கட்டுரைகள்

வர்க்க போராட்டமும், விவசாயிகளின் எழுச்சியும்

– சேகுவேராதாஸ்

கர்நாடக மாநிலம் படகராவில் ஒரு நடுத்தர குடும்பத்தில் 1906 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ந் தேதி பிறந்தார். இவர் இளம் வயதில் நாட்டு விடுதலை போரில் பங்கேற்க வேண்டும் என எண்ணம் கொண்டு இருந்தார். அன்னிய துணிகளை எரிப்பது, கதர் துணிகளை அணியும் போராட்டம் நாடு முழுவதும் நடைபெற்றது. அப்போது கல்லூரியில் இருந்து வெளியே வந்து 1930ல் அன்னிய துணி எரிப்பு போராட்டத்தில் பங்கு பெற்றார்.
இளம் வயதில் ஆங்கிலேயரை எதிர்க அரசு பதவிகளை இந்தியர்கள் துறக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் காந்தியின் சுயராஜ்ஜிய கொள்கையில் ஈர்க்கப்பட்டு தனது கல்லூரி படிப்பை துறந்தார். அப்போது அன்னிய துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு பெற்று காவல் துறையினரால் நடு ரோட்டில் சித்திரவதை செய்யப்பட்டு குற்றுயிரும், கொலையிருமாக சாக்கடை கால்வாயில் வீசி எறிந்தனர். அப்போது அந்த வழியே வந்த ஒரு தாய் அவரை மீட்டு தனது வீட்டில் வைத்து வைத்தியம் பார்த்து அவர் குணமாகும் வரையில் அங்கேயே தங்கி இருந்தார். அந்த தாய் சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட தாசித்தாய். அவருடைய நிலையை கண்டு பரிதவித்து போனார்.
அப்போதுதான் நான் உயர்ந்த சமூகத்தில் பிறந்தாலும் தனது உயிர் மூச்சு இருக்கும் வரை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைக்க வேண்டும் என்ற எண்ணம் வந்தது.
பின்பு காவல்துறையால் சிறைபிடிக்கப்பட்டார். அது வரை பி.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் அனுதாபியாக செயல்பட்டு வந்தார். சிறையில் கம்யூனிஸ்ட் கட்சியின்; முக்கிய தலைவர்களில் ஒருவர் அமீர் ஹைதர்கான் அவர்களை சந்திக்கிறார். இருவருக்கும் நட்பு ஏற்படுகின்றது. அவர் பி.எஸ்.ஆர். அவர்களுக்கு “கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கையை” கொடுக்கிறார். அன்றிலிருந்து தோழர் பி.எஸ்.ஆர். அவர்களுக்கு கம்யூனிஸ்ட் கட்டளைகளை ஏற்று உழைக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது.
சீனிவாச ராவ் சிறையில் இருந்து வெளியே வந்து கர்நாடகா பகுதியில் கம்யூனிஸ்ட் தோழர்களோடு பணியாற்றினார். அப்போது அகில இந்திய தலைமையுடன் தொடர்பு கிடைத்தது. சென்னை மாகாணத்திற்கு 1935ல் வந்தார். அங்கு காங்கிரஸ் கட்சியில் சோசலிஸ்ட்டுகள் தனி அணியாக செயல்பட்டு வந்;தனர்.
உலகத்தில் நடக்கும் அநீதிகளை கண்டு கோபப்பட்டு பொங்கி எழுவாயானால் நீயும் என் தோழன் என்று சேகுவேரா சொன்னது போல பி.சீனிவாசராவ் அநீதிகளுக்கு முடிவு கட்ட ஆண்டைகளுக்கு சம்மட்டி அடி கொடுக்க கிராமம் கிராமமாக சென்று விவசாயிகளை ஒன்று திரட்டி அதற்கான சங்கத்தையும் அமைத்தார். அவர்கள் வீட்டில் உண்டு, உறங்கி அதுவும் பகலில கூட்டம் போட்டால் பண்ணையாருக்கு தெரிந்து விடும் என்பதால் கூலி தொழிலாளர்களை இரவில் சென்று திரட்டி கூட்டம் போடுவார். அவர்களுக்குஒரு நம்பிக்கை வரும்படி பேசுவார். மக்கள் பி.எஸ்.ஆர். பக்கம் சாரை சாரையாக திரள ஆரம்பித்தனர். அப்போது பண்ணையார்களுக்கும் விவசாயிகளுக்கும் ஒரு ஒப்பந்தம் ஏற்படுகிறது.
