வழக்கம்போல அவமானப்பட்டதுதான் மிச்சம் புகைப்படப் புரட்டுகளை விடுவதாக இல்லை ஆதித்யநாத்!
லக்னோ, நவ.24- பிரதமர் மோடியுடன் உரையாடுவது போன்று, உ.பி. முதல்வர் ஆதித்யநாத் வெளியிட்டுள்ள புகைப்படம் போலியானது என்று சர்ச்சை எழுந்துள்ளது. அனைத்து யூனியன் பிரதேசம், மாநில காவல்துறை டிஜிபி-க்களின் மாநாடு, அண்மையில் உத்தரப்பிரதேச தலைநகர் லக்னோவில் நடைபெற்றது. இதற்காக பிர தமர் மோடி லக்னோ வந்திருந்த நிலை யில், அவரை உ.பி. முதல்வர் ஆதித்யநாத் நேரில் சந்தித்தார். மேலும், அதுதொடர் பான புகைப்படங்களை அவர் வெளி யிட்டிருந்தார். தன்மீது கை போட்டபடி, நடந்து கொண்டே பிரதமர் மோடி பேசுவது போன்ற ஒரு படத்தையும், பின்னர் இருவரும் திரும்பி வருவது போன்ற ஒரு படத்தையுமாக இரண்டு படங்களை ஆதித்யநாத் பதிவேற்றி யிருந்தார். கூடவே, “நாங்கள் ஒரு பய ணத்தைத் தொடங்கியுள்ளோம். அதற்காக எங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளோம். புதிய இந்தியாவை உரு வாக்க உறுதி பூண்டுள்ளோம்.
மாபெரும் உயரங்களைத் தொடுவோம்” என்று பில்டப்-பும் கொடுத்திருந்தார். இந்நிலையில்தான், ஆதித்யநாத் வெளியிட்ட அந்த 2 புகைப்படங்களுக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை காங்கி ரஸ் கட்சித் தலைவர்கள் கண்டுபிடித்து அம்பலப்படுத்தியுள்ளனர். “ஒரே ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து, நமது மாநில முதல்வர் ஆதித்யநாத், எல்லாம் சரியாக இருக்கிறது என்று கூற முயற்சிக்கி றார். ஆனால், இந்தப் புகைப்படத்தை உற்றுப் பாருங்கள். இதில் ஒரு படத்தில் பிரதமர் மோடி அங்கவஸ்திரம் போட்டுள் ளார். இன்னொரு புகைப்படத்தில் அவர் ஷால்வை அணிந்திருக்கிறார்” என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சுப்ரியா ஷனரிடே கூறியுள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவரான பி.வி.ஸ்ரீநிவாஸ், அந்த இரு புகைப் படங்களையும் சமூகவலைதளத்தில் பகிர்ந்து, “இரண்டு படங்களில் உள்ள வித்தி யாசத்தைக் கண்டுபிடிக்கவும்..!” என்று கூறி கிண்டல் செய்துள்ளார். ஆதித்யநாத் – மோடி படம் சமூகவலைதளங்களிலும் கிண்டலுக்கு உள்ளாகி இருக்கிறது. முன்பு மேற்குவங்கத்தில் கட்டப்பட்ட பாலத்தை, உ.பி.யில் கட்டப்பட்ட பாலம் என்று செய்தித் தாள்களில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து, மாட்டிக் கொண்ட வர்தான் உ.பி. முதல்வர் ஆதித்யநாத். இதில் ஏற்கெனவே அவர் அம்பலப்பட்டார். ஆனாலும் அவர், மீண்டும் ஒரு போலி யான புகைப்படத்தை வெளியிட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்திருப்பதாக விமர்சனங் கள் எழுந்துள்ளன.