ரயில்வே ஊழியர்களுக்கான காவி உடை, ருத்ராட்ச மாலை வாபஸ்?
புதுதில்லி, நவ. 24 – இந்திய ரயில்வேயில் ‘ராமாயண எக்ஸ்பிரஸ்’ என்ற புதிய ரயில் சேவை அறி முகப்படுத்தப்பட்டுள்ளது. ராமரின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 15 இடங்களுக்கு இந்த ரயில் செல்கிறது. 7,500 கி.மீ.க்கும் அதிகமான தூரத்தை கடக்கும் இந்த ரயில், அயோத்தி, பிரயாக்ராஜ், நந்திகிராம், ஜனக்பூர், சித்ர கூட், சீதாமர்ஹி, நாசிக், ஹம்பி மற்றும் இராமேஸ்வரம் போன்ற இடங்களுக்கு யாத்ரீகர்களை அழைத்துச் செல்லும். மத்தியப் பிரதேசம் உஜ்ஜைனி நகரில் அமைந்துள்ள சிவபெருமானின் புகழ் பெற்ற ஸ்ரீமஹாகாளேஷ்வர் கோயில், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்ஹஸ்த கும்பமேளாவை விமரிசையாக நடத்து கிறது. இந்த கும்பமேளாவை முன்னிட்டு நாட்டின் முதல் ராமாயண சர்க்யூட் ரயில் கடந்த நவம்பர் 7 அன்று தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் இருந்து 17 நாள் பய ணமாகப் புறப்பட்டது.
இந்நிலையில், இந்த ரயிலில் உணவு பரிமாறும் கேட்டரிங் ஊழியர்களுக்கு, ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழ கம் (ஐஆர்சிடிசி) அண்மையில் தனிச் சீருடை ஒன்றை அறிமுகப்படுத்தியது. அதில், கேட்டரிங் ஊழியர்களை, சாமியார் கள் போல காவி உடை, தலைப்பாகை, கழுத்தில் ருத்ராட்ச மாலை அணிய வைத்தது. ஆனால், இந்த காவிச் சீருடை, துறவி களை கொந்தளிக்கச் செய்து விட்டது. ரயில்வே பணியாளர்களின் காவிச் சீருடை தங்களை அவமானப்படுத்துவதாக உள் ளது என்று எதிர்ப்பு தெரிவித்த உஜ்ஜைனி அகடா பரிஷத்தின் முன்னாள் பொதுச் செயலாளர் அவதேஷ்புரி, ‘’ராமாயண எக்ஸ்பிரஸ் ரயிலில் காவி உடையணிந்து சிற்றுண்டி மற்றும் உணவு பரிமாறும் பணி யாளர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன் றிய ரயில்வே அமைச்சருக்கு இரண்டு நாட்களுக்கு முன் கடிதம் எழுதியுள்ளோம். ரயில்வே பணியாளர்கள் துறவிகள் போன்ற தலைக்கவசத்துடன் காவி உடை யை அணிவதும்,
‘ருத்ராட்ச’ (புனித விதை கள்) ‘மாலா’ (மாலைகள்) அணிவதும் இந்து மதத்தையும் அதன் துறவிகளையும் அவ மதிக்கும் செயலாகும். காவி உடை குறி யீட்டை மாற்றாவிட்டால், தில்லி சப்தர்ஜங் ரயில் நிலையத்தில் டிசம்பர் 12-ஆம் தேதி துறவிகள் ரயிலை நிறுத்துவார்கள்” என்று அறிவித்தார். இதையடுத்து, ‘’ரயில் கேட்டரிங்கில் உணவு பரிமாறும் ஊழியர்களுக்கான காவிச் சீருடையை வாபஸ் பெறுகிறோம். இதனால் ஏற்பட்ட சிரமங்களுக்கு வருந்து கிறோம்’’ என்று தெரிவித்துள்ள ஐஆர்சி டிசி, தலையில் அணியும் தலைப்பாகை பாரம்பரிய முறைப்படி மாற்றப்பட்டுள்ள தாகவும், ஆனால் கையில் அணியும் கையுறை மற்றும் முகக் கவசங்கள் மட்டும் காவி நிறத்தில் பயன்படுத்தப்படும் என்றும் பின்வாங்கியுள்ளது.