வரலாற்றுப் புரட்டு வேலையில் காரக்பூர் ஐஐடி நிர்வாகம்!
கொல்கத்தா, டிச.30- இந்தியாவின் மூத்த இனம் ஆரிய இனம்; மூத்த மொழி சமஸ்கிருதம், இந்தியர்கள் என்றாலே அவர்கள் இந்துக்கள் என்று நிறுவ சங்-பரி வாரங்கள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றன. இந்த அடிப்படையி லேயே இந்தியாவின் வரலாற்றை யும் அவர்களின் மூதாதையர்கள் எழுதி வைத்திருந்தனர். ஆனால், கடந்த நூற்றாண்டில், மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா தொல்லியல் அகழாய்வுகள், அவற்றை பொய்யென்று ஆய்வுப் பூர்வமாக நிறுவின. இந்தியாவில் திராவிடர்கள், ஆரியர்கள் என 2 முக்கிய இனங்கள் வாழ்ந்துள்ள னர். இவர்களில் திராவிடர்கள் பூர்வ குடிகள். மத்திய ஆசியாவிலிருந்து நாடோடிகளாக கைபர், போலன் கணவாய் வழியாக இந்தியாவிற் குள் நுழைந்து, மெல்ல மெல்ல திரா விடர்களின் நாகரிகத்தை அழித்து நிலைகொண்டவர்களே ஆரியர்கள் என்று புதிய ஆய்வுகள் நிரூபித்தன. இதுதான் தற்போது ஒப்புக்கொள் ளப்பட்ட வரலாறாகவும், மாணவர் களுக்கான பாடமாகவும் உள்ளது. அதேபோல சிந்து சமவெளி நாக ரிகத்தில் கிடைத்த முத்திரையில் இருப்பது குதிரை என்று ஆரியத் துவ ஆதரவு வரலாற்று ஆய்வாளர் களால் கூறப்பட்டு வந்ததும், பொய் யென நிறுவப்பட்டு, முத்திரையில் இருப்பது காளை என்று நிரூபிக்கப் பட்டது.
ஆரியர்கள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்தவர்கள் என்ப தற்கான ஆதாரங்கள் இவ்வாறு தெள்ளத் தெளிவாக இருக்கும் நிலை யில்தான், மேற்குவங்க மாநிலத்தின் காரக்பூரிலுள்ள ஐஐடி (Indian Institute of Technology- IIT, Kharagpur) 2022-ஆம் ஆண்டுக்காக அச்சிட்டுள்ள புதிய காலண்டர் மூலம் புரட்டு வேலையில் இறங்கியுள்ளது. 2022-ஆம் ஆண்டுக்கான 12 மாதங்களுக்கும் 12 பட விளக்கத்து டன் ‘ஆரியர்கள் படையெடுத்து வந் தவர்கள் அல்ல!’ என்ற கருத்தைத் திணிக்க முயன்றுள்ளது. ‘இந்திய ஆன்மிக அறிவு முறை யில் அடிப்படை மீட்டெடுப்பு’, ‘பொய்யான ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை’, ‘சிந்து சமவெளி நாகரி கம் மறுவாசிப்பு’, ‘வேதங்கள் சொல் லும் ரகசியத்தை உணர்தல்’ உள் ளிட்ட பல தலைப்புகளையும், தங்க ளின் இந்த புரட்டு வேலைக்கு அளித்துள்ளது.
