வணிகர்களுக்கு ரூ.2 லட்சம் வரை அனுமதி தேவை: பேரமைப்பு கோரிக்கை
சென்னை, பிப். 4- நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறை அமலில் இருப்பதால் வணிகர்கள் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணை யத்துக்கு வணிகர் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமையில் தேர்தல் ஆணை யர் பழனிகுமாரை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவின் விவரம் வருமாறு:- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைமுறை அமலில் இருக்கும் காலத்தில் வணிகர்கள் அச்சுறுத்தப்படுவதும், அவதிக் குள்ளாவதும், பொருள் இழப் போடு, முதலீடு இழப்புகளையும், வணிகத்தில் தேக்கமும், மன அழுத்தமும் தொடர் கதையா கயே இன்றளவும் இருக்கிறது. வணிக சுதந்திரம் என்பது நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே நடைபெறுகின்றது. தேர்தல் நடைமுறை என்பது தற்காலிகமானது. அதை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் அதிகாரிகள் தங்களின் ஆளுமை க்குள், தேர்தல் நடைமுறை காலத்தை கொண்டுவரும் போது, ஏற்கனவே எடுக்கின்ற சட்ட நடைமுறைகளுக்கு முரணாக பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கின்றனர்.
வணிகத்தையும், வணிகர்களையும், பொது மக்க ளையும் பெரிதும் பாதிக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். வணிகர்கள் வங்கி ஆவணங் கள், அடையாள அட்டைகளை எடுத்துச் சென்றால் கூட, தேர்தல் அதிகாரிகள் வணிகர்களை மடக்கிப்பிடித்து பணத்தை பறி முதல் செய்கின்றனர்.
உதாரணம் வாணியம்பாடி. சாதாரண, நடுத்தர வணி கர்கள் காய்கறி வணிகர்கள், கால் நடையாக விற்கின்ற விவசாய வணிகர்கள் விற்பனை செய்யும் பொருள்கள் எந்த ரசீதுக்கோ, வரிகளுக்கோ உட்படாதது. எனவே, அதை எடுத்துச் செல்வத ற்கான உரிமையை இழப்பதோடு, தங்களின் மூலதனத்தையும் இழக்கும் நிலை ஏற்படுகின்றது. அதைப்போலவே, பொது மக்கள் தங்களின் சுய தேவை, கல்விச் செலவு, திருமணச் செலவு போன்ற அவசர, அத்தியாவசியச் செலவினங்களுக்குக்கூட பழைய நகைகளை எடுத்துச் சென்று விற்று, தேவையான பொருட்களை வாங்குவதற்கான நிலை மறுக்கப்படுகிறது. உதாரணமாக, ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வராமல், வணிகர் கள் ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வரை விற்று வரவு செய்து கொள்ள சட்டத்தில் இடம் இருக்கி றது.
இன்றைய பொருளாதாரச் சூழலில் குறைந்தது வணிக கொள்முதலுக்கு செல்பவர்கள் குறைந்தது ரொக்கம் ரூ.2 லட்சம் வரை எடுத்துச்செல்ல தேர்தல் ஆணையம் உடனடியாக அனுமதி அளித்து, வணிக உரிமைகளை காக்க வேண்டும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டு, இயல்பு நிலைக்கு திரும்பிக் கொண்டி ருக்கின்ற சூழலில், தேர்தல் ஆணையங்களின் கெடுபிடிகள் மீண்டும் வணிகர்களை கொரோனா காலத்திற்கே அழை த்துச் சென்றுவிடும் என்பதை மிகுந்த வருத்தத்துடன் பேர மைப்பு பதிவு செய்கின்றது. எனவே, மாநில தேர்தல் ஆணையர் பேரமைப்பு அளித்து ள்ள கோரிக்கையை உடனடி யாக பரிசீலித்து, அதிகார அத்து மீறல்களை தவிர்த்திடுமாறும், வணிகர்களும், பொதுமக்களும் இயல்பான நிலையை கையா ளுகின்ற வழிமுறைகளை அமல்ப டுத்த அதிகாரிகளுக்கு அறிவு றுத்த வேண்டும். வணிகர்கள் குறைந்தது ரூபாய் 2 லட்சம் வரை எடுத்துச்செல்ல அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.