மோடி உருவ பொம்மையை எரித்து டிஆர்எஸ் கட்சியினர் போராட்டம்!
ஹைதராபாத், பிப்.10- நாடாளுமன்றத்தில் பட் ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி குடியரசுத் தலை வர் உரையுடன் தொடங்கி யது. இதற்கு நன்றி தெரி விக்கும் தீர்மானத்தின் மீது கடந்த சில நாட்களாக பிரதமர் மோடி மக்களவையிலும் மாநிலங்களவையிலும் உரை யாற்றி வருகிறார். தேசிய அளவில் கவனம் பெற்ற ராகுல் காந்தி ஆற்றிய உரையைக் குறிவைத்து காங்கிரசை கடுமையாக விமர்சித்து வரும் மோடி, செவ்வாயன்று ஆந்திரா – தெலுங்கானா பிரிப்புக்காக வும் காங்கிரசை விமர்சித்தார். “முழுக்க முழுக்க அரசியல் சுயலாபத்திற்காக காங்கிரஸ் இதைச் செய்ததால் இரு மாநி லங்களும் முறையாகப் பிரிக்கப்படவில்லை. இத னால், இப்போதும் ஆந்திரா – தெலுங்கானா மக்கள் இடையே கசப்பு நிலவி வரு கிறது” என்றார். இந்தக் கருத்து, தெலுங் கானா தனி மாநிலக் கோரிக் கைக்காக போராட்டம் நடத் திய கட்சிகளை கொச்சைப் படுத்துவதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி பிரதமர் மோடி மீது நாடா ளுமன்றத்தில் உரிமை மீறல் பிரச்சனை கொண்டுவந்தி ருப்பதுடன், அவரது பேச் சுக்கு எதிராக தெலுங்கானா மாநிலம் முழுவதும் போராட் டங்களில் இறங்கியுள்ளது. அந்த வகையில், வாரங் கல் பகுதியில், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர் மோடியின் உருவபொம்மை யை எரிக்கும் போராட்டத்தை நடத்திய போது, அங்கு காவித் துண்டு, பாஜக கொடியோடு வந்தவர்கள் டிஆர்எஸ் கட்சி யினருக்கு எதிராக ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று கோஷம் எழுப்பி தகராறில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஆவேசமடைந்த தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சியினர், பாஜகவினரை ஓட ஓட பிரம்பால் அடித்து விரட்டி யுள்ளனர்.