வலிமையான நாடுகள் பட்டியலில் இந்தியா பின்னடைவு!
புதுதில்லி, டிச. 10 – ‘லோவி இன்ஸ்டிடியூட்’ வெளி யிட்டுள்ள ஆசியாவின் வலிமையான நாடுகள் பட்டியலில் (Asia Power Index) வழக்கம்போல், இந்தியா 4-ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்தியா 2 புள்ளிகள் சரிவைக் கண்டுள் ளது. அதேநேரத்தில் ஆசிய பிராந்தி யத்தில் இலங்கை உள்ளிட்ட அண்டை நாடுகள், இருக்கும் இந்தியாவைக் காட்டிலும் சற்று முன்னேற்றம் கண்டுள்ளன. ஆஸ்திரேலியாவின் சிட்னியை தலைமையகமாகக் கொண்ட ‘லோவி இன்ஸ்டிடியூட்’ (LOWY INSTITUTE), ஒரு சுதந்திரமான சிந்தனைக் குழு ஆகும். அது கடந்த 2018 முதல் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நாடு களை அதிகாரம், வளங்கள், பொருளா தார வளர்ச்சி, ராணுவத் திறன் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் ஆண்டுதோறும் தர வரிசைப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் 2021-ஆம் ஆண்டுக்கான தரவரிசைப் பட்டியலை (Asia Power Index) சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டுள்ளது. அதில்தான், இந்தியாவின் ஒட்டு மொத்த மதிப்பெண் 2020-ஆம் ஆண்டிலிருந்து இரண்டு புள்ளிகள் குறைந்து, தற்போது 100-க்கு 37.7 ஆக சரிந்துள்ளது. கீழ்நோக்கிய பய ணத்திலிருக்கும் 18 நாடுகளில் ஒன் றாக இந்தியா மாறியுள்ளது என்று கூறி யுள்ளது. “2020 முதல் 2021 வரையில் இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக அடுத்தடுத்து பொதுமுடக் கம், வர்த்தகப் பாதிப்பு, உற்பத்தி பாதிப்பு எனப் பல பிரச்சனைகள் இருக்கும் வேளையில், சீனா உடனான எல்லை பிரச்சனை அதன் மூலம் ஏற்பட்ட பதற்றம் ஆகியவை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே இந்தியா 4வது இடத்திற்குத் தள்ளப்பட்டு உள்ளது” என்று லோவி இன்ஸ்டிடியூட் குறிப்பிட்டுள்ளது. பொருளாதார உறவுகள், பாது காப்பு வலைப்பின்னல், கலாச்சார ஆதிக்கம், ஆகியவற்றில் இந்தியா பின்னடைவைச் சந்தித்து இருப்ப தாக லோவி இன்ஸ்டிடியூட் தெரிவித்துள் ளது. வளங்கள் மற்றும் திறன் ஆகிய இரண்டையும் ஒப்பிடும் போது ‘இந்தியா ஒரு சாதனையில்லாத நாடு’ என்றும் லோவி இன்ஸ்டிடியூட் குறிப் பிட்டுள்ளது. “இரண்டு பலவீனமான அதிகார நடவடிக்கைகளுக்காக இந்தியா எதிர் திசையில் செல்கிறது.
ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் அமெரிக்காவை உள்ளடக்கிய நாற்கர பாதுகாப்பு நட வடிக்கைகளை கடைப்பிடித்து வரும் இந்தியா, பிராந்திய பாதுகாப்பு தொடர் பான பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது. அதேபோல பொருளாதார உறவு களில் எட்டாவது இடத்தில் இருக்கிறது. ராஜீய ஆதிக்கம், பிராந்திய வர்த்தக ஒருங்கிணைப்பு முயற்சிகளில் இந்தியா பின்தங்கியிருப்பதே, இந்தப் பிரிவில் இந்தியா 8-வது இடத்திற்கு சரியக் காரணம்” என்று லோவி இன் ஸ்டிடியூட் அறிக்கை குறிப்பிடுகிறது. ராஜதந்திர நடவடிக்கைகள் அடிப்படையிலான ராஜீய ஆதிக்க த்தில் 5-ஆவது இடத்திலும், கலாச்சார ஆதிக்கத்தில் 4-ஆவது இடத்திலும் உள்ளது. இதன்காரணமாக பிராந்தி யத்தில் எதிர்பார்த்ததை விட குறை வான செல்வாக்கையே இந்தியா செலுத்துகிறது.
இந்தியாவும் ஜப்பானும் பின்தங்கிய நிலையில் இருப்பதால், அமெரிக்காவும் சீனாவும் தொடர்ந்து பிராந்தியத்தில் அதிக அதிகாரத்துடன் ‘இருமுனை’ போட்டியை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்தியாவைப் போல ஆஸ்திரேலியா, ஜப்பான் போன்ற நாடுகளும் பின்தங்கியிருப்ப தற்கு, இந்த நாடுகள் அமெரிக்காவைச் சார்ந்திருப்பதே முக்கியக் காரணம். . எதிர்கால வளங்கள் தொடர்பான மதிப்பீட்டில் மட்டும் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்த இடத்தைப் பெற்றுள்ளது. இவ்வாறு லோவி இன்ஸ்டிடியூட் குறிப்பிட்டுளளது. இந்தியாவைப் போல ஜப்பா னும் கடந்தாண்டைக்காட்டிலும் 2.4 மதிப்பெண்களை இழந்துள்ளது. இலங்கை, கடந்தாண்டை விட 0.3 புள்ளிகள் முன்னேற்றத்தைக் காட்டி யுள்ளது. ஆசிய – பசிபிக் பிராந்தியத்தில், அமெரிக்கா 82.2 புள்ளிகள், சீனா 74.6 புள்ளிகள், ஜப்பான் 38.7 புள்ளிகள், இந்தியா 37.7 புள்ளிகள், ரஷ்யா 33.0 புள்ளிகள், ஆஸ்தி ரேலியா 30.8 புள்ளிகள், தென் கொரியா 30.0 புள்ளிகள், சிங்கப்பூர் 26.2 புள்ளிகள், இந்தோனேசியா 19.4 புள்ளிகள், தாய்லாந்து 19.2 புள்ளிகள் என முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளன.