இந்தியா

லட்சத்தீவில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாள் ரத்து!

கவரட்டி, டிச.21- முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் லட்சத்தீவுகளில் இதுவரை வெள்ளி, சனிக்கிழமைகள் வார விடுமுறை நாட்க ளாக இருந்து வந்த நிலையில், வெள் ளிக்கிழமை விடுமுறையை அந்த தீவு நிர்வாகம் ரத்து செய்துள்ளது. அதற் குப் பதிலாக ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை நாளாக மாற்றியுள்ளது. கேரளத்திற்கு அருகே அரபிக் கட லில் இருப்பதுதான் லட்சத்தீவு. பழங் குடிகள் நிறைந்த இந்தத் தீவில் பெரும் பாலும் மலையாளிகள்தான் வசித்து வருகின்றனர். மதத்தின் அடிப்படை யில் இஸ்லாமியர்களே அதிகம். இந்தத் தீவுக்கு ஐஏஎஸ் அதிகாரி களே நிர்வாகிகளாக நியமிக்கப்பட்டு வந்த நிலையில், மோடி தலைமையி லான பாஜக அரசு, திடீரென குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த முன்னாள் பாஜக அமைச்சரான பிரபுல் கோடா படேலை, நிர்வாகியாக நியமித்தது. அவரும் பதவியேற்ற உடனேயே தனக்கு வழங்கப்பட்ட (இஸ்லாமியர் களுக்கு எதிரான) வேலைகளை ஆரம் பித்தார்.

மதுபானங்களின் வாச னையே இல்லாமல் இருந்த லட்சத் தீவில் மதுபான விற்பனைக்கு படேல் அனுமதி அளித்தார். பள்ளிக் குழந்தை களுக்கான மதிய உணவில் இறைச்சி வழங்கத் தடை விதித்தார். கடற்கரை களிலிருந்து மீனவக் குடிசைகளை அகற்றி, ரிசார்ட் அமைப்பதற்கு அனு மதி அளித்தார். இது அங்கு பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்த நிலையில், படேலின் நடவடிக்கை கள் தற்காலிகமாக நிறுத்தி வைக் கப்பட்டன. இந்நிலையில்தான் தற்போது வார விடுமுறை நாளில் மாற்றம் செய்து, படேல் மீண்டும் தனது வேலையை ஆரம்பித்துள்ளார்.

முஸ்லிம்களுக்கு வெள்ளிக்கிழமை புனித நாள் என்ப தால் வெள்ளி, சனி அங்கு வார விடு முறையாக இருந்து வந்தது. ஆனால் தற்போது வெள்ளிக் கிழமை விடுமுறையை ரத்து செய்து, விடுமுறை நாளை ஞாயிற்றுக்கிழ மைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார். இது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பி யுள்ளது. “உள்ளூர் நிர்வாகத்தினரிடமும் கேட்கவில்லை. எம்பியான என்னை யும் கலந்து ஆலோசிக்கவில்லை. மக் களின் விருப்பத்திற்கும், தீர்ப்புக்கும் மாறான நடவடிக்கை இது!” என்று லட்சத்தீவுகள் எம்.பி. முகம்மது பைசல் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த முடிவைத் திரும்பப் பெறு மாறு லட்சத்தீவு மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் பிபி அப்பாஸூம், நிர்வாகி பிரபுல் கோடா படேலுக்கு கடிதம் எழுதியுள்ளார். மாணவர்கள், பெற்றோர்களின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் எடுக்கப்பட்ட முடிவை திரும்பப் பெற வேண் டும் என்று அவர் அதில் வலியுறுத்தி யுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button