முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை? ஐ.எம்.எப். எச்சரிக்கை
வாஷிங்டன், ஜன.15- உலகப் பொருளாதார நிலைமை மிகவும் குழப்பமானதாக இருக்கிறது என்று ஐ.எம்.எப்.(சர்வதேச நிதியம்) எச்சரித்துள்ளது. வாஷிங்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் உலக வங்கி இது குறித்த ஆய்வினை மேற்கொண்டிருக் கிறது. தற்போது உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா பொருளாதா ரத்தின் மீதும் கடுமையான பாதிப்பை ஏற் படுத்தியிருக்கிறது. இதற்கு முன்பாக வரும் ஆண்டுகளுக்கு தெரிவித்திருந்த கணிப்பு களை மறு பரிசீலனை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது என்றும் உலக வங்கி கூறுகிறது. கொரோனாவை மீறி சீனா அடைந்துள்ள பொருளாதார வளர்ச்சி, உலக வளர்ச்சியை யும் தூக்கி நிறுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டில் சீனாவின் வளர்ச்சியும் வேக மிழக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஆண்டில் 8 விழுக்காடு வளர்ச்சியைக் கண்ட சீனப் பொருளாதாரம் 2022 ஆம் ஆண்டில் 5.1 விழுக்காடாக இருக்கும் என்றும், 5.6 விழுக்காடு வளர்ச்சியைக் கண்ட அமெ ரிக்கப் பொருளாதாரம், நடப்பாண்டில் 3.7 விழுக்காடாகக் குறையும் என்றும் ஐ.எம்.எப். கணித்துள்ளது. சீனாவின் வளர்ச்சி வேகமிழப்பதால், ஒட்டுமொத்த உலகப் பொருளாதார வளர்ச்சி யிலும் அதன் தாக்கம் இருக்கப் போகிறது. 2020 மற்றும் 2021 ஆகிய இரண்டு ஆண்டுக ளிலும் தனது வர்த்தக நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் ஏற்படாமல் பார்த்துக் கொண்ட சீனா, உலகம் சந்தித்து வரும் பிரச்ச னைகளுக்குப் பொருத்தமான ஏற்றுமதி, இறக்குமதியைத் தனது நடவடிக்கைகளாக மாற்றிக் கொண்டது. 2021 ஆம் ஆண்டில் 8 விழுக்காடு பொருளாதார வளர்ச்சியை சீனா இத்தகைய வழியில் சாதித்தது. கொரோனா, பணவீக்கம் மற்றும் இது வரை சந்தித்திராத பகுதிகளில் அரசு மேற் கொண்டு வரும் செலவினம் ஆகியவற்றைக் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது. என்கிறார் உலக வங்கிக்குழுமத்தின் தலைவ ரான டேவிட் மால்பாஸ். ஒருங்கிணைந்த செயல்பாடுகள் நாடுகளை பொருளாதார மந்தத்தில் இருந்து மீட்கும் என்பதால், பல்வேறு பகுதிகள் சார்ந்த வர்த்தக உடன்பாடுகள் தயாராகி வருகின்றன.