மோடி உள்ளிட்ட 64 பேரை விடுவித்ததற்கு எதிர்ப்பு குஜராத் வன்முறை தொடர்பான வழக்கு: தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
புதுதில்லி, டிச. 10 – குஜராத் சிறுபான்மை முஸ்லிம் களுக்கு எதிரான வன்முறை குற்றச் சாட்டிலிருந்து, அன்றைய முதல்வர் நரேந்திர மோடி உள்ளிட்ட 64 பேர் விடு விக்கப்பட்டதற்கு எதிராக தொடரப் பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குஜராத் வன்முறையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ஜாப்ரியின் மனைவி ஜாகியா ஜாப்ரி, சமூக செயற்பாட்டாளர் தீஸ்டா செதல்வாட் ஆகியோர் இந்த வழக்கை தொடர்ந்திருந்த நிலையில், நீதிபதிகள் ஏ.எம். கன்வில்கர், தினேஷ் மகேஸ்வரி, சி.டி. ரவிகுமார் ஆகி யோர் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்தது. அரசு தரப்பில் முகுல் ரோத்கி வாதிடுகையில், “விசாரணை நீதிமன்றம், குஜராத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்சநீதிமன்றம் வழிமொழியவேண்டும். இல்லா விட்டால் ஜாப்ரியின் மனுவுக்கு முடிவில்லாமல் போய்விடும். சில சமூக ஆர்வலர்கள் சில காரணங் களுக்காக மனு செய்வார்கள். அதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை” எனத் தெரிவித்தார்.
ஆனால், “சிலர் மீது சாயம் பூசி அவர் செய்த பணிகளை மறைக்க முயற்சிக்கக் கூடாது. நீதிபதிகளு க்குத் தெரியும்: கிரிமினல் சட்டப்படி, குற்றங்களைத்தான் பார்க்க வேண்டுமே தவிர, குற்றவாளிகளைக் கருத்தில் கொள்ளக் கூடாது. யாருமே வன்முறை செய்யவில்லை, யாரும் இல்லாமலேயே வன்முறை நடந்தது என்றால், எப்படி அது வழக் காக நீதிமன்றத்தின் முன்பு வந்தது? என்ற கேள்வி எழுகிறது. இதில் நீதி மன்றம் முடிவெடுக்க குறைந்த தரு ணங்கள் மட்டுமே உள்ளன. எனவே இந்த விசாரணைக்கு உரிய பொறுப் பாளர் யார் என்பதை நீதிமன்றம் அறி விக்க வேண்டும்” என்று கபில் சிபல் வாதங்களை எடுத்து வைத்தார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அடுத்தகட்ட விசாரணையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.