1955 மன்னார்குடியில் 15 ஆயிரம் பேர் கொண்ட விவசாயிகள் மாநாட்டை நடத்தி காட்டினார். அதை கண்டு ஆண்டைகள் அரண்டு போயினர்.
ஆண்டைகளின் பிடியில் விவசாயிகள்:
கிழ தஞ்சையில் இன்று திருவாரூர், நாகப்பட்டினம் பகுதியில் சுமார் 13 லட்சம் ஏக்கர் விவசாயிகள் நிலத்தை விரல் விட்டு எண்ணக்கூடிய ஆண்டைகள் மட்டுமே கட்டி ஆண்டு வந்தனர். அப்போது விவாசயிகள், கூலி தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் இருந்தனர். விடியற்காலை 3 மணிக்கு வாங்கு ஊதப்படும். பின்பு நாலரை மணிக்கு ஏர் மாட்டை பூட்டிக் கொண்டு வயலில் உழுவதற்கு செல்ல வேண்டும். பின்பு 11 மணிக்கு கரை ஏறி பழைய கஞ்சியை குடித்து விட்டு மாட்டுக்கு தண்ணீர் காட்டி விட்டு பின்பு இரவு 8 மணி வரை வேலை செய்ய வேண்டும். பெண் தொழிலாளிகள் பொழுது விடியும் முன் நடவுக்கு வர வேண்டும். பின்பு பொழுது சாயும் போது கரை ஏற வேண்டும். இடையில் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க கூட போகக்கூடாது. அப்படி போனாலும், வேலைக்கு வரவில்லை என்றாலும், பண்ணையை எதிர்த்து கேள்வி கேட்டாலும் அதன் விளைவு வேறு மாதிரியாக இருக்கும்.
சாட்டை அடியும், சாணிப்பாலும்:
ஐந்து பிரி கொண்ட சாட்டையில் பிரியை விலக்கி விட்டு அதன் உள்பிரியில் கூர்மையான கூழாங்கற்களை சொருகி வைத்து ரத்தம் பீறிடும் வரை அடிப்பார்கள். அதற்கு வைத்தியமும் செய்ய முடியாத சூழல் மற்றும் பெரிய கூர்மையான மூங்கில் குழாயில் மாட்டின் சாணத்தை கரைத்து விவசாயிகள் வாயில் வைத்து குடிக்க சொல்லி ஊற்றுவார்கள். அதற்கு அடுத்து சுடுமணலில் நாள் முழுவதும் நிற்க வேண்டும்.
விவசாய கூலி தொழிலாளர்கள் பிள்ளைகள் கல்வி கற்க கூடாது. அவர்களின் குலத் தொழிலையே செய்ய வேண்டும். அவர்களுக்கு திருமணம் என்பது பண்ணையார் அனுமதியுடன் நடக்க வேண்டும். சில சமயங்களில் பண்ணையார்தான் முதல் இரவை முடிப்பார். இதுபோன்ற எண்ணற்ற கொடுமைகளை அனுபவித்து வந்தனர்.
ஒட்டு மொத்த நிலமும் ஒரு சில நபர்களிடம் மட்டுமே இருந்தது.
· வடபாதி மங்களம் தியாகராஜ முதலியார் அவர்களுக்கு 15 ஆயிரம் ஏக்கர் நஞ்சை நிலம்.
· குன்னியூர் சாம்பசிவ அய்யர் அவரது சகோதரர்களுக்கு 6000 ஏக்கர் நஞ்சை நிலம் 500 ஏக்கர் தோப்பு
· நெடும்பலம் சாமியப்ப முதலியார் 2500 ஏக்கர் நஞ்சை நிலம்
· வலிவலம் தேசிகர் அவர்களுக்கு 1500 ஏக்கர்
· முலங்குடி கோபாலகிருஷ்ண அய்யர் 2000 ஏக்கர் நஞ்சை வயல்கள் மற்றும் மடாதிபதிகள் கோவிலுக்கு சொந்தமான நிலங்கள் ஒட்டுமொத்த தஞ்சை விவசாயம் இவர்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தனர்.
