சரிக்கையை கணிப்பதில் முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்த 80 சதவீத கணிப்புகள் சரியான முறை யில்தான் இருந்துள்ளன. மேலும் மண்டல அமைப்பு வானிலை ஆய்வு மையங்கள் வானிலையை கணிப்பதில் தற்போது புதிய தொழில்நுட்பத்தை கொண்டு அதுசார்ந்த துறையினர் துல்லியமாக கணித்து வருகின்றனர். வானிலை நிலவரத்தை கணிப்ப தற்கு தொழில்நுட்பங்கள் மேம்படுத்தப் பட்டுள்ளன. மேலும் தொழில்நுட் பத்தை மேம்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து நடந்து வருகின்றன’ என்று தெரிவித்துள்ளது.