காரக்பூர் ஐஐடி-யின் திட்டம் மற்றும் கட்டடவியல் துறை மூத்த பேராசிரியரான ஜாய்சன் என்பவரின் மேற்பார்வையில் இந்த காலண்டர் தயாரிக்கப்பட்டு உள்ளது. ‘‘ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள் என்பது காலனி ஆதிக் கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சிக்காக ஆங்கிலேயர்களால் திணிக்கப்பட்ட கருத்து. இதற்கு அவர்கள், சமஸ் கிருதம் மற்றும் ஐரோப்பிய மொழி களுக்கு இடையே உள்ள ஒற்று மையை ஆதாரமாக்கினர். ஆரியர் களும், திராவிடர்களும் இந்தியா வின் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆன் மீக பிரிவினர். இதில் குரு பரம்பரை யை சேர்ந்த மூத்தவர்களான திரா விடர்களை அவர்களது சிஷ்யப் பரம்பரையாக வளர்ந்த ஆரியர்களு டன் பிரித்து பார்ப்பது தவறு’’ என்று ஜாய்சன் பேட்டி ஒன்றையும் தற் போது அளித்துள்ளார்.
அந்த வகையில், புத்தர், அர விந்தர், விவேகானந்தர் போன்ற ஆன்மீகத் தலைவர்களின் கருத்துக் களுடனான ஐஐடி-யின் இந்த காலண்டர் படங்கள் தற்போது சமூக வலைதளங்களிலும் பகிரப்பட்டு வரு கின்றன. இது சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. ஐஐடி-யின் இந்த புரட்டு முயற் சிக்கு, வரலாற்று ஆய்வாளர்கள் பல ரும் கண்டனங்களை தெரிவிக்க ஆரம்பித்துள்ளனர். வரலாறு என்பது ஆய்வின் மூலம் நிரூபிக்கப்பட வேண்டியதே தவிர, நாட்காட்டியின் மூலம் இல்லை என்று ‘ஆதி இந்தி யர்கள்’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் டோனி ஜோசப் தெரிவித்துள்ளார்.
கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்டக் காலத்தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த கால்நடை மேய்ப்பர்கள் இந் தியாவுக்குள் வந்ததை, பல்துறை ஆராய்ச்சிகளின் அடிப்படையை வைத்து நிரூபணம் செய்யப் பட்டுள்ளது. உதாரணமாக, ‘தெற்கு மற்றும் மத்திய ஆசியாவில் மக்கள் தொகை உருவாக்கம்’ (‘The Formation of Human Populations in South & Central Asia’) என்ற ஆய்வுக் கட்டுரையின் மூலம் தெரிந்து கொள் ளலாம். கி.மு. 3000-க்கு முந்தைய காலத் தில் ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து புறப்பட்ட வேளாண்குடியினர் ஐரோப்பாவில் குடியேறுகின்றனர். இதன் மூலம், இந்தோ ஐரோப்பிய மொழி அங்கு பரவியது. அதே போன்ற ஒரு குடியேற்றம்தான் தெற் காசியாவில் இந்தோ- ஐரோப்பிய மொழி காரணமாக அமைகிறது. மத் திய ஆசியா, ஈரான், ஆப்கானிஸ் தான், தெற்காசியாவில் வாழ்ந்த 837 பழங்குடிகளின் மரபணு அடிப்படை யில் இது நிரூபணம் செய்யப்பட்டது. சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வசித் தவர்களிடம் ஸ்டெப்பி புல்வெளி வேளாண்குடிகளின் மரபணு ஒத்துப் போகவில்லை. 2019-ஆம் ஆண்டில், ஹரப்பன் நகரின் ராக்கிகர்ஹி பகுதி யில் வசித்த பெண்ணின் மரபணு ஆய்வும்கூட இதனையேதான் உறுதி செய்தது.
எனவே, பின்னர் கி.மு. 2000க்கும் கி.மு. 1500க்கும் இடைப்பட்டக் காலத் தில் மத்திய ஆசிய ஸ்டெப்பிப் பகுதியிலிருந்து வந்த மேய்ப்பர்கள் இந்தியாவில் குடியேறினர் என் பதுதான் அறிவியல் தரும் உண்மை. ஆனால், நாட்காட்டியின் மூலம் வரலாற்றை ஐஐடி மறு மதிப்பீடு செய்திருப்பது வேடிக்கை யான செயல்” என்று டோனி ஜோசப் கூறியுள்ளார்.