இந்த நிலையில் தான் 1943ல் கிழ தஞ்சை மாவட்டத்தில் மன்னார்குடி அருகில் தென்பரை கிராமத்தில் முதல் கிசான் சபை(விவசாயிகள் சங்கம்) தொடங்கப்பட்டது.
முத்தரப்பு பேச்சு வார்த்தையில் அமைச்சர் பாஷ்யத்துடன் பி.எஸ்.ஆரிடம் நான் யார் தெரியுமா?
ரெவின்யூ மந்திரி நான் நினைத்தால் எட்டு மணிநேரத்தில் இங்கு போலிசாரை குவித்து உங்களையும், உங்கள் கூட்டத்தையும் ஒன்னும் இல்லாமல் ஆக்க முடியும், மிஸ்டர் பாஷ்யம் உங்களுக்கு எட்டுமணி நேரம், எனக்கு எட்டு நிமிடம் போதும், புரட்சி ஓங்குக என்று சொன்னால் இங்கு திரளும் எம் மக்களால் நீங்கள் சுற்றி வளைக்கப்படுவீர்கள் என்றதும், அமைச்சர் அடங்கி விவசாயிகளுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்தார்.
. சாட்டையால் அடிக்க கூடாது
. சாணிபால் கொடுக்க கூடாது
. முத்திரை மரக்காலால் நெல் அளக்க வேண்டும்
. வேலை செய்யும் பெண்களுக்கு 2 சின்னபடி நெல்லும்,
. ஆண்களுக்கு 3 சின்னபடி நெல்லும் தருவதாக ஒப்பு கொண்டனர்.
சாதிய பாகுபாடும், தேரோட்டம் நிறுத்தமும்:
திருத்துறைப்பூண்டி, பெரியநாயகி அம்மனுக்கு கொடி கட்டி விட்டால் பட்டியல் இன மக்கள் 15 நாட்கள் திருத்துறைப்பூண்டி நகரில் நுழைய முடியாது என்பது ஊர் வழக்கம். அப்போது பட்டியல் இனத்தை சேர்நத சீரங்கனும் அவரது மனைவியும் தெரியாமல் நகரில் நுழைந்து விட்டனர். அவரை பண்ணையார் ஆட்கள் கட்டி வைத்து காட்டுமிராண்டி தனமாக அடித்து உதைத்தனர்.
அதை கேள்விபட்ட பி.எஸ்.ஆர். 5000க்கும் மேற்பட்ட பட்டியல் இன மக்களை திரட்டி நகருக்குள் நுழைந்தார். தேர் நடுரோட்டில் நிறுத்தப்பட்டது. எல்லோருக்கும் பொதுவான கடவுளை தொழ உரிமை இல்லையா? என முழுங்கினார். வடம் பிடித்து தேர் இழுத்தவர்கள் ஓட்டம் பிடித்தனர். பின்பு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தடையை நீக்கினார் பி.எஸ்.ஆர்.
1952ல் இந்தியாவில் முதல் பொது தேர்தல் நடைபெற்றது. அதில் கிழ தஞ்சையில் மட்டும் தனித்து நின்று 19 தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 6 தொகுதிகளில் வென்றது. இந்த கட்டமைப்பை உருவாக்கிய பெருமைக்குரியவர் பி.எஸ்.ஆர்.
இன்று பட்டியல் இன மக்களுக்கு அவர் சமுதாயம் சார்ந்த தலைவர்களால்தான் போராட முடியும் என்ற நிலைப்பாட்டை சுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பே உடைத்துக் காட்டியவ பி.எஸ்.ஆர். வர்க்க போராட்டத்தால்தான் முடியும் என்ற நிலையை உருவாக்கிய மகத்தான மக்கள் தலைவர். இன்று நாம் அனுபவித்து வரும் பலன்கள் பி.எஸ்.ஆர். போன்ற போராளிகளின் முயற்சிகளில் விளைந்தது.
செப்டம்பர் 30, 1961
தோழர்: பி. சீனிவாசராவ்
61 வது நினைவு தினத்தில் சபதம் ஏற்போம்.
தொடர்புக்கு: 81448 09010

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button