மோடியால் வியாபாரத்தில் நஷ்டம் பாஜகவைச் சேர்ந்த வியாபாரி தற்கொலை முயற்சி; மனைவி பலி!
லக்னோ, பிப்.10- பிரதமர் நரேந்திர மோடியின் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி அமலாக்கம் உள்ளிட்ட நட வடிக்கைகளால், சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் அழிந்து, கோடிக்கணக்கானோர் தங்களின் வாழ்க்கையை இழந்துள்ளனர். அவர்களில் பலர் தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர் என்பதற்கு என்சிஆர்பி-யின் தரவுகளே சாட்சியாக அமைந்துள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடியின் பொரு ளாதாரக் கொள்கைகளால் தனது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறி, ஷூ வியாபாரி ஒருவர் மனைவியுடன் விஷம் குடித்த சம்பவம் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் நகரை சேர்ந்தவர் ராஜீவ் தோமர் (40). இவரது மனைவி பூனம் (38). பாஜக உறுப்பினராக இருக்கிறார். ராஜீவ் தோமர் ஷூ கடை நடத்தி வந்த நிலையில், தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், இதில் கடந்த சில ஆண்டுகளாகவே மனம் உடைந்து காணப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் அவர் தனது முகநூல் பக்கத்தில் ‘லைவ் வீடியோ’ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், “எனக்கு பேசுவதற்கு சுதந்திரம் இருப்ப தாக நம்புகிறேன்…
நான் இறந்தால்… இதை பார்ப்பவர்கள் அதிகமாக பகிருங்கள். நான் இந்திய நாட்டுக்கு எதிரானவன் அல்ல. நாட்டுக்கு உண்மையாக இருப்பவன். பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒன்றைக் கூற விரும்புகிறேன். சிறு வியாபாரிகள், விவசாயிகளின் நலனை காக்கும் நபராக நீங்கள் இல்லை. உங்கள் கொள்கையை மாற்றிக் கொள்ளுங் கள்’’ என்று கூறி விட்டு, மனைவியுடன் சேர்ந்து விஷம் குடித்துள்ளார். இதனை நேரலையில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரி வித்துள்ளனர். போலீசார் விரைந்து வந்து இருவரையும் மீட்டு மருத்துவ மனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், பூனம் இறந்து போனார். ராஜீவ் தோமருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.