மேகதாது அணை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு
புதுதில்லி,பிப்.11- காவிரி நீர் மேலாண்மை ஆணை யத்தின் 15 ஆவது கூட்டத்தில் மேகதாது அணை பிரச்சனை குறித்து விவாதிக்க தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரி வித்துள்ளது. காவிரி நீர் பிரச்சனையில் உச்சநீதி மன்ற உத்தரவுப்படி, காவிரி மேலா ண்மை ஆணையம் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய 4 மாநிலங்களுக்கு இடையேயான நதி நீர் பிரச்சனையை தீர்ப்பதற்காக காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் கடந்த 2018 ஜூன் 1 அன்று அமைக்கப்பட்டது. இந்நிலையில் பிப்ரவரி 11 அன்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 15 ஆவது கூட்டம் தில்லியில் இருந்து காணொலி காட்சி மூலமாக ஆணை யத்தின் தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் தமிழக அரசின் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா தலைமையில் பங்கேற்றனர். காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் சுப்பிரமணியன், கேரள மாநில நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் பி.கே.ஜோஸ், கர்நாடக மாநில நீர்வளத்துறை தலைமை செயலாளர் ராஜேஷ்,புதுச்சேரி மாநில ஆணையர் மற்றும் செயலாளர் விக்ராந், ராஜா உள்ளிட்ட 4 மாநி லத்தை சேர்ந்த முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கை குறித்து விவாதிக்க நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்தது.