‘முகக்கவசம் அணியாதவர்களிடம் தயக்கமின்றி அபராதம் வசூல்’: மருத்துவத்துறை செயலர்
தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிக்க தயக்கம் காட்ட தேவையில்லை என மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை கடிதம் எழுதியுள்ளார்.
ஒமைக்ரான் வகை கரோனா தமிழகத்தில் வேகமாக பரவத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அமல்படுத்தியுள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு ஜெ.ராதாகிருஷ்ணன் எழுதிய கடிதத்தில்,
முகக்கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூல் செய்ய தயக்கம் காட்டத் தேவையில்லை. விழிப்புணர்வு ஏற்படுத்தவே அபராதம் வசூல் செய்யப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த வேண்டும்.
ஒமைக்ரான் பரவலை எதிர்கொள்ள போதிய மருத்துவ வசதிகளை அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மேற்கொள்ள வேண்டும்.
கரோனா சிறப்பு மையங்களை திறந்து தேவையான பணியாளர்களை நியமிக்க வேண்டும். மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி போடும் பணியை வேகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.